🍁 பணம் பணம் பணம் 🍁 #hazan
ஜோதிடத்தில் ஆர்வமுள்ள அனைவரையும் கேட்டாலும் சொல்வார்கள்,
" தன காரகன் யார்..? " என்றால்
" குரு பகவான் " என்று.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
கிரகத்தை குறிப்பிட்டு விட்டோம், பணத்தை குறிக்கும் 12 பாவகங்களை காண்போம், உங்களுக்கு புதிதாக இருக்கலாம் சிலவற்றை படிக்கும் போது, #padmahazan
1 மிடம் நிரந்தரமான பணம், செல்வ செழிப்பை காட்டும்,
2 மிடம் வீட்டு அலமாரியில் வைக்கும் சேமிப்பு பணம், வங்கி தற்காலிக சேமிப்பு பணம்
3 மிடம் புகழால் வரும் வெகுமதி பணம்,
4 மிடம் தாயார் வாகனம் வீடு வாடகையில் ஒத்திகையில் வரும் பணம்,
5 மிடம் அதிர்ஷ்டத்தால் வருகின்ற பணம்,
6 மிடம் வேலையில் வாங்கும் சம்பளம், வட்டிக்கு வாங்கும் பணம், அபகரித்த பிறர் பணம்
7மிடம் வரதட்சணை பணம், தொழில் கூட்டாளி பங்கு பணம்
8மிடம் உயில் பணம், பங்கு வர்த்தக பணம், இன்ஷூரன்ஸ் பணம், அந்நிய செலாவாணி பணம், வங்கி நிரந்தர சேமிப்பு பணம்
9மிடம் தந்தை வழி பணம், அறவழி தொண்டு பணியில் புழங்கும் பணம்,
10மிடம் சொந்த தொழிலில் புழங்கும் பணம், #padmahazan
11 மிடம் மேலே சொன்ன ஒட்டு மொத்த பணத்தில் வரும் லாபம்
12 மிடம் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும் பணம், பங்கு சந்தை முதலீட்டு பணம், மீட்டர் வட்டியில் இழக்கும் ஜாதகரது பணம். செலவு பணம்.
மேலே சொன்ன பாவகங்களோடு தொடர்பு கொள்ளும் கிரக காரக ஆதிபத்தியம் பொறுத்து அந்தந்த தசா புத்தி கால கட்டத்தில் பணம் புழக்கம் வரவு செலவு நடக்கும்.
No comments:
Post a Comment