Monday, October 24, 2022

வாகன யோகத்தை தரும் நீசபங்க ராஜயோக புதன் தசா

🍁 வாகன யோகத்தை கொடுத்த நீசபங்க ராஜயோக தசா 🍁 #hazan 

(ஜோதிட உயர்நிலை புரிதலை பெற விருப்புவோர் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு )

🌟ஜாதகத்தில் எத்தகைய பெரிய யோகம் இருந்தாலும் அதை முழுமையாக அனுபவிக்க அந்த யோகத்தை தர வேண்டிய கிரக தசா வர வேண்டும். தசா வராத வரை அந்த யோகத்தை முழுமையாக அந்த ஜாதகரால் அனுபவிக்க முடியாது. 

🌟கீழே கொடுக்கபட்டுள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள். 


🌟ஜாதகர் மிதுன லக்னத்தில் பிறந்துள்ளார், கும்ப ராசி, பூரட்டாதி 1ம் பாதம். 

🌟" என்னங்க 2018 வரை வாழ்வில் படாத கஷ்டம் பட்டு இருபீங்க , 2019 ஆரம்பித்தது முதலே நன்றாக இருந்து கொண்டு இருக்கீங்க சரிதானே..? "  என்றேன்.

ஜாதகர் சொன்னது , 

" ஆமாங்க கடுமையான பொருளாதார பிரச்சனை வேலை கிடையாது , தொழில் கிடையாது, கடுமையான சோதனையாக வாழ்க்கை இருந்தது தற்போது 3 வருடங்களாக நன்றாக உள்ளேன் "  என்றார். #padmahazan 

" சொந்த தொழிலில் வாகன விரும்பியாக வாகனம் சம்மந்தப்பட்ட தொழில் பண்ண எண்ணம் உள்ளதா..? என்றேன்.

ஆமாங்க , நான் வாகனம் சார்ந்த தொழில் நடத்தி வருகிறேன் என்றார். 

💥💥💥 அவயோக குரு & சனி தசா பலன் 💥💥💥

🌟முதலில் அவர் பிறந்தது முதலே 35 வயது வரை கஷ்டபட காரணம் என்ன..?  என்று காண்போம்.

🌟இவரது லக்னாதிபதியான புதன் இங்கே முழுமையாக நீசம் பெற்று உச்ச சுக்ரனோடு ஒரே டிகிரி இணைவில் 7° மீனத்தில் உள்ளார். இது முழுமையாக நீசபங்க ராஜயோகம். 

🌟ஒரு நீசக்கிரகம்  ஒரு உச்சனோடு இணையும் போது நீசபங்க ராஜயோகத்தை பெற்றுவிடும் , அதுவும் இணைந்த உச்சன் இயற்கை சுபராக இருந்தால் சுப பலனை மிகுதியாக அந்த நீச கிரகம் தன் தசாவில் தரும். 

🌟இவரது லக்னாதிபதி நீசமாகி பின் நீசபங்க ராஜயோக பெறுவதாலேயே ஒரு குறைந்தபட்ச minimum garentee வாழ்வில் நல்ல நிலைக்கு வந்துவிடுவார் என்று உறுதியாக தெரிகிறது. 

🌟பொதுவாக லக்னாதிபதி நீசம் பெற்றாலே வாழ்வின் பிற்பகுதியில் 30 வயதிற்கு மேல் நடக்க கூடிய தசா ஏற்ப ஏற்றம் நிச்சயமாக இருக்கும். 

🌟இங்கே லக்னாதிபதியான புதன் நீசபங்கராஜயோகம் பெற்று எந்த வித பாவ கிரக பார்வை இணைவு இன்றி நன்றாக உள்ளார். #padmahazan 

🌟கூடுதலாக நீச புதன் வக்ரமும் பெற்று மறைமுகமாக உச்ச பலத்தை அடைந்து நவாம்சத்தில் தனது சுப சுய வர்க்கத்தில் கன்னி வீட்டில் உள்ளார். 

🌟இவருக்கு பிறந்தது முதலே நடைபெற்றது பாதகாதிபதியான குரு தசா, குரு இந்த லக்னத்திற்கு ஆகாத கடன் நோய் எதிரியை தரும் செவ்வாயின் நான்காம் பார்வையிலும், தேய்பிறை பாவரான சந்திரன் இணைவிலும் கெட்டு சுப பலனை தர இயலாத நிலையில் உள்ளார். 

🌟அதற்கு அடுத்ததாக 1999 முதல் 2018 வரையான சனி தசா சுய சாரத்தில், அஷ்டம இடத்தை தனது மூன்றாம் பார்வையாக பார்த்து, 8ம் இடத்தோடு தொடர்பு கொண்டு , லக்னத்திற்கு ஆகாத கடன் நோய் எதிரி தரும் செவ்வாயின் இணைவில் பாவியரோடு இணைந்து சுப பலனை தர இயலாத நிலையில் உள்ளார். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

35 வயது வரை கஷ்டபட நிலையில்...

💥💥💥 நீசபங்க ராஜயோக புதன் தசா 💥💥💥

" கடைசியாதான் வந்தாரு விநாயக் மகாதேவ்... " 

என்பதை போல நீசபங்க ராஜயோக தசாவை பெற்ற புதன் தசா 2019 முதல் வந்து மிகப்பெரிய வாழ்வில் மாற்றத்தை கொடுத்துள்ளது. 

🌟நீசபங்க ராஜயோக புதன் தனது நேர் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்வை செய்கிறார், 

🌟மறுபக்கம் அவரே லக்னாதிபதியும் கூட...

🌟சுய புத்தியிலேயே ஜாதகருக்கு இரண்டு கனரக ஊர்தியை load ஏற்றி செல்லும் truck களை வாங்கும் அளவிற்கு ஏற்றத்தை கொடுத்துள்ளது. 

🌿🌿🌿எப்போது ஒரு கிரகம் எந்த வித பாவ கிரக தொடர்பும் இன்றி முழுக்க முழுக்க சுப அமைப்போடு தசா நடத்துகிறதோ , அந்த கிரகம் நின்ற பாவகம் லக்ன கேந்திர கோணமாக வரும் போது அந்த கிரக தசா வின் சுய புத்தி முதலே தனது பலனை கண்டிப்பாக தரும், 🌿🌿🌿 #padmahazan 

🌟லக்னாதிபதியும் அவரே சுக ஸ்தான அதிபதியும் அவரே புதன்தான்.

🌟நிற்கும் பாவகம் ஜீவன ஸ்தானம்...

🌟நான்காம் பாவக பலனாக சொந்த வாகனங்களை கொடுத்து, 

🌟பத்தாமிட பலனாக சொந்த தொழிலை கொடுத்து 

🌟இவற்றால் லக்னாதிபதி என்னும் கௌரவம் அந்தஸ்து போன்றவற்றை கொடுத்துள்ளார் நீசபங்க ராஜயோக புதன் தசாவில்...

🌟புதன் சனி சாரத்தில்... 

🌟இவருக்கு அடுத்தடுத்து வர போகும் தசாக்களும் உச்ச சுக்ரன் வீட்டில் உள்ள கேது தசா, 

🌟அதிர்ஷ்ட யோகத்தை கேது தரும் நிலையில் உள்ளார். 

🌟அதற்கு அடுத்தாக உச்ச சுக்ரனோ பத்தாம் இடத்தில் இருக்கும் சுப தசா. 

🌿🌿🌿எப்போது மிதுன லக்னத்திற்கு சுக்ரன் இணைவு அல்லது சுக்ரன் வீடுகளில் நின்ற தசா பெரிய கெடுபலனை தராது. 🌿🌿🌿

🌈🌈🌈🌈🌈சரி இன்னொரு முடிஞ்சியையும் அவிழ்த்து விட்டு பதிவை நிறைவு செய்வோம்... 🌈🌈🌈🌈🌈 #padmahazan 

🌼🌼எப்படி இவர் load ஏற்றி செல்லும் truck வாங்க வேண்டும்..? 🌼🌼

🌟காரணம் இவரது சுகாதிபதியும் வாகன அதிபதியுமான புதனும் சுக்ரனும் சனி சாரம் பெற்று , 

🌟அந்த சனி செவ்வாயோடு இணைந்து உள்ளார், 

🌟ராசிக்கு பத்தாம் இடமும் சனி செவ்வாய் இணைவில் உள்ளது.

🌟சனி செவ்வாய் தொடர்பு பெற்றாலே கட்டிடம் , சிமெண்ட், M sand, இருப்பு ஏற்றி செல்லும் வாகனம் மீதான ஈடுபாட்டை கொடுக்கும். 

மேலே சொன்ன அத்தகைய பலனும் சம்மந்தப்பட்ட புதன் தசா வந்ததால் தான் ஜாதகருக்கு நடந்தது, தசா வராத வரை அந்த யோகம் பெரிய அளவில் நடக்காது. 

பதிவை சுருக்கமாக எழுத வேண்டும் என்று இத்துடன் முடிக்கிறேன்.

ஜாதக பலனறிய..

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...