திருமணம் என்பது ஜாதகத்தில் 1 2 5 7 இப்படி பல பாவகங்களின் ஒட்டு மொத்த கூட்டு பலனே. இதில் எது பலவீனமான உள்ளதோ அந்த பாவகம் சார்ந்த சாதகமற்ற பலன் திருமண வாழ்க்கையில் இருக்கும்.
கீழே உள்ள ஜாதகத்தை பாருங்கள்.
மகர லக்னம். களத்திர காரகன் சுக்ரன் திக் பலத்தை இழந்து நீச அஷ்டம சூரியனோடு இணைந்து, பாபத்துவ சனியின் பார்வையிலும், நீச செவ்வாய் பார்வையிலும், குரு பார்வையிலும் உள்ளார். சுபத்துவத்தை விட பாவத்துவம் மிகுதியாக உள்ளது.
ஏழுக்குடைய சந்திரன் தேய்பிறையாகி லக்னாதிபதி சனியோடு அஷ்டத்தில் இணைவது அவ்வளவு சிறப்பு கிடையாது.
தேய்பிறை பாவர் சந்திரனோடு இணைந்த சனி குடும்ப வீட்டை பார்ப்பதும் குடும்ப பாவகத்தை வலுஇழக்க வைக்கும்.
புத்திர காரகன் குரு பகை பெற்று வலுகுறைந்து திக் பலத்தை இழக்கும் நிலையில் ஆறில் மறைந்து, ஐந்தாம் அதிபதியும் பாவத்துவம். ஐந்திற்கு சனி பார்வை.
கால புருஷ மீனத்தில் கேது நின்று கேதுவிற்கு எந்த பாவர்களது தொடர்பும் இன்றி, 12 இடமான மோட்ச ஸ்தானத்திற்கு குரு தன் வீட்டை தானே பார்த்து சுபத்துவமாக்கி , தற்போதைய குரு தசா இவருக்கு ஆன்மீக அறப்பணி, கடவுள் பற்று வழியில் கொண்டு செல்ல உள்ளது.
சேர்ந்த கர்மாவை கழித்து மோட்சத்தை பெறும் ஜாதக அமைப்பு இவை.
No comments:
Post a Comment