🍁 பாவக முனை 🍁 #hazan
( உயர்நிலை ஜோதிட புரிதல் பெற விரும்புபவர்கள் படிக்க வேண்டிய பதிவு)
முகநூலில் ஒரு அடிப்படை கடந்த ஜோதிட ஆர்வலர்களது மனதில் இருப்பது, " அதென்ன பாவக முனை..? ".
எனக்கு தெரிந்த பாவக முனை சார்ந்த ஜோதிடத்தை சுருக்கமாக உங்களுக்கு எழுதுகிறேன்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
1). ஒருவரது லக்னம் நிற்கும் டிகிரியே அவரது லக்ன முனை ஆகும். உதாரணமாக மேஷ லக்னத்தில் ஒருவர் பிறந்து இருக்க, அவரது லக்ன புள்ளி அஸ்வினி 1ம் பாதம் பெற்று 2° டிகிரியில் லக்ன புள்ளி அமைய அதிலிருந்து ரிஷபம் 2° டிகிரி வரை உள்ள 30° யான பாவகமே அவரது லக்ன பாவகம்.
இங்கே லக்ன புள்ளி 2° யில் உள்ளது என்றால் அந்த ஜாதகத்தில் கேது இருக்கும் பாவகம் பொறுத்து அந்த ஜாதகரின் குணம் செயல் தேடல் அமையும். #padmahazan
2). லக்ன ஆரம்ப முனை மேஷத்தில் 2 ° டிகிரியில் உள்ளது, எனில் மேஷத்தில் லக்னாதிபதியான செவ்வாய் 4° டிகிரியில் இருந்தால்,
ஆட்சி பெற்ற செவ்வாயோடு லக்னம் 2° இடைவெளியில் அமைவதால் ஜாதகர் கடுமையான கோபக்காரராக இருப்பார். கடுமையான கோவம் என்றால் கையில் கிடைப்பதை எடுத்து அடிக்கும் அளவிற்கு இருப்பார்.
அதே லக்ன புள்ளி 2° இல் இருக்க செவ்வாய் 25 ° டிகிரியில் இருக்க, லக்ன ஆரம்ப முனையும், லக்னாதிபதி செவ்வாயும் 23° டிகிரி விலகி இருக்கும், அப்போது ஜாதகர் கோவக்காரராக இருப்பார், கடுமையாக பிறரை தாக்கும் அளவிற்கு இருக்க மாட்டார். அளவோடு கோபம் பிறரை திட்டும் அளவோடு இருக்கும்.
இதை சுருக்கமாக சொல்லலாம், மேஷ லகனத்திற்கு லக்ன புள்ளிக்கு அருகில் ஆட்சி பெற்ற செவ்வாய் எவ்வளவுக்கு எவ்வளவு நெருக்கமாக வருகிறரோ அவ்வளவுக்கு அவ்வளவு ஜாதகரது ஆக்ரோசம் அதிகபடியாக இருக்கும்,
எவ்வளவுக்கு எவ்வளவு ஆட்சி பெற்ற செவ்வாய் லக்ன ஆரம்ப முனையை விலகி இருக்காரோ அவ்வளவுக்கு அவ்வளவு கோபமும் அவசர தனமும் குறையும்.
2). ரிஷப லக்னத்தில் ஒருவர் பிறந்து இருக்கிறார்,
லக்னத்தில் ஆட்சி பெற்ற சுக்ரன் 2° , ராகு 28° இருக்கிறார்கள்.
லக்ன ஆரம்ப முனை 1° முதல் 10° குள் இருந்தால் லக்னாதிபதி சுபருக்கு அருகில் லக்னாதிபதி இருப்பதால்,
ஜாதகரது வாழ்க்கை தெளிவு, முன்னேற்றம், வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறுதல் போன்றவை இருக்கும், லக்ன ராகுவின் அசுப பலன் ஜாதகரை பாதிக்காது. நல்ல வாழ்க்கை நன்றாகவே அமையும் #padmahazan
பாவ கிரகமான ராகு லக்னத்தில் இருப்பதால் உண்டாகும் பாதிப்பை விட லக்னாதிபதி சுக்ரன் லக்ன ஆரம்ப முனையோடு நெருங்கி இருப்பதால் நற்பலனை அனுபவிப்பார் ஜாதகர்.
லக்ன ஆரம்ப முனை ரிஷபத்தில் 12° முதல் 20° வரை இருந்தால் தசா புத்தி ஏற்ப முன்னேற்றம் நன்றாக இருக்கும், 1 to 10 டிகிரிகுள் அமைந்த அளவிற்கு சிறப்பு இல்லை என்றாலும் பரவாயில்லை வாழ்க்கை என்று சொல்லலாம்.
லக்ன ஆரம்ப முனை ரிஷபத்தில் உள்ள ராகுவை நெருங்குகிறது என்றால் 21° முதல் 29 ° வரை இருந்தால்,
லக்னாதிபதி ஆட்சி பெற்றதற்கு இணையான யோக பலனை ஜாதகர் அனுபவிக்க இயலாது, காரணம் லக்ன ஆரம்ப முனை மீது ராகு இருப்பதால்,
ஜாதகர் தெளிவின்றி இருப்பார், மாயாஜாலத்தில் மிதப்பார், நடைமுறையில் அவரது எண்ணங்கள் செயல்களும் செல்லுபடி ஆகாது, எண்ணங்களை செயல்களாக மாற்ற முடியாது காரணம் லக்னாதிபதி ஆட்சி பெற்றாலும் லக்ன ஆரம்ப முனை ராகுவோடு கலந்து இருள் மூழ்குவதால் வாழ்வில் போராட்டங்களையும் வாய்ப்புகளை தவறவிட்டும் வாழ வேண்டி இருக்கும்.
ஒரே ஜாதகத்தை கொண்ட ஒரு வேறு நபர்களது வாழ்க்கை முற்றிலும் மாறுபட்ட பண புழக்கம் அந்தஸ்து போன்றவை மாற காரணம் இந்த பாவக முனைதான். #padmahazan
ஒருவருக்கு கோடியில் கடன் வருவதற்கும் ஆயிரங்களில் கடன் வருவதற்கும் உள்ள வேறுபாடு தருவது ஆறாம் பாவக முனையோடு தொடர்பு பெற்ற கிரகம்தான் அதன் வலுதான்.
தன பாவகங்களோடு பாவக முனை அந்த அதிபதி நிலை, பார்க்கும் கிரக வலு பார்வை கோணம் ஏற்ப 12 பாவக முனை பலனை காணலாம்.
இதே போல 12 பாவகங்களுக்கும் கிரகம் மற்றும் பாவக முனையை பயன்படுத்தி பலனை துல்லியமாக காணலாம்
மேலே சொன்னவை எத்தனை பேருக்கு புரிய போகிறது என்று தெரியவில்லை புரிந்தவர்கள் அடுத்த பதிவை எழுதலாமா? வேண்டாமா..? என்று சொல்லுங்க.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment