Friday, February 25, 2022

சனி செவ்வாய் சேர்க்கை.. சத்யதேவ் IPS vs விக்டர்...?

 🍁 சனி மற்றும் செவ் சேர்க்கை பலன்கள் 🍁 #hazan 


செவ்வாய் முழுமையான மூர்க்கதனம் கொண்ட பயபடாத நேராக மார்பில் குத்தும் குத்து சண்டை வீரர். என்னை அறிந்தால் படத்தில் வரும் சத்யதேவ் IPS போல குணத்தை கொண்டவர் செவ்வாய்.


சனி வீரமற்ற,பயந்த,நேரடியாக கோவத்தை காட்ட முடியாமல் இவனை எங்க அடித்தால் எப்படி விழுவான்..? என்று பின்னால் நின்று முதுகில் குத்தும் குணத்தை கொண்டவர். அதே என்னை அறிந்தால் படத்தில் வரும் விக்டர் கதாபாத்திர குணத்தை கொண்டவர் சனி.


சத்யதேவ் போலிஸீன் மனைவியை கொல்வோம், மகளை கடத்துவோம் அந்த சத்யதேவ் அப்படியாச்சும் பயபடட்டும் என்று நேராக மோத முடியாமல் தவிப்பவர் சனி.


இப்படியான மாறுபட்ட குணத்தை கொண்ட செவ்வாயும் சனியும் ஒரு சேர பார்த்து கொள்வது இணைந்து கொள்வது என்பது, சத்யதேவ் அப்படிங்கிற போலீஸ் மற்றும் விக்டர் அப்படிங்கிற கடத்தல் காரனும் நேருக்கு நேரா பார்த்து கொள்வது அல்லது பக்கத்து பக்கத்துல நிக்க வைச்சா என்ன ஆகும...? 


1). அவனுங்ககுள்ளேயே அடிச்சிபாங்க, 2). ஒரு மாதிரி சமரசமாகி மற்றவர்களை போட்டு அடிப்பார்கள்.


பொதுவாக சனி செவ்வாய் இருவரும் இணைந்து நேருக்கு நேரா பார்த்து கொள்ளும் போது பிறக்கும் பிறப்பிற்கு அதாவது ஒருவரது ஜாதகத்தில் இருக்கும் போது...


விபத்து கண்டம் சகோதர விரையம் சகோதர வழி இழப்பு சகோதரனே விரோதியாவது நில பிரச்சனை நிலம் சார்ந்த வழக்கு மணவாழ்க்கை பிரச்சனை தீராத வியாதியால் உண்டாகும் வலி வேதனை அறுவை சிகிச்சை எதிரிகளால் உண்டாகும் அடிதடி கை கால் இழப்பு போன்ற ஆகாத பலன்களை ஜாதகர் சந்திப்பார். பிற கிரகங்கள் மற்றும் ஜாதகத்தில் இவர்கள் தொடர்பு பெறும் பாவகம் பொறுத்து இதில் எது நடக்கும் என்று சொல்லலாம்.


பொதுவான உலகிற்கு எண்ணெய் உற்பத்தி இடங்களில் விபத்து, தீ வெடிப்பு, தீ சார்ந்த பெரும் விபத்து, பெரும் எரிமலை வெடிப்பு, சுரங்க பாதிப்பு, இயற்கை சீற்றம், இரயில் விபத்து, நாடுகளுக்கு இடையே எல்லை பதற்றம் அல்லது போர் போன்றவை நடக்கும். 


லக்னத்தோடு ஓரு சேர சனி செவ் இணைவு அல்லது பார்வை பெற்று இருப்பவர்கள் எப்போதும் கலகங்களை ஆரம்பித்து வைப்பவர்கள், கலக பிரியர்கள். 


ஆஞ்சநேயர் வழிபாடு, நரசிம்மர் வழிபாடு, முருக வழிபாடு இவற்றில் இருந்து ஒருவரை காக்கும். 


#padmahazan #செவ்வாய் #சனி


PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY whats app 8300 620 851



பஞ்சமஹா புருஷ யோகங்கள்

 🍁 பஞ்சமஹா புருஷ யோகம் 🍁 #hazan 


லக்ன கேந்திரத்தில் 1 4 7 10 ல் பின்வரும் கிரகங்கள் ஆட்சி அல்லது உச்சம் பெறுவது பஞ்சமகா புருஷ யோகமாகும். அவை 


குரு எனில் ஹம்ச யோகம்.

செவ் எனில் ருசக யோகம்.

சுக் எனில் மாளவியா யோகம்.

புத எனில் பத்ர யோகம்.

சனி எனில் சச யோகம். 


இந்த யோகத்தினை பெறுபவர்கள் அந்த கிரகத்தின் ஆதிக்கத்தில் வாழ்வில் முன்னேற்றம் பெறுவார்கள்.


குரு சுக்ரன் புதன் 4 7 10 ல் ஆட்சி உச்சம் பெறுவதை விட 1 5 9 ல் ஆட்சி உச்சம் பெறுவது சிறப்பு. 6 8 12ல் இருப்பது யோக பலனை குறைத்து தருவார்கள்.


சனி மற்றும் செவ்வாய் திக் பலம் பெறாமல் ஆட்சி உச்சமாக 4 7 10 ல் இருப்பது நல்லது. இவர்கள் முக்கியமாக 1 5 9 ல் ஆட்சியோ உச்சமோ ஆகவே கூடாது.


இந்த யோகம் எல்லாம் இருக்கு ஆனால் நான் முன்னேறவில்லை என்று ஒரு ஜாதகத்தை நீங்கள் காட்டினால் அங்கே லக்னாதிபதி கெட்டு வலு இழந்து இருப்பார்.


இந்த பஞ்சமஹா புருஷ யோகத்தில் 3 யோகங்கள் இருந்து லக்னாதிபதி வலுத்தாலே அந்த பிறப்பு நன்றாக வாழும்.


#padmahazan



விதியை மாற்ற முடியுமா...?

🍁 விதியை மாற்ற முடியுமா..? 🍁 #hazan

பலருக்கு இந்த பதிவு கசக்கும், கொஞ்சம் சர்க்கரையை வாயில் போட்டு கொண்டு படியுங்கள்.

விதியை யாராலும் மாற்ற முடியாது, விதிக்கபட்டது நடந்தே தீரும். கடவுளே ஆனாலும் விதியை மாற்ற முடியாது. கடவுளுக்கு உலக மக்கள் கோடி கணக்கான மக்களின் குறைகளை கேட்டு, குறை தீர்ப்பு முகாம்களை நடத்துவது இல்லை.

அத்தனை மக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்வதுதான் கடவுளின் வேலையாக இருந்தால் பின் கர்மா எதற்கு..?

தாய் தந்தை சொல்வதை கேட்காமல் அவர்களுக்கு உயிரோடு இருக்கும் போது செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் இருப்பது,

கணவனையோ மனைவியையோ போட்டு படாய்படுத்துவோம், நமது ஆசைகளை அவர்கள் மீது திணித்து துணையை கஷ்டபடுத்துவோம், உன்னிடம் அது இல்லை இது இல்லை என்று பெரிய பூதாகரத்தை குடும்பத்தில் கொண்டு வருவது,

குழந்தைகளை பெற்று அதற்கு ஒழுக்காக ஒரு வாழ்வை ஏற்படுத்தி தருவது கிடையாமல், அவர்கள் மீதும் தங்களது ஆசையை திணிப்பது,

தொழில் வருமானம் வேலை என்று முன்னேற பலரது காலை வாரிவிடுவது,

அடுத்தவர் பொருளுக்கு ஆசைபட்டு அபகரிப்பது,

நம்புபவரை விட்டுவிட்டு போவது, இன்னும் கொலை கொள்ளை களவு என்று பலவற்றை செய்து,

இதெல்லாம் நமக்கு பதில் வினையாக நடக்கும் போது, நியூட்டன் விதிதான் ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு.

நீங்கள் செய்தது மீண்டும் உங்களுக்கு நடக்கும் போது அது அப்போதுதான் மிகப்பெரிய துக்கமாக துயரமாக தெரியும்.

கடவுளிடம் 30 ரூபாய்க்கு விளக்கு ஏற்றி, 300 ரூபாய்க்கு அர்ச்சனை பண்ணி எதை செய்தாலும்...

கடவுள் சிரித்து கொண்டே பார்ப்பார், நீங்களா ஆடாத ஆட்டம் போடுறீங்க, இப்ப படாத பாடு படும் போது என் ஞாபகம் வருது, 30 ரூபாய்க்கு விளக்கை ஏற்றி விட்டால் செய்த பாவம் எல்லாம் அப்படியே போய்விடுமா..? " என்று கடவுள் சிரிப்பார்.

செய்த பாவத்தை அனுபவித்து கழிப்பதுதான் இந்த பிறப்பின் நோக்கமே. மற்றவை எல்லாமே நம் மனதை நாமே ஏமாற்றும் வேலைதான்.

திருமணமே ஆகாமல் இறப்பவர்கள், திருமணம் ஆனாலும் குழந்தை இல்லாமல் இறப்பவர்கள் சிலர் 20 வருடமாக எந்த சாமியும் இறங்கி வந்து என் வேண்டுதலை செய்யவில்லை என்றால் தவறு கடவுளிடம் இல்லை, நம்மிடம் உள்ளது.

85 வயதில் இறக்க வேண்டும் என்பவர் 20 வருடமாக தினமும் கோவில் போய் கடவுளை பார்த்தாலும் போய் சேர வேண்டிய நாளில் இறந்துதான் ஆக வேண்டும். ச்ச... தினமும் நம்மை பார்ப்பவர் இவர், அதனால் இன்னும் ஒரு 10 வருடம் extend பண்ணுவோம்னு கடவுள் மாற்றமாட்டார்.

உங்களது வாழ்வை நீங்கள்தான் தீரமாணித்து கொள்கிறீர்கள், கடவுள் எல்லாம் யாருக்கும் வாழ்வை எழுதுவது இல்லை,

சஞ்சீத கர்மா, ஆகாமிய கர்மா, பிராப்த கர்மா மூன்று மட்டுமே உங்களது வாழ்வை நிர்ணயிக்கிறது. அந்த மூன்றுமே உங்களது ஆசை எண்ணம் செயல்பாட்டாலேயே அமைகிறது.

உலக மக்களின் குறைகளை கஷ்டங்களை கேட்டு அதை மாற்றி அமைப்பது கடவுளின் வேலை கிடையாது. நாம் ஆடும் ஆட்டத்திற்கு நாம்தான் அனுபவித்து போக வேண்டும்.

கடவுளின் வேலை எதுதான் என்றால் பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், கருட புராணம், மற்றும் பையிள், குரான் போற்ற நூல்களின் வழியாக நீங்கள் இப்படிதான் வாழ வேண்டும் என்று அவர்கள் சொல்லி  சென்றதுதான்.

நல்லதை பண்ணுங்க நல்லதே நடக்கும்.
குழந்தை இல்லை என்று பல கோவில்களுக்கு போகும் முன்னர் ஒரு முறை அனாதை ஆஸ்ரமங்களிலோ ஆதரவற்ற குழந்தை காப்பகத்திலோ அவர்களுக்கு தேவைபட்ட துணி, பொருள், படிப்பு செலவு, சாப்பாட்டு செலவை நீங்கள் உங்களால் முடித்த அளவை அவர்களுக்கு கொடுத்தாலே, கோவிலுக்கு போன புண்ணியத்தை விட அதிகமாக உங்களுக்கு கிடைக்கும்.

ஆதரவில்லாத 4 குழந்தை என்றைக்கு எனக்கு சாப்பாடு கொடுத்தவர்களுக்கு நன்றி என்று கடவுளிடம் வேண்டும் போது தானாக உங்களுக்கு வாரிசு கிடைக்கும்.

#padmahazan



Tuesday, February 22, 2022

அடிமைபடுத்தும் ஆறாமிட கிரக பலன்

 🍁 6ல் நின்ற கிரக பலன் 🍁 #hazan 


ஜோதிடத்தில் ஜாதகருக்கு ஆகாத ஒரு பாவகம் இந்த 6ம் இடம். 


அடிமை ஸ்தானம் ஆறாம் இடம். 


ஒருவரை அடிமைப்படுத்தி வாழ வைப்பதும், பிறருக்கு அடி பணிய வைத்து, ஏதோ ஒரு நிர்பந்தத்தின் காரணமாக ஓடுங்கி இருக்க வைக்கும் பாவகம் இந்த ஆறாம் பாவகம். 



ஒரு கம்பெனியில் காலை 9 மணி்க்கு உள்ளே சென்று 1 மணிக்கு சாப்பிட்டு மாலை 5 மணிக்கு கிளம்பும் அந்த விதிமுறைகளை பின்பற்றி நடக்கும் வேலையை தரும் பாவகம், manager க்கு அடங்கி நடக்க வைக்கும் பாவகம், மேனேஜராக இருந்தால் அங்கே இருக்கும் project டை முடிக்க முடிக்க சொல்ல வேண்டும் என்ற சுதந்திரமற்ற நிலையை தரும் பாவகம், 


பங்காளிகளை குறிக்கும் பாவகம், அவர்கள் வழி சண்டைகளை அடிதடிகளை குறிக்கும் பாவகம். 


லக்னம் என்னும் ஜாதகனின் இயல்பு குணததை முடக்கி ஒரு காட்டுபாடுக்குள் வைக்கும் இந்த ஆறாம் பாவகம். #padmahazan 


ஆறில் நின்ற கிரகங்கள் ஜாதகனை அடிமைபடுத்தும். எப்படி பார்ப்போம்... 


6ல் சூரியன் எனில் தந்தைக்கு அல்லது மூத்த மகனுக்கு பயந்து நடுங்கி ஒடுங்கி இருக்கும் சூழல் இருக்கும். தந்தை சொல்வதை மறுக்க முடியாமல் செயல்பட வேண்டிய சூழல் தரும். அரசு ஊழியராக மேல் அதிகாரிகளுக்கு கீழ் கட்டுபட்டு நடக்க வைக்கும். சிலநிலைகளில் அரசுக்கும் உங்களுக்கு எதிரான வழக்குகளை சந்திக்க வேண்டி இருக்கும். 



6ல் சந்திரன் எனில் தாயாருக்கு நீங்கள் அடிமை, வயதில் மூத்த மதிக்கதக்க தாயாரை போன்ற பெண்கள் உங்களை அதிகாரபடுத்துவார்கள். 


6ல் செவ்வாய் எனில் சகோதரனுக்கு நீங்கள் அடிமை, நிலம் சார்ந்த விஷயத்தை மனதில் வைத்து கொண்டு நீங்களே நிலம் சார்ந்த விஷயத்தில் அடிமையாகிவிடுவீர்கள். அதிகமாக நிலம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும் அடிமைபடுத்தும் ஜாதகனை. 


6ல் புதன் எனில் நண்பர்கள் தாய்மாமன் மைத்துனன் போன்றவர்களைக்கு அடிமையாகிவிடுவீர்கள். இவர்கள் சொன்னால் மறுத்து பேசாமல் சொல்வதை கேட்பீர்கள். படிப்பு அறிவு சார்ந்த இடங்களில் அடிமையாகிவிடுவார். 


6ல் சுக்ரன் எனில் மனைவி  எதிர்பாலின நட்பு பெண்களுக்கு ஜாதகர் அடிமைபடுவார், பெண்கள் சொல்வதை கேட்டு நடப்பது இவர்களது குணமாகி போகும். சுக்ரன் ஜாதகனை ஆடம்பரம் வீடு வண்டி சார்த்த அடிமைபடுத்தும். 


6ல் குரு எனில் பெற்ற ஆண் பிள்ளைகள், ஆசிரியர்கள், குருமார்கள், பணம் தனம் கௌரவம் சாஸ்திரம் சம்பிரதாயம் போன்றவற்றிற்கு அடியைமாகிவிடுவார். #padmahazan 


6ல் சனி எனில் உத்தியோகம் உழைப்பு குடிபழக்கம் சார்ந்த விஷயங்களில் ஜாதகர் அடிமையாகிவிடுவார் 


6ல் கேது எனில் ஆன்மீக நாட்டத்தில் , கடவுள் பக்தி, மூதாதையர்கள், புராண இதிகாசங்கள் இவர்களது அடிமையாக்கி ஜாதகனை அழகு பார்க்கும் கேது. 


6ல் ராகு எனில் பேராசை, எதிலும் திருப்தியற்ற வேண்டும் வேண்டும் என்ற மோகம் ஜாதகனை வாட்டும். 


பொதுவாக ஆறில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. ஆறில் கூடும் கிரகங்கள் இவை எல்லாம் கொடுத்தாலும் அவற்றால் ஜாதகர் நன்மை பெற முடியாமல் தவிக்கவிடுவார்கள். 


6ல் சூரியன் தந்தைக்கு நீங்கள் அடிமையாகி தந்தைக்கு உதவினாலும் தந்தை உங்களுக்கு எதிராக செயல்படுவார், உங்களது மீதான அக்கறை இல்லாமல் இருக்கும். அதான் ஆறாமிடம். 


மேலே சொன்ன பாவகத்தோடு காரக ஆதிபத்தியத்தை கலந்து பலனை துல்லியமாக காணலாம். 


மேலும் சில வேறு கிரக சேர்க்கை அமைப்பு காரணமாக பலனில் சிறு சிறு மாற்றமும் இருக்கும். 


#padmahazan 




Monday, February 21, 2022

கோட்சாரத்தில் அள்ளி தருவதும் கில்லி தருவதுமான அஷ்டவர்க்க முறை

 

🍁 கோட்சாரத்தில் அள்ளி தருவதும் கில்லி தருவதுமான அஷ்டவர்க்க முறை 🍁 #hazan

அஷ்டவர்க்கம் என்பது ராகு கேது தவிர்த்த பிற ஒளிகிரகங்கள் மற்றும் பஞ்சபூத கிரகங்களான சூரியன் முதல் சனி வரையான கிரகங்கள் ராசி கட்டத்தில் அவர் இருக்கும் ராசிகளில் அந்தந்த கிரகங்கள் பெற்ற மொத்த பரல்களை 12 ராசிகளில் பங்கிட்டு கொள்வதே அஷ்டவர்க்கம் முறை.

என் பார்வையில் அஷ்டவர்க்கம் முறை என்பது முழுக்க முழுக்க கோட்சார பலனிகே. #padmahazan

12 ராசிகட்டத்தில் எந்தெந்த ராசிகளில் 28ற்கும் அதிகமாக பரல்களை பெற்றுள்ளதோ அந்த ராசிகளில் கோட்சார கிரகங்கள் சஞ்சாரத்தின் போது அந்த ராசி உங்களுக்கு எத்தனையாவது பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலன் அதிகமாக கோட்சார கிரகம் தரும்.

உதாரணமாக தற்போது மீனத்திற்கு லாபத்தில் சனி பகவான் கோட்சாரத்தில் நின்று லாபத்தை கொடுத்தாலும் அனைவருக்கும் ஒரே மாதிரி லாபத்தை தராது. #padmahazan

மீன ராசி காரர்கள் ஜாதகத்தில் எவருக்கெல்லாம் சனி சுய அஷ்டவர்க்கத்தில் மகரத்தில் 6 மேல் 7 8  பரல்கள் பெற்று உள்ளாரோ அவங்களுக்கு லாபம் நன்றாக இருக்கும். அதே சமயம் மகர ராசியும் 26 மேல் பரல்கள் கொண்டு இருக்க வேண்டும்.

19 முதல் 23 பரல்கள் பெற்று இருக்கும் ராசிக்குள் சஞ்சரிக்கும் குறைந்த சுய பரல்கள் பெற்ற கிரகம் குறைவான கோட்சார பலனையே தரும். #padmahazan

சிலருக்கு குரு பலம் வருகிறது திருமணம் நடக்கும் என்ற கணிப்பில் கோட்சார குரு நின்ற ராசியில் குரு பெறும் சுய பரல்கள் 0 1 2 ஆக இருந்தால் நின்ற வீடு கடகமாகவே இருந்தாலும் குரு தரும் கோட்சார சுப பலன் குறையும் அல்லது கிடைக்காது.

கோட்சார கிரகங்கள் குரு சனி ராகு செவ் போன்ற கிரகங்கள் கோட்சாரத்தில் ஒரே ராசிக்காரர்களுக்கு சிலருக்கு கில்லி தருவதும் சிலருக்கு அள்ளி தருவதும் நிர்ணயிப்பது அஷ்டவர்க்கமும் சுய பரல்களுமே.

கோட்சார கிரகங்கள் கொண்டு பலனை நிர்ணயிப்பதில் அஷ்டவர்க்கம் அதிகமாக கை கொடுக்கும்.

மேலும் சில குறிப்புகளை அடுத்த பதிவில் காண்போம்...

🤩 #padmahazan 🤩




Sunday, February 20, 2022

நீச வக்ர புதன் தரும் சுப பலன்


பிற கிரக நீசபங்கத்தை விட சற்று கூடுதலான நீசபங்கம் பற்றிய புரிதல் புதன் மீது எனக்கு உண்டு. 


இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு UPSC தேர்வாகி மத்திய அரசின் IAS IPS இணையான அதிகார அந்தஸ்து கொண்ட ஒரு அதிகாரியின் நேர்காணல் ஒரு தனியார் ஊடகத்தில் வந்தது. 


அவரது வாழ்க்கையின் சிறு வயதில் பள்ளி படிப்பில் ஆர்வம் இல்லாமல் படிப்பு சரியாக ஏராமல், இன்னும் சொல்ல போனால் படிப்பில் நாட்டமே இல்லாமல் லாட்டரி விற்பது போன்ற சிறு சிறு வேலை பார்த்து வந்து உள்ளார். 


தனியார் டுடோரியல் கல்லூரியில் 8 10 12 படிப்பை முடித்து சொற்ப மதிப்பெண்ணோடு 500+ / 1200 மதிப்பெண்ணோடு கல்லூரியில் சேர்கிறார். BA ENGLISH மட்டுமே வேறு வழியில்லாமல் அந்த அரசு கல்லூரி அவருக்கு சீட் தருகிறது. டிகிரி கிடைத்து உள்ளது.


இதை எல்லாம் ஒரு பாடத்தை குறைந்தது 100 முறை வாசித்தால் மட்டுமே அவரது ஞாபகத்தில் இருக்குமாம் அதோடு பாடம் சார்ந்த புரிதலும் வருமாம். (நினைத்து பார்க்கவே முடியாத ஒரு விஷயம்). 


இத்தனை DRAWBACK களை கொண்ட அவர் முதன் முதலில் UPSC தேர்வில் எழுதும் போது 16 பக்கங்களை மட்டுமே எழுத முடிந்ததாம், மொத்தமாக 25 பக்கங்களை கொண்ட தாள். மற்றவர்கள் 25 பக்கங்களை முடித்து ADDITIONAL SHEET வாங்கி கொண்டு இருந்தார்களாம். 


4 முறை UPSC தோல்வி பிறகு அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.


இதை எல்லாம் அவர் சொல்ல சொல்ல எனக்கு நினைவில் வந்தது... 


புதனின் நீசபங்கம்... மேலே அவர் சொன்னவை அனைத்தும் நீசமான புதன் தரும் பலன்கள். 


கடந்த நூற்றாண்டின் போற்றபட கூடிய விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இளம் வயதில் பேச்சு வராது, கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை ஆனால் இன்றைய இயற்பியல் இவர் இல்லாமல் இல்லை. 


Mr.bean என்ற கதாபாத்திர நாயகன் ரோவன் அக்கிட்ஷன், இயல் வயதில் பேச முடியாதவர், பக்கம் பக்கமாக வசனம் பேச முடியாதவர், சரளமான பேச்சில் பிரச்சனை கொண்டவர் ஆனால் அவரது முக உடல் பாவனையை உலகத்தை சிரிக்க வைத்தது. நகைச்சுவையும் புதனே. #padmahazan 


ஒருவருக்கு புதன் கெட்டாலும் நீசபங்கம் சுபத்துவம் வக்ரம் போன்ற மாற்று வழியில் அவர் வலு பெற்றால் ஒரு குறையை உங்களிடம் வைத்து அவரது மற்றொரு விஷயத்தில் உங்களை கொடி கட்டி பறக்க வைப்பார். 


2020 வரை யாரிடமும் அவ்வளவாக பேசாமல், "அமைதி அமைதி அமைதியோ அமைதி அமைதிகெல்லாம் அமைதி "னு இருந்த நான், கடந்த இரு வருடங்களில் பலருக்கு மணிகணக்கில் ஜோதிடம் பேச வைத்ததும், எழுத வைத்ததும் இதே புதன்தான். நீச பலனும் உண்டு நீசபங்க பலனும் உண்டு. 


எப்படி பார்த்தாலும் நீசபங்கமோ சுபத்துவமோ முதலில் புதன் MGR போல மூன்று முறை அடி வாங்கி விழுந்து ஜாதகனை பதம்பார்ப்பார், பின் பறந்து பறந்து அடித்து ஜாதகனை பிரகாசிக்க வைப்பார்.புதனின் தசா புத்தி வர வேண்டும். 


#padmahazan #புதன்




சித்த மருத்துவருக்கான கிரக அமைப்பு

 🍁 சித்த மருத்துவருக்கான கிரக அமைப்பு 🍁 #hazan 


நமது பதிவுகளை தொடர்ந்து படிக்கும் பல முகநூல் நண்பர்கள் அவர்களது ஜாதகத்தை அனுப்பி பலன் கேட்பது என் எழுத்துகள் பலரை ஏதோ ஒரு வகையில் கவனத்தை ஈர்த்து வருகிறது என்பதை பலர் சொல்லி கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 


சித்த மருத்துவர் ஒருவர் நம்மை தொடர்பு கொண்டார்.


சித்த மருத்துவராக இவங்க இருப்பதன் காரணம் என்ன..? தொடர்ந்து படியுங்கள்.


ஜோதிடத்தில் மருத்துவரை குறிப்பவர் செவ்வாய், எந்த வித பயமும் இன்றி உயிரை பொறுட்படுத்தாமல் நோயாளியை பார்த்து நோயை குணபடுத்தும் துணிச்சல் தைரியம் தன்மை தருபவர் செவ்வாய். அறுவை சிகிச்சையை செய்ய வைப்பவர் சூரியன்.


எந்த கிரகம் அதிக சுபத்துவமாக உள்ளதோ அந்த கிரகத்தின் காரக தொழிலை அந்த ஜாதகர் செய்து வருவார், இன்னும் கூடுதலாக அவருக்கு யோக தசா வருமானால் அந்த தொழிலில் அந்த நபர் கொடிகட்டி பறப்பார் என்பது வேத ஜோதிடர் ஜோதிட கலையரசு ஆதித்ய குருஜி ஐயாவின் விதி. #padmahazan 


இந்த ஜாதகத்தை பாருங்கள், அதிகபடியான சுப தொடர்பை பெறுபவர் செவ்வாய் கிரகம். நீச செவ்வாயாக இருந்தாலும் வக்ரம் பெற்று நீச செவ்வாயிற்கு வீடு கொடுத்த சந்திரன் உச்சம் பெற்று சூரிய கேந்திர உச்ச சந்திரனாக உள்ளார்.





செவ்வாயை நட்பு வீட்டில் இருந்து சுக்ரனும் புதனும் பார்வை நேரடியாகவும், நட்பு வலுபெற்ற குரு பார்வையும் மூன்று சுபரின் பார்வை பெற்று நீசபங்கமும் சுபத்துவமும் பெற்று முதன்மை சுபத்துவ கிரகமான செவ்வாய் உள்ளார். மருத்துவ துறையில் ஜாதகர் இருப்பார் என்று காட்டுகிறது. 


செவ்வாய் ஸ்தான பலத்தை இழந்து, திக் பலத்தை இழந்து சுபத்துவமாக இருப்பதால் சித்த மருத்துவராக இருக்க வைத்து உள்ளது.


செவ்வாய் பார்த்த ராகு தசா நடப்பில் உள்ளது.


🤩 #padmahazan 🤩 #செவ்வாய்

சந்திரன் மற்றும் சுக்ரன் தரும் காதல்


🌝சுக்ரனின் காதல் முழு விருப்பமில்லாத ஒரு நபரை தேர்தெடுக்க வைக்கும்.சுயநலமுடையது


🌙சந் மனகாரகன் சந்திரனின் காதல் மனதோடு தொடர்புடையது.சுயநலமற்றது.


🌙சந்திரனின் காதல் முழுமையாக மனதோடு மட்டுமே தொடர்புடைய காதல். 🌝சுக்ரனின் காதல் மனதை தாண்டிய ஆசை அதிகமாக கொண்டது.


🌝சுக்ரன் காதல் பொருளை சார்ந்த (துணையின் வீடு வண்டி பொருளாதாரம்) தன்னோடுடைய comfortable சுயநலம் கொண்டதாக இருக்கும். சுக்ரன் காதலில் மனதில் குழப்பமே வராது தெளிவாக முடிவை எடுக்கும் தனக்கு மட்டுமே சாதகமான மூளை சொல்வதே அதாவது புத்தி காரகன் புதனை சார்ந்து இருக்கும்.சுக்ரன் காதல் மனதை சார்ந்து செயல்படாது.


🌙சந்திரன் காதல் முழுமையாக பொருள் சார்ந்து இருக்காது. எதையும் எதிர்பார்க்காது. அன்பை மட்டுமே கொடுக்க பார்க்கும். அதையே எதிர்பார்க்கும்.


இதில் சந் காதல் சுக்ரனின் காதலை விட பெரியது. ஆனால் சந்திரனின் காதல் திருமணத்தை நோக்கி போகும் போது முழுதாக மனதை மட்டுமே வைத்து தேர்தெடுப்பதால் பிரச்சினைகள் சந்திக்கும். சுக்ரனின் காதல் தேவைகள் ஏற்ப தேர்ந்தெடுப்பதால் பிரச்சினைகள் வர வாய்ப்பு குறைவு.


🌙சந்திரன் தரும் காதல் pure சுத்தமானது ஆனால் வீட்டில் இருப்பவர்கள் பொருத்தமற்ற துணை என்று அதனை ஏற்க மாட்டார்கள்.


🌝சுக்ரன் தரும் காதல் தேவைகளை கொண்டு இருக்கும்🏘🏍💰. சரியான எல்லாம் உடைய துணையை தேர்ந்தெடுத்து இருக்கனு சேத்து வச்சிடுவாங்க.


குறிப்பு : 


ஊரில் நிறைய Break ups 💔 நடக்க காரணம் இருவரில் ஒருவருக்கு சந் தரும் காதலும் மற்றொருவருக்கு சுக் தரும் காதலாகவும் இருக்கும். 


🌝சுக்ரன் கொண்டவர் எளிதாக ஆளை மாற்றிவிடுவார் அவருக்கு முழுமையாக சுத்த காதல் தேவைகிடையாது அவருடைய எதிர்பார்ப்பு வேற...😍


🌙சந் கொடுத்த காதல் பிரிவிற்கு பிறகு பிரிந்த அவரை நினைத்தே காலத்தை கழிப்பார்.😔


🌝🌙உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் வலுத்து இருகிறது என்று பாருங்கள்.... எவர் சம்மந்தப்பட்ட தசா புத்தி காலத்தில் காதல் 💕 வந்தது என்று பாருங்கள்... நிறைய விஷயம் புரியவரும்.




நீசபங்க கிரக வலு


ஒரு நீச கிரகம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் நீசபங்கம் ஆகும் போது அதன் பலன் அளவுக்கு அதிகமாக ஜாதகருக்கு கிடைக்கும்.

மாறாக நீசபங்கம் ஒரு வழியில் மட்டுமே கிடைக்கிறது என்றால் அந்த கிரகம் முன்னாள் சொன்ன அளவிற்கு அளவு அதிகமாக பலனை தராமல் குறைந்த அளவு பலனை தரும்.

உதாரணமாக ஒருவர் கீழே விழுந்து விட்டார் அவரை மற்றொருவர் தூக்குகிறார், தூக்கி விட்ட அவர் கீழே விழுந்து அடிபட்டதோடு நடக்கிறார் அது ஒரு வழியில் மட்டுமே கிடைக்கும் நீசபங்கம். நீச பலன் இல்லாத குறைந்த பட்ச பலனை தரும். #padmahazan

அதே நபர் கிழே விழுகிறார் ஒருவருக்கு பதிலாக மூன்று நான்கு பேர் அவரை தூக்கி விடுகிறார்கள் அதான் இவ்வளவு பேர் இருக்கோமே அடிபட்ட இவரை தூக்ககிட்டே பொய்டலாம்னு போகுறது என்பது ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் நீசபங்கம் ஆகும் கிரகத்தின் பலனாக இருக்கும். அதிகமாக தனது பலனை இப்படிபட்ட கிரகம் தரும்.

1).நீசன் உச்சனோடு இணைவது,
2).நீசன் வீட்டதிபதி ஆட்சி உச்சம்  பெறுவது,
3).நீசன் ஒளி பொறுந்திய சந்திரன் கேந்திரத்தில் இருப்பது,
4).நீசன் வர்கோத்தமம் பெறுவது,
5).நீசன் வக்ரம் பெறுவது,
6).நீசன் ஒன்றிக்கு மேற்பட்ட சுபர்களால் பார்க்கபடுவது,
7).நீசன் பரிவர்த்தனை பெறுவது,
8).நீசன் லக்ன கேந்திரத்தில் இருப்பது,
9).நீசன் திக் பலத்தை அடைவது,
10). நீசன் சுய சாரத்தில் இருப்பது

இப்படி ஒன்றிற்கு மேற்பட்ட வழிகளில் ஒரு நீசன் நீசபங்கம் பெற்றால் அவர் அளவு மீறிய அதிகமாக தனது பலனை தருவார். Master பட jd அளவிற்கு கெத்து காட்டும்.

ஒரு வழியில் மட்டுமே கிடைக்கும் நீசபங்கம் அந்த கிரகத்தை நீசபங்கம் பெற வைத்தாலும் அது முறையாக முழுமையாக பலனை தராது. "..சோனா முத்தா போச்சா.." அப்படினு ஜாதகரை அந்த கிரகம்  கேட்கும்.



🤩 #padmahazan 🤩

Saturday, February 19, 2022

திருமண தடை தரும் ஜாதக அமைப்பு

 திருமணம் என்பது ஜாதகத்தில் 1 2 5 7  இப்படி பல பாவகங்களின் ஒட்டு மொத்த கூட்டு பலனே. இதில் எது பலவீனமான உள்ளதோ அந்த பாவகம் சார்ந்த சாதகமற்ற பலன் திருமண வாழ்க்கையில் இருக்கும்.


கீழே உள்ள ஜாதகத்தை பாருங்கள்.





மகர லக்னம். களத்திர காரகன் சுக்ரன் திக் பலத்தை இழந்து நீச அஷ்டம சூரியனோடு இணைந்து, பாபத்துவ சனியின் பார்வையிலும், நீச செவ்வாய் பார்வையிலும், குரு பார்வையிலும் உள்ளார். சுபத்துவத்தை விட பாவத்துவம் மிகுதியாக உள்ளது.


ஏழுக்குடைய சந்திரன் தேய்பிறையாகி லக்னாதிபதி சனியோடு அஷ்டத்தில் இணைவது அவ்வளவு சிறப்பு கிடையாது. 


தேய்பிறை பாவர் சந்திரனோடு இணைந்த சனி குடும்ப வீட்டை பார்ப்பதும் குடும்ப பாவகத்தை வலுஇழக்க வைக்கும்.


புத்திர காரகன் குரு பகை பெற்று வலுகுறைந்து திக் பலத்தை இழக்கும் நிலையில் ஆறில் மறைந்து, ஐந்தாம் அதிபதியும் பாவத்துவம். ஐந்திற்கு சனி பார்வை.


கால புருஷ மீனத்தில் கேது நின்று கேதுவிற்கு எந்த பாவர்களது தொடர்பும் இன்றி, 12 இடமான மோட்ச ஸ்தானத்திற்கு குரு தன் வீட்டை தானே பார்த்து சுபத்துவமாக்கி , தற்போதைய குரு தசா இவருக்கு ஆன்மீக அறப்பணி, கடவுள் பற்று வழியில் கொண்டு செல்ல உள்ளது.


சேர்ந்த கர்மாவை கழித்து மோட்சத்தை பெறும் ஜாதக அமைப்பு இவை. 

Friday, February 18, 2022

சனி தரும் பித்து நிலை என்னும் மனநல பாதிப்பு



நான் தினமும் நடந்து போகும் தெரு வழியே அடிக்கடி ஒரு மனநலம் பாதித்த நபரை காண்பேன். வயது 60 ற்கு மேல் இருக்கும். சிறு சிறு ஓட்டை கொண்ட அழுக்கு உடை, குளிக்காத முகம், உடலில் ஆங்காங்கே மண் ஒட்டி இருக்கும். ஒரு காலை இழந்து, முட்டிக்கு கீழே பிளாஸ்டிக் கட்டை காலில் நடந்து வருவார்.

அடிக்கடி ரோட்டில் என்னை யூனிபார்மில் பார்க்கும் அவர் சொல்வது , " வேலை பார்க்கும் போது கவனமாக பார்க்க வேண்டும், be carefull.." ,

மற்றொரு நாள் சொல்வார் " அந்த வேலையை யாரோ முடிக்காமல் வி்ட்டு விட்டு போய் விட்டார், நீங்க கொஞ்சம் முடிச்சிடுங்க.." ,

மற்றொரு நாள் " உங்களுக்கு நல்ல compliment இருக்கு keep it up..."

இப்படி ஆங்கிலமும் தமிழும் கலந்து ஒரு உயர் அதிகாரி போல, ரோட்டில் போகும் என்னிடம் ரோட்டு ஒரத்தில் உட்கார்ந்து கொண்டு சொல்வார். நான் கவனிக்காத மாதிரியே நகர்வேன்.


பலநாட்களுக்கு பிறகு அவரை பற்றி அந்த தெருவை சேர்ந்த முதியவர்கள் பேசும் போது சில விஷயங்களை கவனித்தேன்.

ரயில்வேயில் பணிபுரிந்த அதிகாரியாம் அவர், வேலையை விட்டு பணி ஓய்வு பிறகு வரும் பென்ஷன் மட்டுமே முப்பதாயிரம் மேலே இருக்குமாம்.

பணி ஓய்வு ஆகி சில ஆண்டுகள் இருக்கும் அல்லது காலை இழந்து வேதனையில் மனநலம் பாதித்து இருக்கும். இன்றுவரை அவர் அதே ரயில்வேயில் பணியாற்றும் மனநிலையே உள்ளார். மனம் அதே நிலையில் வாழ்கிறது. இன்னும் தன்னை ஒரு அதிகாரியாக உணர்ந்து தனி உலகில் வாழ்கிறார்.


கிழிந்த உடை, குளிக்காத உடல், ஊனமுள்ள உடல், பிறர் சொல்வதை புரியாது யாசகம் பெறும் நிலை, இரும்பு சார்ந்த பணி, பித்து பிடித்தல் என்னும் மனநல பாதிப்பு இவை அனைத்துமே சனி தரும் பலன்கள்.

அனைவருக்குமே சனி இந்த பலனை தருவாரா..? என்றால் நிச்சயமாக இல்லை.

1).எவர் ஒருவருக்கு லக்னம் லக்னாதிபதி சனியின் இணைவு, பார்வை பெற்று கெட்டு,

2). சிந்தனை பாவகம் என்னும் 5 மிடமும் அதிபதியும் சனி பார்வை இணைவில் கெட்டு,

3). மனகாரன் மனநிலையை குறிக்கும் சந்திரனும் சனி பார்வை இணைவால் பாதிக்கும் நிலையில்

மேலே சொன்ன மூன்று நிலையும் ஒரு சேர கெட்டு சனி தசாவோ, அல்லது லக்னாதிபதி ஐந்தாம் அதிபதி சந்திரன் இவர்களது தசா நடந்தால் அவர்கள் சனியின் பிடியில் பித்து நிலை என்றும் மனநிலை பாதித்த நபராக மாறுவார்கள்.

அடுத்தடுத்த இதே தசா வந்தால் வாழ்நாள் முழுவதும் இதே போன்ற நிலையில் வாழ வேண்டிய சூழலை சனி தருவார்.

சனி பிடியில் இவர்களது தற்போதைய நடைமுறை வாழ்வை ஏற்றுகொள்ளும் நிலையை இழப்பார்கள்.


மேலே சொன்ன நபருக்கும் இந்த அமைப்பு இருக்கும்.

கர்மாவின் அடிப்படையிலான பிறப்பில் ஒவ்வொருவருமே ஏதோ ஒரு வகையில் பாதித்து இருப்பார்கள்.

#padmahazan 





Wednesday, February 9, 2022

விருச்சிக லக்னத்திற்கு குரு தரும் யோகம்

 

🍁 விருச்சிக லக்னத்திற்கு குரு தரும் யோகம் 🍁 #hazan

விருச்சிக லக்ன ராசிக்கு அதிபதியான செவ்வாய் பகவானின் நண்பரான குரு பகவான், விருச்சிக லக்ன ராசிக்கு முழுக்க முழுக்க நன்மை தரவே கடமைபட்டவர்.

விருச்சிக லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு குரு பகவான் நல்ல வலுவோடு இருந்து, நட்பு ஆட்சி உச்சமாக போன்ற வலுவில் இருப்பது நல்ல பலனை நன்றாக தருவார்.

விருச்சிக லக்னத்தில் ராசியில் பிறந்தவருக்கு

1 என்னும் லக்னமான விருச்சிகத்தில் இருப்பது நற்பெயர் புத்திர பாக்கியம் தெய்வ அனுகூலத்தை கூடுதலாக கொடுத்து நல்ல மணவாழ்வையும் சிறப்பாக கொடுத்து நல்லறமாக இல்லறத்தை வைப்பார். #padmahazan

2ல் தனுசில் ஆட்சியாக இருப்பது நல்ல பலன் உண்டு, நீடித்த பொருளாதார புழக்கம், தன பண சேர்க்கை தரும் கூடுதலாக கடனையும் தருவார். நல்ல குடும்ப வாழ்வை தருவார்.

5ல் மீனத்தில் ஆட்சியாக இருப்பது அளவு கடந்த அதிர்ஷ்டத்தை பணத்தையும் பொருளையும் வாரி கொடுப்பார்.சில நிலைகளில் ஆண் வாரிசு விஷயத்தில் பிரச்சனை வைப்பார். மூத்த உடன்பிறப்பு, முன்னேற்றம் , வெற்றி போன்றவற்றை கொடுத்து ஜாதகரின் கௌரவத்தை போற்றி வளர்ப்பார்.

6ல் மேஷத்தில் குரு இருப்பது நல்ல வேலை தருவார். கடனில் ஜாதகரை மூழ்க வைத்து தூர தேச வாழ்க்கை கொடுத்து பணத்தை சேர்க்கும் நிலையை தருவார். #padmahazan

9ல் கடகத்தில் உச்சமாகும் நிலை அபரி விதமான உச்ச நிலையான உயர்நிலை வாழ்வை குரு தருவார், முயற்சிகள் பலிதம் ஆகும், ஆண் வாரிசுகளால் பெயர் புகழ் பெறுவார், பெரும் செல்வந்த வாழ்வை தரும். வக்ரமாக கூடாது.

10ல் சிம்மத்தில் இருப்பது பணம் பேச்சு மேலாளர் போன்ற கௌரவமான தொழிலை கொடுத்து இருப்பர். நல்ல பணபுழக்கும் கையில் இருக்கும்.

1 2 5 6 9 10 ல் ஆட்சி உச்சம் நட்பு வலுவோடு இருப்பது மிகவும் நல்ல பலனை தருவார். இங்கே இருக்கும் குரு வக்ரமாகி இருக்க கூடாது, சுப பல அளவு குறைவாக இருக்கும்.

மகரத்தில் 3ல் நீசமாவது, கும்பத்தில் சம வலுவோடு இருப்பது, 7 8 11 12ல் பகை பெறுவது சுப பலனை குறைவாக குரு பகவான் விருச்சிக லக்னத்திற்கு தருவார். சராசரியான ஒரு வாழ்வை ஜாதகருக்கு தருவார் இந்த இடங்களில் இருக்கும் குரு. இங்கே வக்ரமாவது பலனை அதிகபடுத்தி தருவார். #padmahazan

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு எங்கே இருந்தாலும் சனியோடு இணைவது பார்க்கபடுவது ராகுவோடு இணைவது போன்றவை குருவை பலவீனபடுத்தும், தன பண சேர்க்கை குடும்ப வாழ்க்கை பிரச்சனை தாமத குழந்தை பாக்கியம் அல்லது குழந்தை பெற தடையை தருவார்.

விருச்சிக லக்னத்திற்கு குரு மிக முக்கியமான கிரகம். இயற்கை சுபர் லக்ன யோகராக குருவே வருவது விருச்சிக லக்னத்தார்களுக்கு உள்ளங்கையில் நெல்லி கனி போன்ற கொடுத்து வைத்த பூர்வ ஜென்ம சிறப்பு. ஏன் என்றால் அவரே பூர்வ புண்ணிய அதிபதி.

மேலே சொன்ன அனைத்தும் பிற கிரகங்கள் குருவோடு தொடர்பு பெறுவதை பொறுத்து பலனில் கொஞ்சம் மாற்றம் இருக்கும்.

Padmahazan SRI VISHNU ASTROLOGY
What's app 8300 620 851



🤩#padmahazan 🤩 #குரு #விருச்சிகம்

Saturday, February 5, 2022

குழந்தை பாக்கியம்

 🍁 பூர்வபுண்ணியாதிபதி என்னும்  5ம் அதிபதி தரும் குழந்தை பாக்கியம்🍁 #hazan 


எந்த லக்னத்திற்கும் 5ம் அதிபதி லக்னாதிபதிக்கு நட்பு கிரகமாகவே இருக்கும். கஷ்டத்தில் நண்பன் உதவுவது போல லக்னாதிபதியின் நட்பு கிரகமான ஐந்தாம் அதிபதி ஜாதகரை காப்பாற்றும் உறுதுணையாகவே இருப்பார். 


ஐந்தாம் அதிபதி ஒருவரது கடந்த ஜென்ம சுப அசுப நிகழ்வு காரணமாக சேர்த்த பூர்வ புண்ணியத்தின் அளவை குறிப்பார். 


முதல் குழந்தை, ஆண் குழந்தையினால் உண்டாகும் ஆதரவு, வாரிசால் உண்டாகும் பெயர் புகழ் ஜாதகருக்கு எவ்வளவு உண்டாகும் என்பதை குறிக்கும் இடம்  ஐந்தாம் இடம். 


ஒருவரது சிந்தனை யோசனை எது மாதிரியாக இருக்கும், பிறரை பற்றிய சிந்தனை கெடுதலாக உள்ளதா நல்லபடியாக என்பதை காட்டுவதும் இதே ஐந்தாம் இடம் மற்றும் அதன் அதிபதியே. #padmahazan 


பூர்வ புண்ணியத்தில் சேர்த்த சுப பலனாக தற்போதைய வாழ்வில் அதிர்ஷ்டமாக இருக்குமா  அல்லது பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பெறுவாரா என்பதை குறிப்பதும் பூர்வ புண்ணியாதிபதியே. 


பொதுவாக ஐந்தில் சுபர்களாக குரு சுக்ரன் புதன் சுபர் சந்திரன் (லக்னத்திற்கு ஏற்ப) ஆட்சி உச்சம் பெறுவது நல்லது. ஆனால் இவர்களோடு சனி ராகு சேர்க்கை பார்வை பெற கூடாது. #padmahazan 


அதே சமயம் 5ம் அதிபதி பாவர்களான சனி செவ்வாய் வரும் போது ஆட்சி பெறாமல் வேறு பாவத்தில் உச்சம் பெறுவது அல்லது நட்பு வலுவோடு அமைவது யோகத்தை தரும். சனி செவ் நின்ற வீடடை கெடுப்பார்கள் என்ற விதிபடி ஐந்தாம் இடத்தை கெடுப்பது ஜாதகருக்கு வாழ்வில் போராட்டத்தை தரும். 


ஐந்தில் குரு சுக்ரன் புதன் இணைந்து இருப்பது பார்ப்பது மிக யோகமான குழந்தை பாக்கியமும் அதிர்ஷ்டமும் பெறுவார்கள். #padmahazan 


ஐந்தில் சனி செவ் ராகு இணைவது பார்ப்பது போன்ற நிலையில் தாமத குழந்தை பாக்கியம் அல்லது குழந்தைகளால் ஆதரவு இல்லாத நிலை போன்ற பலன்கள் இருக்கும். 


ஐந்தாம் அதிபதி எப்போதும் நீசம் ஆக கூடாது, நீசபங்கம் பெற்றால் ஓரளவு நல்ல பலன் இருக்கும். 


அஸ்தங்கம் ராகுவால் கிரகணம் போன்ற நிலையில் இருக்கும் ஐந்தாம் அதிபதி குழந்தை விஷயத்தில் சாதகமற்ற பலனை தருவார்கள். 


5மாதி உச்சம் பெற்றவர்கள் அந்த தசா புத்தி காலத்தில் நன்றாக இருப்பார்கள். நினைத்தது நடக்கும். 


ஐந்தாம் இடம், ஐந்தாம் அதிபதி, குரு என மூன்று நிலையும் ஒரு சேர கெடும் போது குழந்தை பாக்கியம் தடைபடும், இந்த மூன்றும் பலமாக இருக்கும் போது காலத்திலேயே குழந்தை பெற்று அவர்களால் ஆதரவும் பெயர் புகழும் கிடைக்கும். 


#padmahazan #குரு #சுக்ரன் #புதன் #ஐந்தாம்அதிபதி #குழந்தை #பாக்கியம் #சனி #ராகு #கேது 




சுக்ரன் செவ்வாய் சேர்க்கை தரும் பிருகு மங்கள யோகம்

 

🍁 சுக்ரன் செவ்வாய் சேர்க்கை பிருகு மங்கள யோகம் தரும் பலன்கள் 🍁 #hazan 


நலினமான இளம் கன்னி பெண் சுக்ரன்,  முரட்டுதனமான 30 வயது ஆண் செவ்வாய். இப்படி இயல்பால் குணத்தால் மாறுபட்ட  சுக்ரனும் , செவ்வாயும் இணையும் போது அந்த சேர்க்கை எது மாதிரியான பலனை தரும் காண்போம். 


ஜாதகத்தில் சுக் செவ் சேர்க்கை இருந்தால் வாழ்க்கை துணை போராட்ட குணம் கொண்டவங்க, எதையும் தைரியமாக எதிர்த்து முன்னின்று செய்யும் குணத்தை கொண்டவங்க, ஜாதகரின் லக்னம் லக்னாதிபதி கெட்டால் ஜாதகர் துணைக்கு அடங்கி போக வேண்டி இருக்கும். #padmahazan 


நிலம் சார்ந்த லாபம் நன்றாக இருக்கும், பூந்தோட்டம் வளர்ப்பில் ஆர்வம் இருக்கும். 


ஜாதகரின் சகோதரர் கலையுணர்வு கொண்டவர், சினிமா, பூக்கடை, துணிக்கடை, பட்டு தொழில், அழகு நிலையம் போன்ற இடங்களில் தொழில் செய்வார் அல்லது வேலைக்கு இருப்பார்.  சகோதரனுக்கு உண்டான காதல் சம்பந்தப்பட்ட ஜாதகரிடம் பெரிய தாக்கத்தை தந்து இருக்கும். 


ஜாதகருக்கு காதல்,திருமணம், தாம்பத்தியம், அன்னோன்யம், எதிர்பாலின ஈர்ப்பு சார்ந்த விஷயத்தில் அவசரதனம் இருக்கும், முரட்டுதனம் இருக்கும். ஈர்ப்பும் கிளர்வும் அதிகமாக இருக்கும். #padmahazan 


பொதுவான இந்த சேர்க்கை குரு அல்லது சந்திரனின் பார்வையில் இருப்பது பொறுமையும், சமூதாயம் சார்ந்த பொறுப்பும் கொடுத்து நல்ல முறையில் அனைத்தும் அமைத்து கொடுக்கும். 



மேஷம் விருச்சிகம் மகரத்தில் இந்த சேர்க்கை நிலம் சேர்க்கை சகோதர ஆதரவை கொடுத்து தாமத திருமணம் அமைத்து கொடுக்கும். ஆடம்பர வாழ்வை குறைக்கும். 



மீனம் ரிஷபம் துலாம் மிதுனம் தனுசு கும்பத்தில் இந்த சேர்க்கை துணை வழியான நில சேர்க்கை செல்வாக்கை தரும். நீசமானாலும் இருவரில் ஒருவர் திக் பலம் பெற்று கடகத்திலோ கன்னியிலோ இருக்கும் போது சுக்ர செவ்வாய் சேர்க்கை யோகத்தை தரும். #padmahazan 


இருவரின் இணைவில் சனி ராகு இணைவு, சனியின் பார்வை பெற்று இருக்கும் போது ஜாதகருக்கு திருமணம் தாம்பத்தியம் நில சேர்க்கை சார்ந்தவற்றில் கெடுபலன் கூடுதலாக இருக்கும். 


மேலே சொன்னவை அவரவர்கள் ஜாதகத்தில் பிற கிரகங்கள் இருப்பை பொறுத்து பலன் கொஞ்சம் கொஞ்சம் மாறுபடும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY. 

WHATS APP 8300 620 851. 

🤩 #padmahazan 🤩 #செவ்வாய் #சுக்ரன் #யோகம் #பிருகு #மங்கள #யோகம் 




குரு செவ்வாய் தரும் குரு மங்கள யோகம்

 🍁 குரு மங்கள யோகம் 🍁 #hazan 


குரு பகவானும் செவ்வாய் பகவானும் இணைந்து இருப்பதும் நேருக்கு நேராக பார்த்து கொள்வதுமே குரு மங்கள யோகம்.

இந்த யோகத்தால் நில சேர்க்கை, நிலங்களினால் உண்டாகும் தன சேர்க்கை, நிலங்களில் இருந்து கிடைக்கும்பொருட்களால் தன சேர்க்கை, கௌரவம்மரியாதையை தானாக வருதல், எதிரிகளில் இல்லாத சூழல், எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றல், துணிந்து செய்யும் காரிய சித்தி வெற்றி, சகோதர வழி ஆதரவு சகோதர மேன்மை, எதையும் சாதிக்கும் ஆண் வாரிசுகள், வாரிசுகளால் உண்டாகும் பெருமை, அதிகார அந்தஸ்து, அதிகார பதவியில் நிர்வகிப்பது போன்ற சுப பலன்களை தரும் இந்த குரு மங்கள யோகம்.மண்ணில் இருந்து எடுக்கும் புதையல், தங்கம், மண்ணில் இருந்து எடுத்து கோவிலாக கட்டி வழிபடும் சிலை இவற்றை எல்லாம தருவது இதே குரு மங்கள யோகமே. #padmahazan

ரியல் எஸ்டேட், புரோமோட்டர்ஸ், போர்வெல்ஸ், காவல் உயர் அதிகாரி, நிர்வாக அதிகாரிகளை உருவாக்குவதும் இதே குரு மங்கள யோகமே.

எந்த லக்ன காரர்களுக்கு இந்த யோகம் சிறப்பாக பலனை தரும் என்றால் மேஷம் விருச்சி கடகம் சிம்மம் தனுசு மீனம் லக்னத்திற்கு முதன்மையான பலனை தரும்.

இந்த கிரக சேர்க்கை பார்வையில் குருவும் செவ்வாயும் நட்பு ஆட்சி உச்சம், நீசபங்கராஜயோகம், திக் பலம் ஆக இருந்து தசா நடக்கும் போது லக்னாதிபதி வலு ஏற்ப பலனை வாரி வழங்குவார்கள்.

🤩 #padmahazan 🤩 #குரு #செவ்வாய் #குருமங்களயோகம் #யோகம்



தன் வீட்டை தானே பார்க்கும் சனி கிரகம்

 🍁 தன் வீட்டை தானே பார்க்கும் சனி 🍁 #hazan 


ஜோதிடத்தில் சொல்லபட்ட விதிகளுள் ஒன்று, " தன் ராசியை தானே பார்க்கும் கிரகம் அந்த ராசியை வலுபெற வைக்கும் " என்பதாகும். 


ஆனால் இந்த விதியில் விதிவிலக்கு தன் வீட்டை பார்க்கும் குரு, சுக்ரன், சுப புதன், சுப சந்திரன் பார்வை மட்டுமே அவர்களது வீட்டை வலுபெற வைக்கும். 


மாறாக பாவிகளான சனி மற்றும் செவ் பார்வை தன் வீட்டை பார்த்தாலும் அது அந்த வீட்டை கெடுக்கவே செய்யும். 


உதாரண ஜாதகத்தை பாருங்கள்.கடக லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லக்னத்தில் சனி ஏழாம் வீட்டை பார்த்து உள்ளார். சனி தனது ஆகாத சந்திரனின் பகை வீட்டில் உள்ளார். ஆயினும் தனது வீடான மகரத்தை பார்த்து உள்ளார். ஏழாமிடத்தை பாதிக்கிறார். 




திருமணமான பிறகு துணைவழியாக பிரச்சனைகளை சந்தித்து வந்து உள்ளார். இறுதியாக பிரிவும் கொடுத்து உள்ளார்.


தன் வீட்டை பார்க்கும் சனி செவ் அந்த வீட்டை பார்வையால் பலவீனபடுத்துவார்கள் என்பதும் ஒரு விதி. குரு சுக்ர போன்ற சுபருக்கே இந்த விதி முழுமையாக பொருந்தும். #padmahazan 


கூடுதலாக இங்கே சனிக்கு குரு சுக் புதன் பார்வை இணைவு கிடைத்து இருந்தால் அசுப தன்மை விலகி தான் பார்வையும் சுபமாகி தன் வீட்டை கெடுக்காமல் நடுநிலையாக (neutral) இருந்து இருப்பார். 


செவ்வாய்க்கும் இது பொருந்தும், சனி முழு பாவி, செவ்வாய் முக்கால் பாவி கால் சுபர், சூரியன் அரை பாவி அரை சுபர், சுக்ரன் கால் பாவி அதாவது முக்கால் சுபர், குரு முழு சுபர். 


#padmahazan #குரு #சனி #புதன் #சுக்ரன் #சூரியன் #கடகம்

ஓரே பிறப்பில் உச்சம் தொட முடியாதா..? கர்ம தொடர்பு

 🍁 ஒரே பிறப்பில் உச்சம் தொட முடியாதா..? 🍁 #hazan


கடந்த சில நாட்களுக்கு முன்பு பாடலாசிரியர் வாலி ஐயா அவர்களது ஒரு நேர்காணலை பார்க்க முடிந்தது. 


அதில் ஒரு கேள்வி இடம் பெறும், " இவ்வளவு பாடல்களை optimistic ஆ காலத்திற்கு ஏற்ப அன்றைக்கு எம்ஜீஆருக்கு எழுதுனீங்க இன்றைக்கு இன்றைய இளம் நடிகர்களுக்கும் எழுதறீங்க எப்படி..? " என்று கேட்பார் நிகழ்ச்சி தொகுப்பாளர்.


வாலி அவர்களது பதில், " ஒரே பிறப்பால் இது சாத்தியமில்லை, ஒரே பிறப்பில் நம்மால் நாம் சாதிக்க முடியாது, உச்சம் தொட முடியாது, இவ்வளவு optimistic ஆ எழுதறேன்னா.. அதுக்கு காரணம் பூர்வ ஜென்ம புண்ணியம், முற் பிறப்பு பலன்.." அப்படினு சொல்லி இருப்பாங்க. #padmahazan 


உண்மை... யாரும் இங்கே நேற்று பிறந்து இன்று செயல்படுத்தி நாளை ஒரு துறையில் உச்சத்தை தொட முடியாது.


போன பிறப்பில் 20% ஞானத்தை பெற்று, இந்த பிறப்பில் 20% ஞானத்தை பெற்று, அடுத்த பிறப்பில் 20% என ஞானத்தை பெற்று ஒரு குறிப்பிட்ட நிலையில் மற்றவர்களை விட உங்களது முற்பிறப்பில் சேர்த்த திறனும் ஞானமும் மற்றவர்களை விட கூடுதலாக நிற்கும். 


அப்போது அந்த பிறப்பில் அந்த நபர் முதன்மை ஆக இருப்பாங்க. அதற்காகதான் சொல்கிறேன் உங்களுக்கு,


உங்களுக்கு எந்த திறமை இருந்தாலும், எது உங்களுக்கு திறன்பட வந்தாலும், அதை முழு மனதோடு ஆத்மார்த்தமாக பண்ணுங்க. #padmahazan 


உங்களுக்கு சாப்பாடு செய்ய வந்தாலும், மெக்கானிக்கல் ஆக இருந்தாலும், எழுத்தாளராக இருந்தாலும், மருத்துவராக இருந்தாலும், வாணிபராக இருந்தாலும், யூக விளையாட்டில் பணத்தை பெறுபவராக இருந்தாலும் உங்களுக்கு தெரிந்ததை தொடர்ந்து முழு முயற்சி முழு உடன்பாடு முழு மன திருப்தியோடும் பண்ணுங்க...


தோல்வி கிடைத்தாலும் என்றாவது ஒரு நாள் அல்லது ஒரு பிறவியில் உங்களது செயலிற்கான சரியான எதிர்பார்த்த வெற்றி உங்களை வந்து சேரும். 


கர்மாவை நன்றாக புரிந்து கொள்ளுங்க...


நீங்கள் எதில் கவனத்தை வைத்து முயற்சி முன்னேற்றம் எதிர்பார்க்குறீங்களோ அது உங்களை சேரும். 


அடுத்தடுத்த பதிவுகளில் இவற்றை பற்றி மேலும் எழுதுகிறேன்.


🤩 #padmahazan 🤩

கிரக மாலிகா யோகம்

 🍁 கிரக மாலிகா யோகம் 🍁 #hazan 


இன்றைய உலகில் நல்ல ஆரோக்கியம், பொருளாதாரம், படிப்பு, நட்புகள், சொந்த பந்த உறவுகள், மணவாழ்க்கை, தொழில் அனைத்தும் நன்றாக அமைந்து ஒருவர் சீரான வாழ்க்கையை அன்றாடம் வாழ்ந்து வருகிறார் என்றார் அவருக்கு கிரக மாலிகா யோக ஜாதகத்தை கொண்டவராக அந்த ஜாதகர் இருப்பார்.


கிரக மாலிகா யோகமா..? அது எப்படிங்க இருக்கும் என்று உங்களில் பலர் கேட்பது புரிகிறது.


கிரக மாலிகா யோகம் என்பது 9 கிரகங்களும் 12 ராசி கட்டங்களில் தனித்து தனித்து 9 ராசிகளில் 9 கிரகமாக இருப்பது தான் அந்த கிரக மாலிகா யோகம். #padmahazan 


கிரக மாலிகா யோகத்தில் எந்த கிரகமும் சூரியனோடு இணைந்து சூரியனிடத்தில் தன் பலத்தை இழந்து இருக்க மாட்டார்கள்.


ராகு கேது போன்ற சர்ப்ப கிரகங்களிடம் இணைந்து தனது வலுவை பிற கிரகங்கள் இழக்காமலும் இருப்பார்கள்.


கூடுதல் சிறப்பாக இங்கே கிரக மாலிகா யோகத்தில் இருக்கும் கிரகங்கள் பகை நீசம் பெறாமல் நட்பு சமம் ஆட்சி வீடுகளில் இருப்பதும் யோகத்தை வலுவாக தரும்.


மேலும் லக்னத்தை பொறுத்து லக்ன யோக தசாவும் ஒரு சேர அந்த ஜாதகருக்கு இளம் வயது முதல் வர கொடுத்து வைத்த பிறவியாக அவர் இருப்பார்.


இது போன்ற ஜாதகங்களை பெற்றவர்கள் பிரச்சனை எப்போது சரியாகும் என்று ஜோதிடரை அனுக மாட்டார்கள், மாறாக எது எனக்கு நல்லபடியாக இருக்கும்..? பணத்தை எதில் முதலீடு செய்யலாம்..? எப்போது தொழிலை விரிவுபடுத்தலாம் போன்ற கேளவிகளையோடு ஜோதிடரை அனுகுவார்கள். #padmahazan 


கீழே உள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள், கிரக மாலிகா யோக உதாரணமாக பதிவிட்டு உள்ளேன். 




சூரி செவ் குரு சுக் புத கிரகங்கள் நட்பு வலுவோடும், சனி சம வலுவோடும், சந்திரன் பௌர்ணமி வலுவோடும் இருப்பது, எந்த கிரகமும் நீசம் பகை கிரகணம் அஸ்தங்கம் பெறாமலும் இருப்பது ஜாதகருக்கு வாழ்வில் கிடைக்க வேண்டியவை நல்ல முறையாக அமைந்து இருக்கும் என்பதை காட்டுகிறது. 


PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY 

WHATS APP 8300 620 851 


#padmahazan #குரு #சுக்ரன் #புதன் #சூரியன் #கிரகமாலிகாயோகம்

நகைச்சுவை குணத்தை தரும் புதன்

 


நகைச்சுவை என்றாலே நவகிரகங்களில் நேராக புத பகவானைதான் குறுகுறுனு நாம் பார்க்க வேண்டும். ஏன்னா அவர்தான் நகைச்சுவை உணர்வை ஒருவரது மனதில் பாய்ச்சுபவர்.


மோட்டார் போட்டு பொத பொதனு தண்ணி வர மாதிரி நகைச்சுவை வருமா..? இல்லை குடத்துக்குள்ள டம்பர் ல தண்ணி எடுக்குற மாதிரி நகைச்சுவை வருமா..? என்பதை ஒருவரது ஜாதகத்தில் உள்ள புதனின் வலுவை வைத்து சொல்லி விடலாம். 


புதன் லக்னத்திற்கு 159 லோ 4 7 10லோ நட்பு ஆட்சி உச்சம் பெற்று இருப்பது,


நீசமானாலும் மீனத்தில் குருவோடுவோ சுக்ரனோடுவோ இணைந்து இருப்பது,


சந்திரனின் பார்வையை பெறுவது போன்ற நிலைகளை புதன் பெற்று, 


புதனின் மிதுன கன்னி லக்ன ராசியில் பிறந்தவர்கள். குறிப்பாக ஆண் ராசியான மிதுன அமைப்பில் பிறந்தவர்கள், #padmahazan 


புதனின் ஆயில்யம், கேட்டை, ரேவதியில் ஜென்ம நட்சத்திரமாக, லக்ன நட்சத்திரமாக, அல்லது லக்னாதிபதி நின்ற நட்சத்திரமாக வரும் போதும்,


புதனின் நட்சத்திரமான ஆயில்யம், கேட்டை, ரேவதியில் கிரகங்கள் நின்று தசா புத்தி நடத்துவது போன்ற நிலைகளை பெறுபவர்கள்


லக்னாதிபதி புதனோடு இணைந்து இருப்பது புதனின் பார்வை பெற்று இருப்பது


நகைச்சுவையாளர்களாக அல்லது நகைச்சுவை பேசியே ஒரு கூட்டத்தை தனக்குனு தன்னை சுற்றி ஏற்படுத்தி கொள்பவராக இருப்பார்கள். 


மேலும் புதனின் பிற கிரக இணைவு பார்வை ஏற்ப காமெடி நன்றாகவோ அல்லது பிறரை நகையாடுவது போலவோ இருக்கும்.


🤩 #padmahazan 🤩



நீச்ச கிரக ராசியில் நிற்கும் ராகு தரும் பலன்கள்


பொதுவாக ஒரு கிரகம் ஒரு குறிப்பிட்ட ராசியில் இருக்கும் போது நீசம் என்ற வலு இழந்த நிலையை பெறும். 


முதலில் கிரகம் நீசமாகும் ராசியை பார்ப்போம். 

சூரியன் துலாத்திலும்

சந்திரன் விருச்சிகத்திலும்,

செய்வாய் கடகத்திலும்,

குரு மகரத்திலும்,

புதன் மீனத்திலும்,

சுக்ரன் கன்னியிலும்,

சனி மேஷத்திலும் நீசம் என்னும் வலுஇழந்த, வலுகுன்றிய நிலையை பெறுவார்கள். 


இத்தகைய நீசம் பெற்ற கிரகத்தின் ராசியில் இருக்கும் ராகு எப்படி இருப்பார். #padmahazan 


சூரியன் துலாத்தில் நீசமாகி சிம்மத்தில் ராகு இருப்பது, 

சந்திரன் விர்ச்சிகத்தில் நீசமாகி கடகத்தில் ராகு இருப்பது,

செவ்வாய் கடகத்தில் நீசமாகி கடகத்தில் ராகு இருப்பது, 

குரு மகரத்தில் நீசமாகி தனுசு மீனத்தில் ராகு இருப்பது, 

புதன் மீனத்தில் நீசமாகி மிதுன கன்னியில் ராகு இருப்பது, 

சுக்ரன் கன்னியில் நீசமாகி ரிஷப துலாத்தில் ராகு இருப்பது,

சனி மேஷத்தில் நீசமாகி மகர கும்பத்தில் ராகு இருப்பது, 


போன்ற நீசனின் வீட்டில் நின்ற ராகு தான் நின்ற பாவகத்தை ராசியை கடுமையாக பாதிப்பார். 


ராகு ஒரு இருள் கிரகம் , நீச கிரகத்தின் வீடு என்பது ஏற்கெனவே வலுஇழந்து இப்பவோ அப்பவோ என்பது போல இருக்கும், அங்கே ராகு நின்றால் அந்த ராசி பாவகம் கடுமையாக பாதிக்கும். #padmahazan 


ஒருவருக்கு 2ல் ராகு இருக்க வீட்டதிபதி நீசமாகிட பணம் குடும்பம் பேச்சு சார்த்த பாதிப்பை தருவார். 4ல் ராகு இருக்க வீட்டதிபதி நீசமாக தாயார் நலம் படிப்பு வீடு வண்டி வாகன யோகத்தை முற்றிலும் முடக்குவார், 8ல் ராகு நின்று வீட்டதிபதி நீசமாகிட அற்பாயுளை தருவார். 


விதிவிலக்கு ராகுவிற்கு குரு பார்வை சேர்க்கை பெற வேண்டும் அல்லது நீச கிரகம் முறையான நீசபங்கராஜயோகத்தை பெற வேண்டும். நீசன் பரிவர்த்தனை/வக்ரம் பெற வேண்டும். 


படத்தில் இருப்பது சங்கடம் தீர்க்கும் சனிபகவான் தொடரில் வரும் ராகு பகவான்


PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY. 

WHATS APP 8300 620 851 




🤩 #padmahazan 🤩

ராகு குரு சனி தசா உணர்த்தும் கர்ம தொடர்பு


நவகிரகங்களில் ராகு தசா அடுத்து குரு தசாவும் குரு தசா அடுத்து சனி தசாவும் அடுத்தடுத்து வரும். ராகு தசா 18 ஆண்டுகள் குரு தசா 16 ஆண்டுகள் சனி தசா 19 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும்.


சூரியனின் கிருத்திகை உத்திரம் உத்திராடம் , சந்திரனின் ரோகிணி அஸ்தம் திருவோணம், செவ்வாயின் மிருகசீரிடம் சித்திரை அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறந்த நட்சத்திர ஜனனகால தசா இருப்பை பொறுத்து ராகு குரு சனி தசா இளம் வயதிலோ அல்லது மத்திய வயதை கடந்து நடைபெறும். #padmahazan 


53 ஆண்டுகால ராகு குரு சனி தசாவில்... ராகுவின் காரக ரீதியான குடும்பம், பெண், பொண்,பணம், பொருள், அதீத ஆசை, தேடல் சம்மந்தப்பட்ட விஷயத்தில் ராகு தசா கழிப்பார்கள். ஆசை எண்ணம் நிறைவேற்றி கொள்ளுதல் போன்ற விஷயத்தில் உண்மை நேர்மை மீறி நடக்கவும் ராகு செயல்பட வைப்பார். ராகு குரு தொடர்பு பெற நல்லது. 


ராகு தசா 18 ஆண்டுகளுக்கு பிறகான குரு தசாவில் மிகவும் நல்லவங்க, பெரிய மனம் கொண்டவங்க, ராகு கொடுத்தவற்றை அனைத்தும் குரு தசாவில் மரியாதையாக வைத்து கொண்டு மதிப்பு மரியாதையோடு குரு தசாவை கடந்து வருவாங்க... #padmahazan 


குரு தசா 16 ஆண்டுகாலம் முடிந்த பிறகான சனி தசா... ராகு தசாவில் செய்த விஷயங்களுக்கு சனி தசாவில் கெடுபலனை தருவார். அதாவது இளம் வயதில் மத்திம வயதில் ராகுவால் செய்த அனைத்து விஷயத்திற்கும் சுப பாவ தன்மை ஏற்ப சனி தசாவில் பலன் அமையும். அந்த காலத்துல அந்த மனுசன் அந்த மாதிரி பண்ணாரு அதுனாலயே இப்ப இந்த மாதிரி நல்லா இருக்காருனு சொல்றதும் , அந்த காலத்துல அந்த ஆட்டம் ஆடுனாறு அதான் இப்போ இப்படி ஆகிட்டாருனு சொல்ற விஷயம் ராகு தசா அதனை அடுத்த குரு தசா சனி தசாவில் கண் எதிரே பார்க்ககூடிய நிகழ்வாக தரும். 


மேலே சொன்ன அனைத்தும் கிரக காரகத்துவம் சார்த்த கிரகத்தின் இயல்பான குணத்தில் அமைந்தவை. லக்னத்தை சார்ந்த ஆதிபத்தியமான லக்னாதிபதி பூர்வ புண்ணியாதிபதி பாக்கியாதிபதி லாபாதிபதி என கிரகங்கள் பெறும் ஆதிபத்தியம் சம்மந்தப்பட்டவை அல்ல. ஜனனகால ஜாதகத்தில் ராகு குரு சனி பெறும் சுப பாவ தொடர்பு பொறுத்து பலன் மாற்றம் இருக்கும். 

🤩 #padmahazan 🤩

சுக போக ஆடம்பர வாழ்வை தரும் 1 4 அதிபதி சேர்க்கை



ஜோதிடத்தில் ஜாதகரின் அந்தஸ்து செயலாற்றும் தன்மை தரும் லக்னாதிபதியும், வீடு வண்டி படிப்பை தரும் சுகாதிபதியும் இணைவதால் ஏற்படும் பலன்களை காண்போம். 

வீடு கட்ட வேண்டும், விரும்பிய படியாக அது இருக்க வேண்டும் என்ற விடாப்படியான குணத்தை தருவது இந்த 1 4 அதிபதி சேர்க்கை. 

வாகன விரும்பியாக மாற்றும். வாகனத்தின் மேல் தனிப்பிரியத்தை கொண்டவராக ஜாதகர் மாறுவார். 

படிப்பு சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனங்களை பெற்றவராகவும் ஜாதகர் இருப்பார். பள்ளி படிப்பை அதிகமாக நேசிப்பவராக ஜாதகர் இருப்பார். 

தன்னை சுற்றி சொந்தபந்தங்கள் பலர் சூழ்ந்து இருக்கும் படியாகவும், பலரை உபசரித்து உறவுகளை மேம்படுத்தும் குணத்தை கொண்டவராகவும் ஜாதகரை கூடுதல் சுப குணத்தை தரும். 

வீட்டில் வளர்ப்பு பிராணிகளை நல்ல முறையில் வளர்த்து அவற்றோடு நேரத்தை செலவிடும் கருணை குணத்தை தருவதும் இதே 1 4 அதிபதி சேர்க்கையாகும். #padmahazan 

தாயார் மீது அதீத பாசத்தை கொண்டவராக மாற்றும். தாய்பாசத்தில் மித மிஞ்சி இருப்பார் 

அதே சமயம் வீடு வண்டி வாகனம் உறவினர் படிப்பு கால்நடை வளர்ப்பு பிராணி சுக போகங்கள் சார்ந்த வகையில் ஒரு வருமானத்தை தரும் விதத்தில் அமைவதும் இதே 1 4 சேர்க்கையாகும்  

மேஷத்திற்கு செவ்வாயும் சுப வளர்பிறை சந்திரனும், ரிஷபத்திற்கு சுக்ரனும் சூரியனும், கடகத்திற்கு சுக்ரனும் சந்திரனும், சிம்மத்திற்கு சூரியனும் செவ்வாயும், கன்னிக்கு குருவும் புதனும், துலாத்திற்கு சுக்ரனும் சனியும், கும்பத்திற்கு சனியும் சுக்ரனும், மீனத்திற்கு குருவும் புதனும் இணைந்து லக்ன 1 4 7 10 3 11 ல் இருப்பது இந்த பலனை கூடுதலாக தரும். 6 8 12 ல் இருப்பது சிறப்பு கிடையாது. 

மிதுனத்திற்கும் தனுசிற்கும் 1 4 அதிபதியாக ஒரே கிரகம் வருவதால் இயல்பாகவே இந்த குணம் இவர்களுக்கு இருக்கும். பாவ தொடர்பு பெறாமல் 1 4 7 10 3 11ல் இருப்பது நன்மை. #padmahazan 

விருச்சிகம் மற்றும் மகரத்திற்கு இந்த சனியும் செவ்வாயும் சேர்க்கை பெறுவதும் பிரச்சனை தரும் அமைப்பு. பலன் தராமல் போகும். 

சுக்ரனும் புதனும் செவ்வாயும் ஆட்சி நட்பு உச்சம் பெற்று இத்தகைய 1 4 சேர்க்கை பெறுபவர்கள் மிக யோகமாக படிப்பு அல்லது சொகுசு வாழ்க்கை அல்லது நிலச்சேர்க்கை கொடுத்து மிக நல்ல வாழ்வை தரும். 

மற்றொரு அமைப்பாக இந்த இணைவில் இருக்கும் 1 4 அதிபதி பகை நீசம் பெற்றாலோ சனி பார்வை ராகு இணைவை பெற்றாலோ யோகம் செயல்படாமல் போகும். 

கிராமங்களில் பிறந்து கண்ணுக்கு எட்டியவரை நிலங்களை பெற்று, சொந்த பந்தம் சூழ வளர்த்து கால்நடைகளோடு விளையாடி, உயர் படிப்பிற்காக வெளியூர் போவாருக்கு இந்த சேர்க்கை நிச்சயமாக இருக்கும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY 
WHAT APP 8300 620 851. 

#padmahazan



நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...