🍁 பாதகாதிபதி குரு & லக்ன குரு 🍁 #hazan
இரண்டு நாளைக்கு முன்பு ஒருவர் ( பலன் கேட்க தொடர்பு கொண்டவர்) , பலன் சொல்லும் போது புலம்பினார்...
கன்னி லக்னம் லக்ன குரு,
" ஐயா லக்னத்துல குரு அவரே பாதகாதிபதி, பாதகாதிபதியால நான் பயந்து போய் இருக்கேன் " அப்படி இப்படினு புலம்பினார்...
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
சில விஷயங்களை கேட்கிறேன், உங்களிடம் இருந்து இல்லை என்றுதான் பதில் வரும் என்று சொல்லி சிலவற்றை கேட்டேன்,
" இதுவரை உங்களை யாரேனும் நாலுக்கு பேருக்கு முன்னாடி அவமானபடுத்தி இருக்காங்களா..? அதனால மனசு பாதித்து இருக்கீங்களா" என்றேன்.
" இல்லைங்க ஒருநாளும் அப்படி நடக்கவில்லை " என்றார்.
" உங்க மனைவி என்றாவது உங்களை நீங்க இனிமே எனக்கு தேவையில்லை , எப்படியோ போங்கனு அவங்க அம்மா வீட்டுக்கு பெட்டிய எடுத்துட்டு போய் இருக்காங்களா..? என்றேன்.
" என் மனைவி என் மீது உயிரையே வைத்து இருக்காங்க, ஒருநாளும் அப்படி சண்டை போட்டது இல்லை, என் மேல தப்பே இருந்தாலும், அவங்க தான் இறங்கி வந்து பேசுவாங்க, இதுவரைக்கும் சண்டை போட்டு வீட்டை விட்டு போனது இல்லைங்க " என்றார். #padmahazan
"உங்கள் தாயார் வழி மேன்மை ஆதரவு நல்லா இருந்து இருக்கும், எத்தனை பிள்ளை இருந்தாலும் உங்கள் தாயார் உங்கள் மீது தனி அக்கறை கவனம் வைத்து வளர்த்து இருப்பாங்க, படிப்பிலும் நன்றாக இருந்து இருபீங்க, கடவுள் பக்தி அதிகமாக இருக்கும், கடவுளை வணங்காத நாள் என்ற ஒன்று உங்களுக்கு இல்லை " என்று சொன்னேன்.
"அத்தனையும் உண்மை , எப்படிங்க சொல்றீங்க..? " என்று கேட்டார்
" இவ்வளவு பலனையும் கொடுத்தது உங்கள் லக்னத்தில் இருக்கும் குரு பகவான் தான் " என்றேன்.
" லக்னத்தில் குரு திக் பலத்தோடு வலுபெற்று, லக்னத்தை வலுபடுத்தி உங்களது கௌரவம் அந்தஸ்து மரியாதையை வளர்ப்பார், அவமானம் வந்தால் ஏது கௌரவம் அந்தஸ்து அதனால் அவமானத்தை அடைய குரு விடமாட்டார்,
ஏழாமதிபதி குருவாகி லக்னத்தில் குரு இருந்தால் வாழ்க்கை துணை உங்களுக்கு வசியமாகிடுவாங்க அனுசரித்து போகும் துணை தரும், பிரிவு பிரச்சனை வராது, ஏழாமதிபதி ஏழாம் இடத்தை குருவாகி பார்ப்பதால் மண வாழ்வினில் பாதிப்பு தராது,
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
நாலாம் அதிபதி லக்னம் ஏறுவதால் தாயார் படிப்பு இதில் நல்ல பலன் இருக்கும். லக்ன குரு ஆவதால் ஆன்மீகம் வரும் " என்றேன். #padmahazan
" அப்ப பாதகாதிபதி ஐயா ..? " என்றார்.
"பாதகாதிபதி எப்போது ஆட்சி உச்சம் பெற்று லக்னாதிபதி பகை நீசம் ஆகி வலுஇழக்கும் போதுதான் பாதகாதிபதி கெடுபலனை தருவார், "
" உங்களுக்கு குரு பகை வீட்டில் கன்னியில் இருப்பதால் பாதகம் பெரிதாக தரமாட்டார், பயபட வேண்டும் அதற்கும் குரு தசா வர வேண்டும், உங்களுக்கு அதுவும் வரவில்லை " என்றேன்.
" பாதகாதிபதியை நினைத்து பயந்து விட்டேன் " என்றார்.
"நல்ல மனைவி, தாயார் ஆதரவு, நல்ல படிப்பு, ஆன்மீக ஈடுபாடு இவற்றை கொடுத்தது 4 மற்றும் 7ம் அதிபதி ஆகி லக்னத்தில் நின்ற குரு பகவான் தாங்க, பாதகாதிபதி கெடனும் அப்படினு கன்னி லக்னத்திற்கு ஐந்தில் நீசமாகி இருந்தால் முதல் மனைவி பிரிவு அல்லது நோயாளி மனைவி, வாரிசு தடை பிரச்சனை, படிப்பு பாதிப்பு முக்கியமாக பொருளாதார பிரச்சனை கொடுத்து இருப்பார்" என்றேன்
" வரும் வாரத்தில் எனது மனைவி மற்றும் மகள் ஜாதகத்தை அனுப்பி வைக்கிறேன் இதே போல விளக்கமாக பார்த்து சொல்லுங்க " என்று போனை வைத்தார் தெளிவான மனதோடு...
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment