🍁 கோட்சாரத்தில் அள்ளி தருவதும் கில்லி தருவதுமான அஷ்டவர்க்க முறை 🍁 #hazan
அஷ்டவர்க்கம் என்பது ராகு கேது தவிர்த்த பிற ஒளிகிரகங்கள் மற்றும் பஞ்சபூத கிரகங்களான சூரியன் முதல் சனி வரையான கிரகங்கள் ராசி கட்டத்தில் அவர் இருக்கும் ராசிகளில் அந்தந்த கிரகங்கள் பெற்ற மொத்த பரல்களை 12 ராசிகளில் பங்கிட்டு கொள்வதே அஷ்டவர்க்கம் முறை.
என் பார்வையில் அஷ்டவர்க்கம் முறை என்பது முழுக்க முழுக்க கோட்சார பலனிகே. #padmahazan
12 ராசிகட்டத்தில் எந்தெந்த ராசிகளில் 28ற்கும் அதிகமாக பரல்களை பெற்றுள்ளதோ அந்த ராசிகளில் கோட்சார கிரகங்கள் சஞ்சாரத்தின் போது அந்த ராசி உங்களுக்கு எத்தனையாவது பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலன் அதிகமாக கோட்சார கிரகம் தரும்.
உதாரணமாக தற்போது மீனத்திற்கு லாபத்தில் சனி பகவான் கோட்சாரத்தில் நின்று லாபத்தை கொடுத்தாலும் அனைவருக்கும் ஒரே மாதிரி லாபத்தை தராது. #padmahazan
மீன ராசி காரர்கள் ஜாதகத்தில் எவருக்கெல்லாம் சனி சுய அஷ்டவர்க்கத்தில் மகரத்தில் 6 மேல் 7 8 பரல்கள் பெற்று உள்ளாரோ அவங்களுக்கு லாபம் நன்றாக இருக்கும். அதே சமயம் மகர ராசியும் 26 மேல் பரல்கள் கொண்டு இருக்க வேண்டும்.
19 முதல் 23 பரல்கள் பெற்று இருக்கும் ராசிக்குள் சஞ்சரிக்கும் குறைந்த சுய பரல்கள் பெற்ற கிரகம் குறைவான கோட்சார பலனையே தரும். #padmahazan
சிலருக்கு குரு பலம் வருகிறது திருமணம் நடக்கும் என்ற கணிப்பில் கோட்சார குரு நின்ற ராசியில் குரு பெறும் சுய பரல்கள் 0 1 2 ஆக இருந்தால் நின்ற வீடு கடகமாகவே இருந்தாலும் குரு தரும் கோட்சார சுப பலன் குறையும் அல்லது கிடைக்காது.
கோட்சார கிரகங்கள் குரு சனி ராகு செவ் போன்ற கிரகங்கள் கோட்சாரத்தில் ஒரே ராசிக்காரர்களுக்கு சிலருக்கு கில்லி தருவதும் சிலருக்கு அள்ளி தருவதும் நிர்ணயிப்பது அஷ்டவர்க்கமும் சுய பரல்களுமே.
கோட்சார கிரகங்கள் கொண்டு பலனை நிர்ணயிப்பதில் அஷ்டவர்க்கம் அதிகமாக கை கொடுக்கும்.
மேலும் சில குறிப்புகளை அடுத்த பதிவில் காண்போம்...
🤩 #padmahazan 🤩
No comments:
Post a Comment