🍁 சுக்ரன் செவ்வாய் சேர்க்கை பிருகு மங்கள யோகம் தரும் பலன்கள் 🍁 #hazan
நலினமான இளம் கன்னி பெண் சுக்ரன், முரட்டுதனமான 30 வயது ஆண் செவ்வாய். இப்படி இயல்பால் குணத்தால் மாறுபட்ட சுக்ரனும் , செவ்வாயும் இணையும் போது அந்த சேர்க்கை எது மாதிரியான பலனை தரும் காண்போம்.
ஜாதகத்தில் சுக் செவ் சேர்க்கை இருந்தால் வாழ்க்கை துணை போராட்ட குணம் கொண்டவங்க, எதையும் தைரியமாக எதிர்த்து முன்னின்று செய்யும் குணத்தை கொண்டவங்க, ஜாதகரின் லக்னம் லக்னாதிபதி கெட்டால் ஜாதகர் துணைக்கு அடங்கி போக வேண்டி இருக்கும். #padmahazan
நிலம் சார்ந்த லாபம் நன்றாக இருக்கும், பூந்தோட்டம் வளர்ப்பில் ஆர்வம் இருக்கும்.
ஜாதகரின் சகோதரர் கலையுணர்வு கொண்டவர், சினிமா, பூக்கடை, துணிக்கடை, பட்டு தொழில், அழகு நிலையம் போன்ற இடங்களில் தொழில் செய்வார் அல்லது வேலைக்கு இருப்பார். சகோதரனுக்கு உண்டான காதல் சம்பந்தப்பட்ட ஜாதகரிடம் பெரிய தாக்கத்தை தந்து இருக்கும்.
ஜாதகருக்கு காதல்,திருமணம், தாம்பத்தியம், அன்னோன்யம், எதிர்பாலின ஈர்ப்பு சார்ந்த விஷயத்தில் அவசரதனம் இருக்கும், முரட்டுதனம் இருக்கும். ஈர்ப்பும் கிளர்வும் அதிகமாக இருக்கும். #padmahazan
பொதுவான இந்த சேர்க்கை குரு அல்லது சந்திரனின் பார்வையில் இருப்பது பொறுமையும், சமூதாயம் சார்ந்த பொறுப்பும் கொடுத்து நல்ல முறையில் அனைத்தும் அமைத்து கொடுக்கும்.
மேஷம் விருச்சிகம் மகரத்தில் இந்த சேர்க்கை நிலம் சேர்க்கை சகோதர ஆதரவை கொடுத்து தாமத திருமணம் அமைத்து கொடுக்கும். ஆடம்பர வாழ்வை குறைக்கும்.
மீனம் ரிஷபம் துலாம் மிதுனம் தனுசு கும்பத்தில் இந்த சேர்க்கை துணை வழியான நில சேர்க்கை செல்வாக்கை தரும். நீசமானாலும் இருவரில் ஒருவர் திக் பலம் பெற்று கடகத்திலோ கன்னியிலோ இருக்கும் போது சுக்ர செவ்வாய் சேர்க்கை யோகத்தை தரும். #padmahazan
இருவரின் இணைவில் சனி ராகு இணைவு, சனியின் பார்வை பெற்று இருக்கும் போது ஜாதகருக்கு திருமணம் தாம்பத்தியம் நில சேர்க்கை சார்ந்தவற்றில் கெடுபலன் கூடுதலாக இருக்கும்.
மேலே சொன்னவை அவரவர்கள் ஜாதகத்தில் பிற கிரகங்கள் இருப்பை பொறுத்து பலன் கொஞ்சம் கொஞ்சம் மாறுபடும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY.
WHATS APP 8300 620 851.
🤩 #padmahazan 🤩 #செவ்வாய் #சுக்ரன் #யோகம் #பிருகு #மங்கள #யோகம்
No comments:
Post a Comment