Sunday, February 20, 2022

நீச வக்ர புதன் தரும் சுப பலன்


பிற கிரக நீசபங்கத்தை விட சற்று கூடுதலான நீசபங்கம் பற்றிய புரிதல் புதன் மீது எனக்கு உண்டு. 


இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு UPSC தேர்வாகி மத்திய அரசின் IAS IPS இணையான அதிகார அந்தஸ்து கொண்ட ஒரு அதிகாரியின் நேர்காணல் ஒரு தனியார் ஊடகத்தில் வந்தது. 


அவரது வாழ்க்கையின் சிறு வயதில் பள்ளி படிப்பில் ஆர்வம் இல்லாமல் படிப்பு சரியாக ஏராமல், இன்னும் சொல்ல போனால் படிப்பில் நாட்டமே இல்லாமல் லாட்டரி விற்பது போன்ற சிறு சிறு வேலை பார்த்து வந்து உள்ளார். 


தனியார் டுடோரியல் கல்லூரியில் 8 10 12 படிப்பை முடித்து சொற்ப மதிப்பெண்ணோடு 500+ / 1200 மதிப்பெண்ணோடு கல்லூரியில் சேர்கிறார். BA ENGLISH மட்டுமே வேறு வழியில்லாமல் அந்த அரசு கல்லூரி அவருக்கு சீட் தருகிறது. டிகிரி கிடைத்து உள்ளது.


இதை எல்லாம் ஒரு பாடத்தை குறைந்தது 100 முறை வாசித்தால் மட்டுமே அவரது ஞாபகத்தில் இருக்குமாம் அதோடு பாடம் சார்ந்த புரிதலும் வருமாம். (நினைத்து பார்க்கவே முடியாத ஒரு விஷயம்). 


இத்தனை DRAWBACK களை கொண்ட அவர் முதன் முதலில் UPSC தேர்வில் எழுதும் போது 16 பக்கங்களை மட்டுமே எழுத முடிந்ததாம், மொத்தமாக 25 பக்கங்களை கொண்ட தாள். மற்றவர்கள் 25 பக்கங்களை முடித்து ADDITIONAL SHEET வாங்கி கொண்டு இருந்தார்களாம். 


4 முறை UPSC தோல்வி பிறகு அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.


இதை எல்லாம் அவர் சொல்ல சொல்ல எனக்கு நினைவில் வந்தது... 


புதனின் நீசபங்கம்... மேலே அவர் சொன்னவை அனைத்தும் நீசமான புதன் தரும் பலன்கள். 


கடந்த நூற்றாண்டின் போற்றபட கூடிய விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இளம் வயதில் பேச்சு வராது, கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை ஆனால் இன்றைய இயற்பியல் இவர் இல்லாமல் இல்லை. 


Mr.bean என்ற கதாபாத்திர நாயகன் ரோவன் அக்கிட்ஷன், இயல் வயதில் பேச முடியாதவர், பக்கம் பக்கமாக வசனம் பேச முடியாதவர், சரளமான பேச்சில் பிரச்சனை கொண்டவர் ஆனால் அவரது முக உடல் பாவனையை உலகத்தை சிரிக்க வைத்தது. நகைச்சுவையும் புதனே. #padmahazan 


ஒருவருக்கு புதன் கெட்டாலும் நீசபங்கம் சுபத்துவம் வக்ரம் போன்ற மாற்று வழியில் அவர் வலு பெற்றால் ஒரு குறையை உங்களிடம் வைத்து அவரது மற்றொரு விஷயத்தில் உங்களை கொடி கட்டி பறக்க வைப்பார். 


2020 வரை யாரிடமும் அவ்வளவாக பேசாமல், "அமைதி அமைதி அமைதியோ அமைதி அமைதிகெல்லாம் அமைதி "னு இருந்த நான், கடந்த இரு வருடங்களில் பலருக்கு மணிகணக்கில் ஜோதிடம் பேச வைத்ததும், எழுத வைத்ததும் இதே புதன்தான். நீச பலனும் உண்டு நீசபங்க பலனும் உண்டு. 


எப்படி பார்த்தாலும் நீசபங்கமோ சுபத்துவமோ முதலில் புதன் MGR போல மூன்று முறை அடி வாங்கி விழுந்து ஜாதகனை பதம்பார்ப்பார், பின் பறந்து பறந்து அடித்து ஜாதகனை பிரகாசிக்க வைப்பார்.புதனின் தசா புத்தி வர வேண்டும். 


#padmahazan #புதன்




No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...