Saturday, October 1, 2022

1 மற்றும் 7 அதிபதிகள் இணைவு பலன்

🍁 1 & 7 அதிபதிகள் இணைவு 🍁 #hazan

ஜாதகரை குறிக்கும் லக்னாதிபதியும், கணவன் அல்லது மனைவியை குறிக்கும் ஏழாம் அதிபதியும் இணைவதால்

🌿12 லக்னங்களுக்கும் எத்தகைய பலனை தரும் என்று காணலாம்,

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

💥செவ்வாய் சுக்ரன் இணைவு 💥

🌟மேஷம் ,
🌟ரிஷபம் ,
🌟துலாம் ,
🌟விருச்சிக

லக்னக்காரர்களுக்கு செவ்வாய் சுக்ரன் சேர்க்கை பெற்று இருக்கும் போது இந்த கிரக இணைவு

🌈வேகம் துடிதுடிப்பு தைரியம் தரும் செவ்வாயும், காதல் காமம் ஆடம்பரம் தரும் சுக்ரனும் இணையும் போது

🌈கணவன் மனைவி இடையேயான புரிதலை அதிகபடுத்தும்,

🌈கணவன் மனைவி இடையே நீ பெருசா..? நான் பெருசா..? என்ற போட்டி குணத்தை அதிகபடுத்தும், 

🌈அதே சமயம் வாழ்க்கை துணையை விட்டு கொடுத்து போகும் குணத்தையும் ஜாதகரிடம் வெளிபடுத்தும்,

🌈காதல் காமம் சல்லாப ஆசைகள் கணவன் மனைவி இடையே ஒரு போல காணப்படும்,

🌈அதிகபடியான மோதலும் ( சில இடங்களில் 6 8 ல் இருந்து சனி பார்த்தால் அடிதடி கூட நடக்கும் ), வாக்குவாதமும் கொடுத்து ஊடலுக்கு பின்னால் தேடலையும் கொடுக்கும். #padmahazan

🌈கணவன் மனைவி இருவருமே மேஷம் ரிஷபம் துலாம் விருச்சிக லக்னத்தில் பிறந்து செவ்வாய் சுக்ரன் இணைவு பெற மண வாழ்க்கை நன்றாக அன்னோன்யமாக போகும்.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

💥குரு புதன் இணைவு 💥

🌟மிதுனம்,
🌟கன்னி ,
🌟தனுசு,
🌟மீன

லக்னகாரர்களுக்கு குரு புதன் சேர்க்கை.

🌈வழிகாட்டி கிரகமான குருவோ, புத்திசாலி கிரகமான புதனோ லக்னாதிபதி அல்லது ஏழாம் அதிபதியாகி இணையும் போது,

🌈கணவன் மனைவி இருவரும் நல்ல பொருளாதார மேன்மை அடைவார்கள்,

🌈மேம்பட்ட நல்ல தன பண சேர்க்கை, படிப்பறிவு, கௌரவமான வாழ்க்கை நோக்கி கணவரும் மனைவியும் வாழ்வில் பயணிப்பார்கள்.

🌈நான் ஒரு 40000 சம்பாதிக்கிறேன் , நீ ஒரு 50000 சம்பாதித்து கொள் மாதிரியான நல்ல பண புழக்கம் அமையும். #padmahazan

🌈இங்கேயும் கொஞ்சம் ஊடல் வரும், எப்படி வரும்..? பணமா..? அறிவா..? என்ற கோணத்தில் இருவருக்கும் மோதல் உண்டாகும், அடிதடி இருக்காது, மரியாதையான வாக்கு வாதம் போகும்.

( ⛔மிக முக்கியமாக குரு புதன் இணைவில் குருவோ புதனோ ஏழில் ஆட்சி பிற கூடாது, கேந்திராதிபத்திய தோசமாகி மொத்தமும் இல்லாமல் போகும். ⛔)

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

💥 சனி சந்திரன் இணைவு 💥

🌟கடகம்
🌟மகரம்

லக்னக்காரர்களுக்கு  சனி சந்திரன் சேர்க்கை

🌈இணைய கூடாத சேர்க்கை, மேலே சொன்ன சுக்ரன் செவ்வாய் இணைவு, குரு புதன் இணைவை போல சிறப்பான விஷேச பலனை இங்கே காண முடியாது, #padmahazan

🌈கணவன் மனைவி இடையே புரிதல் இல்லாத தேவையற்ற மன குழப்பம்,

🌈சந்தேக குணம்,

🌈உடல் பலவீனமான துணை,

🌈கணவன் முன்னேற்றத்திற்கு மனைவி தடையாக இருப்பது, 🌈மனைவி முன்னேற்றத்திற்கு கணவன் தடையாக இருப்பது,

🌈தேவையற்ற கணவன் மனைவி இடையேயான ஈகோ பிரச்சனை, தாழ்வு மனபான்மை காரணமாக பாதிப்புகளை தரும்,

🌟🌟வளர்பிறை சந்திரனாகவோ பௌர்ணமி சந்திரனாக இருக்கும் போது பாதிப்பு வெகுவாக குறையும் , தேய்பிறை அல்லது அமாவசை சந்திரனாக இருக்கும் போது பாதிப்பு கூடுதலாக இருக்கும். 🌟🌟

⛔கடக லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு சனி சந்திரன் இணைவு இல்லாமல் இருப்பதே நல்லது, அப்படி இருந்தால் கூட குரு பார்வை பெறுவது சிறப்பு. ⛔

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

💥சூரியன் சனி சேர்க்கை 💥

🌟சிம்மம்
🌟கும்பம் லக்னத்திற்கு சூரியன் சனி சேர்க்கை

🌈மேலே சொன்ன சந்திரன் சனி இணைவை போன்றே விஷேச மற்ற இணைவு தான் இந்த சூரியன் சனி இணைவு சிம்ம லக்னத்திற்கு நடப்பது,

🌈அதிகார வர்க்கம் அரச கிரகமான சூரியனும், அடிமை வேலை உழைத்து முன்னேறும் கிரகமான சனியும் இணைவது சிறப்பு கிடையாது...

🌈கணவரோ மனைவியோ ஒருவர் அதிகாரம் செய்வார், மற்ற ஒருவர் அடங்கி போக வேண்டி இருக்கும்,

🌈நீ பெருசா நான் பெருசா என்ற ஈகோ வெளிபடும், இதில் சூரியன் வலுத்தவர் அதிகாரம் செய்வார், சனி வலுத்தவர் வாழ்க்கை துணை செய்த பழைய தவறை குத்தி காட்டி குத்தி காட்டி மீண்டும் பிரச்சனையை பூதாகரமாக வெடிக்க செய்வார்.

🌈கணவரது முன்னேற்றம் , மனைவி குணத்தால் தடைபடும், மனைவி மன நிம்மதி கணவர் செயலால் பாதிக்கும்.

🌈சிம்ம கும்ப லக்ன கார்களுக்கு சூரிய சனி இணைவை பெற கூடாது, தனித்து இருப்பது கூட நல்ல மணவாழ்க்கை தரும்.

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851

முடிவாக...

🦋ஒன்று ஏழாம் அதிபதிகள் இணைவது மேஷம் ரிஷபம் மிதுனம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மீனம் லக்னங்களுக்கு நன்மை.

🦋ஒன்று ஏழாம் அதிபதிகள் இணைவு கடகம் சிம்மம் மகரம் கும்ப லக்னத்திற்கு சிறப்பு தராது.

⛔⛔⛔மேலும் இந்த கிரக இணைவில் எந்த கிரகமும் பகை நீசம் அஸ்தங்கம் கிரகணம் பெறவும் கூடாது. ⛔⛔⛔

இன்னும் எழுத நிறைய இந்த இணைவை பற்றி உள்ளது, பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன்.

மேலும் பல ஜோதிட பதிவுகளை படிக்க Jyeshta Padma Hazan எனது iD யை follow பண்ணுங்க. #padmahazan

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 


No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...