ஒரு நீச கிரகம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் நீசபங்கம் ஆகும் போது அதன் பலன் அளவுக்கு அதிகமாக ஜாதகருக்கு கிடைக்கும்.
மாறாக நீசபங்கம் ஒரு வழியில் மட்டுமே கிடைக்கிறது என்றால் அந்த கிரகம் முன்னாள் சொன்ன அளவிற்கு அளவு அதிகமாக பலனை தராமல் குறைந்த அளவு பலனை தரும்.
உதாரணமாக ஒருவர் கீழே விழுந்து விட்டார் அவரை மற்றொருவர் தூக்குகிறார், தூக்கி விட்ட அவர் கீழே விழுந்து அடிபட்டதோடு நடக்கிறார் அது ஒரு வழியில் மட்டுமே கிடைக்கும் நீசபங்கம். நீச பலன் இல்லாத குறைந்த பட்ச பலனை தரும். #padmahazan
அதே நபர் கிழே விழுகிறார் ஒருவருக்கு பதிலாக மூன்று நான்கு பேர் அவரை தூக்கி விடுகிறார்கள் அதான் இவ்வளவு பேர் இருக்கோமே அடிபட்ட இவரை தூக்ககிட்டே பொய்டலாம்னு போகுறது என்பது ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் நீசபங்கம் ஆகும் கிரகத்தின் பலனாக இருக்கும். அதிகமாக தனது பலனை இப்படிபட்ட கிரகம் தரும்.
1).நீசன் உச்சனோடு இணைவது,
2).நீசன் வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெறுவது,
3).நீசன் ஒளி பொறுந்திய சந்திரன் கேந்திரத்தில் இருப்பது,
4).நீசன் வர்கோத்தமம் பெறுவது,
5).நீசன் வக்ரம் பெறுவது,
6).நீசன் ஒன்றிக்கு மேற்பட்ட சுபர்களால் பார்க்கபடுவது,
7).நீசன் பரிவர்த்தனை பெறுவது,
8).நீசன் லக்ன கேந்திரத்தில் இருப்பது,
9).நீசன் திக் பலத்தை அடைவது,
10). நீசன் சுய சாரத்தில் இருப்பது
இப்படி ஒன்றிற்கு மேற்பட்ட வழிகளில் ஒரு நீசன் நீசபங்கம் பெற்றால் அவர் அளவு மீறிய அதிகமாக தனது பலனை தருவார். Master பட jd அளவிற்கு கெத்து காட்டும்.
ஒரு வழியில் மட்டுமே கிடைக்கும் நீசபங்கம் அந்த கிரகத்தை நீசபங்கம் பெற வைத்தாலும் அது முறையாக முழுமையாக பலனை தராது. "..சோனா முத்தா போச்சா.." அப்படினு ஜாதகரை அந்த கிரகம் கேட்கும்.
🤩 #padmahazan 🤩
No comments:
Post a Comment