ஜோதிட ரீதியான பல கட்டுரைகளை இங்கே உங்களுக்காக கொடுத்து உள்ளேன். அனைவரும் படித்து பயன் பெறுங்கள். திருமணம் வேலை தொழில் குழந்தை பாக்கியம் வாகன யோகம் வெளிநாட்டு வாழ்க்கை போன்ற உங்களது எதிர்கால பலன்களை அறிந்து கொள்ள 8300 - 620 - 851 என்ற What's App எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த பதிவை ஜோதிடம் அறிந்த உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு share செய்து மற்றவர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள்... பதிவை தொடர்ந்து படிக்கும் அனைவருக்கும் நன்றிகள்
Monday, October 24, 2022
வாகன யோகத்தை தரும் நீசபங்க ராஜயோக புதன் தசா
Sunday, October 23, 2022
சூரியன் சனி இணைவு சூரிய தசா சனி புத்தி / சனி தசா சூரிய புத்தி
Tuesday, October 4, 2022
மாற்றத்தை தரும் கேது
🌟 வாழ்வில் மாற்றத்தை தரும் கேது 🌟 #hazan
( உயர்நிலை ஜோதிட புரிதல் பெற முழு பதிவை படியுங்கள் )
கேது ஒரு மாறுபட்ட குணத்தை வெளிபடுத்தும் கிரகம், ஞான காரகன் என்பதால் ஒவ்வொரு முறையும் ஏதாவது புதிய புரிதலை அனைவருக்கும் கேது தருவார்.
ச்சீ... இந்த பழம் புளிக்கும் என்ற விதமான புரிதலை தருபவர் கேது.
ஒருவரது அதிகபட்சமாக ஆசைப்படும் வாழ்வின் அடைய விரும்பும் ஆசையை கூட கேது சில நொடிகளில் வெறுக்க வைத்து விடுவார்.
மாளிகை போன்ற வீடு வேண்டும் ஆசைபடும் நபரை கூட கேது பிடித்து விட்டால் வீடு என்ற ஒன்று இருந்தாலே போதும் அதை விட வேறேதும் ஆடம்பர மாளிகை தேவை கிடையாது என்ற ஆசைகள் அற்ற விதமாக மாற்றி விடுவார் கேது. #padmahazan
ஒன்று தொழிலாக இருக்கலாம், வேலையாக இருக்கலாம், பண சேர்க்கையாக இருக்கலாம், மண வாழ்க்கையாக இருக்கலாம், எப்போது எல்லாம் கேது வருகிறாரோ அப்போது எல்லாம் மாற்றத்தை தருவார்.
பதிவை சுருக்கமாக ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், எப்போது எல்லாம் ஒருவர் கேது ஆதிக்கத்தில் வருகிறாரோ அப்போது அந்த ஒருவர் மாற்றத்தை அடைகிறார்.
எப்போது எல்லாம் ஒருவர் கேது ஆதிக்கத்தில் வருவார்கள்..?
1). கேது தசா நடைபெறும் போது
2). கேது புத்தி நடைபெறும் போது
3). கேது அந்தரம் நடக்கும் போது
4). கோட்சார ரீதியாக கேது உங்கள் ராசியில் குறிப்பாக உங்கள் நட்சத்திரத்தை கடக்கும் போது
5). கோட்சார கேது உங்கள் ராசிக்கு எட்டில் போகும் போது
6). உங்கள் ராசி அல்லது லக்ன நாதனை கோட்சார கேது கடக்கும் போது
சிலர் வாலிப வயதில் கட்டுனா அந்த பொண்ணைதான் கட்டுவேன் என்று இருப்பாங்க, கட்டுனா அந்த பையனைத்தான் கட்டுவேன் இல்லனா கல்யாணமே வேண்டாம் என்று சொல்லும்படியாக இருப்பாங்க. #padmahazan
கேது ஆதிக்கத்தில் வரும் போது
குறிப்பிட்ட அந்த ஆணையோ பெண்ணையோ வேண்டாம் என்று கூறும் விதமான மாற்றத்தை கேது தருவார், அதுவும் எப்படி தருவார், இருவருக்கும் இடையே பிரச்சனை மனகுழப்பம் , வீட்டார் பிரச்சனை போன்ற காரணத்தால் தருவார்.
கேது முடிந்து சுக்ர தசாவோ புத்தியோ அந்தரமோ வர மாற்றத்தை ஏற்று கொண்டு சம்மந்தப்பட்ட பையன் அல்லது பெண் மீதான எண்ணத்தை மாற்றி கொண்டு மாற்றத்தை ஏற்று கொண்டு இணக்கமான விட்டு கொடுத்து போய் திருமணம் செய்வார்கள்.
அல்லது அவர்களே வேண்டாம் என்று விலகி போய் விடும் படியான மாற்றத்தை கேது தருவார். அது அவரவர்கள் ஜாதக நிலைப்படி அமையும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
கோடி ரூபாய் சம்பாதித்து சேர்த்து வைப்பேன் என்ற தொழில் அதிபரை கூட ஒருகட்டத்தில் கேது பிடித்தால் அதுவரை சேர்த்து வைத்த கோடிகளை ஏழை எளிய மக்களுக்கு தர்மமாக வழங்கும்படி கேது மாற்றுவார்.
முக்கிய பங்குசந்தை முதலீட்டாளர் வாரன் பப்பெர்ட் இதற்கு உதாரணமாக இருப்பார். தான் சேர்த்த கோடி கணக்கான பணத்தை உலகில் உள்ள ஏழை மாணவர்கள் படிப்பிற்கு பிரித்து கொடுக்கும் படியான அவரது முடிவும் கேது தரும் ஒரு விதமான சலிப்பே.
ராகு எப்போது எல்லாம் over duty பார்த்து தேவையான ஒன்றை நோக்கி ஓட வைக்கிறாரோ அதற்கு ஈடாக மறு எதிர்முனை கேது ராகுவிற்கு ஈணையான விரக்தியை தருவார்.
ஒருவருக்கு லக்னத்தில் ராகு இருக்க அவர் எப்போதும் தன் ஆளுமை கௌரவம் பிறர் தனக்கு தர வேண்டிய மரியாதை இவற்றிற்கு அதிகபடியான முன்னுரிமை கொடுத்து அதனை நோக்கி ஓடுவார். #padmahazan
அதற்கு எதிர்முனை கேது ஏழில் மணவாழ்க்கை மீதான வெறுப்பு, கணவன் மனைவி அன்னோன்ய தடை, சுக போக வெறுப்பு , நண்பர்களால் உண்டாகும் மன கசப்பை தருவார். முழுமையாக தடை செய்ய மாட்டார் பிரச்சனைகளோடு கேது கொடுப்பார்.
லக்ன ராகு எவ்வளவுக்கு எவ்வளவு லக்னத்தை வளர்க்க பார்க்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு கேது ஏழாம் வீட்டை சுருக்குவார். பாதிப்பார். ஒருகட்டத்தில் கேது தசா அல்லது புத்தி அந்தர காலத்தில் மண வாழ்க்கை மீதான ஆசை இழந்த மாற்றத்தை கேது தருவார்.
இன்னொரு உதாரணத்தையும் சொல்லலாம்,
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
எவர் ஒருவருக்கு பத்தில் ராகு உள்ளதோ அவருக்கு வருமானம் ஜீவனம் தொழில் பண வரவு மீதான அளவுகடந்த ஆசையும் தேடலும் அதை நோக்கிய ஆவலும் ராகு தருவார்.
அந்த ஜாதகர் தொழில் வருமானத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு ஆர்வத்தை கொண்டு தொழிலை வருமானத்தை பெருக்க முயலுகிறாரோ,
அவ்வளவுக்கு அவ்வளவு மறு முனை கேது தான் இருக்கும் நான்காம் வீட்டின் மீதான ஆசையை அந்த ஜாதகரை துறக்க வைப்பார். வீடு வாகனம் மீதான அக்கறை குறையும், தாயார் மீதான பாசம் குறையும் அல்லது தாயார் ஆதரவு தடைபடும் , அது சார்ந்த எண்ணத்தை கேது தடுப்பார். இங்கேயும் கேது சம்மந்தப்பட்ட தசாவோ புத்தியோ அந்தரமோ வர கேது நான்காம் இடம் சார்ந்த மாற்றத்தை தருவார்.
இதே போல 12 பாவகங்களுக்கும் கேது எது சார்ந்த மாற்றத்தை தருவார் என்பதை காணலாம்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
கேது தரும் மாற்றம் கர்மாவின் அடிப்படையிலானது... #padmahazan
இன்றைக்கு பலன் சொன்ன ஒரு மலேசியன் ஜாதகருக்கு ஆறில் கேது,
"வேலைக்கு போவீங்க ஆனால் அதில் ஒரு சுவாரஸ்யமே இல்லாமல் எதோ போகிறேன், வேலை பார்க்கிறேன், சம்பளம் வாங்குறேன் அப்படிதானே வேலைக்கு போகிறீங்க" என்றேன்
"மறுக்காமல் உடனே "ஆமாம் எப்படி சொல்றீங்க" என்றார்.
" ஆறில் கேது இருந்தால் வேலை சார்ந்தவை பிடிப்பு இருக்காது பற்று இருக்காது " என்றேன்.
" உண்மைதான் " என்றார்.
ராகு இருக்கும் வீட்டை பாவகத்தை நோக்கி நீங்கள் நகர்ந்தார், ஆசைபட்டால் , மறுமுனையில் கேது இருக்கும் வீடு பாவகம் உங்களை விட்டு விலகி அது நகர பார்க்கும், அந்த பாவக வெறுப்பை விரக்தியை உணர வைக்கும்
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
பாவக முனை பகுதி 1
Monday, October 3, 2022
பணம் பணம் பணம்
Saturday, October 1, 2022
1 மற்றும் 7 அதிபதிகள் இணைவு பலன்
🍁 1 & 7 அதிபதிகள் இணைவு 🍁 #hazan
ஜாதகரை குறிக்கும் லக்னாதிபதியும், கணவன் அல்லது மனைவியை குறிக்கும் ஏழாம் அதிபதியும் இணைவதால்
🌿12 லக்னங்களுக்கும் எத்தகைய பலனை தரும் என்று காணலாம்,
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
💥செவ்வாய் சுக்ரன் இணைவு 💥
🌟மேஷம் ,
🌟ரிஷபம் ,
🌟துலாம் ,
🌟விருச்சிக
லக்னக்காரர்களுக்கு செவ்வாய் சுக்ரன் சேர்க்கை பெற்று இருக்கும் போது இந்த கிரக இணைவு
🌈வேகம் துடிதுடிப்பு தைரியம் தரும் செவ்வாயும், காதல் காமம் ஆடம்பரம் தரும் சுக்ரனும் இணையும் போது
🌈கணவன் மனைவி இடையேயான புரிதலை அதிகபடுத்தும்,
🌈கணவன் மனைவி இடையே நீ பெருசா..? நான் பெருசா..? என்ற போட்டி குணத்தை அதிகபடுத்தும்,
🌈அதே சமயம் வாழ்க்கை துணையை விட்டு கொடுத்து போகும் குணத்தையும் ஜாதகரிடம் வெளிபடுத்தும்,
🌈காதல் காமம் சல்லாப ஆசைகள் கணவன் மனைவி இடையே ஒரு போல காணப்படும்,
🌈அதிகபடியான மோதலும் ( சில இடங்களில் 6 8 ல் இருந்து சனி பார்த்தால் அடிதடி கூட நடக்கும் ), வாக்குவாதமும் கொடுத்து ஊடலுக்கு பின்னால் தேடலையும் கொடுக்கும். #padmahazan
🌈கணவன் மனைவி இருவருமே மேஷம் ரிஷபம் துலாம் விருச்சிக லக்னத்தில் பிறந்து செவ்வாய் சுக்ரன் இணைவு பெற மண வாழ்க்கை நன்றாக அன்னோன்யமாக போகும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
💥குரு புதன் இணைவு 💥
🌟மிதுனம்,
🌟கன்னி ,
🌟தனுசு,
🌟மீன
லக்னகாரர்களுக்கு குரு புதன் சேர்க்கை.
🌈வழிகாட்டி கிரகமான குருவோ, புத்திசாலி கிரகமான புதனோ லக்னாதிபதி அல்லது ஏழாம் அதிபதியாகி இணையும் போது,
🌈கணவன் மனைவி இருவரும் நல்ல பொருளாதார மேன்மை அடைவார்கள்,
🌈மேம்பட்ட நல்ல தன பண சேர்க்கை, படிப்பறிவு, கௌரவமான வாழ்க்கை நோக்கி கணவரும் மனைவியும் வாழ்வில் பயணிப்பார்கள்.
🌈நான் ஒரு 40000 சம்பாதிக்கிறேன் , நீ ஒரு 50000 சம்பாதித்து கொள் மாதிரியான நல்ல பண புழக்கம் அமையும். #padmahazan
🌈இங்கேயும் கொஞ்சம் ஊடல் வரும், எப்படி வரும்..? பணமா..? அறிவா..? என்ற கோணத்தில் இருவருக்கும் மோதல் உண்டாகும், அடிதடி இருக்காது, மரியாதையான வாக்கு வாதம் போகும்.
( ⛔மிக முக்கியமாக குரு புதன் இணைவில் குருவோ புதனோ ஏழில் ஆட்சி பிற கூடாது, கேந்திராதிபத்திய தோசமாகி மொத்தமும் இல்லாமல் போகும். ⛔)
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
💥 சனி சந்திரன் இணைவு 💥
🌟கடகம்
🌟மகரம்
லக்னக்காரர்களுக்கு சனி சந்திரன் சேர்க்கை
🌈இணைய கூடாத சேர்க்கை, மேலே சொன்ன சுக்ரன் செவ்வாய் இணைவு, குரு புதன் இணைவை போல சிறப்பான விஷேச பலனை இங்கே காண முடியாது, #padmahazan
🌈கணவன் மனைவி இடையே புரிதல் இல்லாத தேவையற்ற மன குழப்பம்,
🌈சந்தேக குணம்,
🌈உடல் பலவீனமான துணை,
🌈கணவன் முன்னேற்றத்திற்கு மனைவி தடையாக இருப்பது, 🌈மனைவி முன்னேற்றத்திற்கு கணவன் தடையாக இருப்பது,
🌈தேவையற்ற கணவன் மனைவி இடையேயான ஈகோ பிரச்சனை, தாழ்வு மனபான்மை காரணமாக பாதிப்புகளை தரும்,
🌟🌟வளர்பிறை சந்திரனாகவோ பௌர்ணமி சந்திரனாக இருக்கும் போது பாதிப்பு வெகுவாக குறையும் , தேய்பிறை அல்லது அமாவசை சந்திரனாக இருக்கும் போது பாதிப்பு கூடுதலாக இருக்கும். 🌟🌟
⛔கடக லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு சனி சந்திரன் இணைவு இல்லாமல் இருப்பதே நல்லது, அப்படி இருந்தால் கூட குரு பார்வை பெறுவது சிறப்பு. ⛔
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
💥சூரியன் சனி சேர்க்கை 💥
🌟சிம்மம்
🌟கும்பம் லக்னத்திற்கு சூரியன் சனி சேர்க்கை
🌈மேலே சொன்ன சந்திரன் சனி இணைவை போன்றே விஷேச மற்ற இணைவு தான் இந்த சூரியன் சனி இணைவு சிம்ம லக்னத்திற்கு நடப்பது,
🌈அதிகார வர்க்கம் அரச கிரகமான சூரியனும், அடிமை வேலை உழைத்து முன்னேறும் கிரகமான சனியும் இணைவது சிறப்பு கிடையாது...
🌈கணவரோ மனைவியோ ஒருவர் அதிகாரம் செய்வார், மற்ற ஒருவர் அடங்கி போக வேண்டி இருக்கும்,
🌈நீ பெருசா நான் பெருசா என்ற ஈகோ வெளிபடும், இதில் சூரியன் வலுத்தவர் அதிகாரம் செய்வார், சனி வலுத்தவர் வாழ்க்கை துணை செய்த பழைய தவறை குத்தி காட்டி குத்தி காட்டி மீண்டும் பிரச்சனையை பூதாகரமாக வெடிக்க செய்வார்.
🌈கணவரது முன்னேற்றம் , மனைவி குணத்தால் தடைபடும், மனைவி மன நிம்மதி கணவர் செயலால் பாதிக்கும்.
🌈சிம்ம கும்ப லக்ன கார்களுக்கு சூரிய சனி இணைவை பெற கூடாது, தனித்து இருப்பது கூட நல்ல மணவாழ்க்கை தரும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
முடிவாக...
🦋ஒன்று ஏழாம் அதிபதிகள் இணைவது மேஷம் ரிஷபம் மிதுனம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மீனம் லக்னங்களுக்கு நன்மை.
🦋ஒன்று ஏழாம் அதிபதிகள் இணைவு கடகம் சிம்மம் மகரம் கும்ப லக்னத்திற்கு சிறப்பு தராது.
⛔⛔⛔மேலும் இந்த கிரக இணைவில் எந்த கிரகமும் பகை நீசம் அஸ்தங்கம் கிரகணம் பெறவும் கூடாது. ⛔⛔⛔
இன்னும் எழுத நிறைய இந்த இணைவை பற்றி உள்ளது, பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன்.
மேலும் பல ஜோதிட பதிவுகளை படிக்க Jyeshta Padma Hazan எனது iD யை follow பண்ணுங்க. #padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?
🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...
-
🍁 விதியை மாற்ற முடியுமா..? 🍁 #hazan பலருக்கு இந்த பதிவு கசக்கும், கொஞ்சம் சர்க்கரையை வாயில் போட்டு கொண்டு படியுங்கள். விதியை யாராலும் மா...
-
🍁 8ல் குரு மறையலாமா..? பணத்தை தருவாரா..? ஆண் வாரிசை கெடுப்பாரா..? 🍁 #hazan கௌரவம் , அந்தஸ்து , சமுதாயத்தில் மதிப்பாக வைத்து இருப்பது, த...
-
❄🌟🍁கன்னி ராசி அல்லது லக்னம் பொதுவான குணம் 🍁🌟❄ #hazan 💥12 ராசிகளுக்கும் தனித்தனியே ஒவ்வொரு குறிப்பிட்ட குணம் கொண்டு இருப்பார்கள். 💥ஒ...