Monday, December 30, 2024

அரசு பணி அரச பதவி கிரக நிலைகள்

🍁  அரசு பணி அரச பதவி கிரக நிலைகள் 🍁 #hazan 

⚡️சூரியன் அரசு பணி , அரச பதவி காரக கிரகம்.

⚡️ஒருவர் அரசு பணி, அரச பதவி அடைவதற்கு சூரியன் என்கிற ஓர் கிரகம் மட்டுமே காரணமாக இருக்காது. 

⚡️மற்ற பிற கிரக நிலைகளின் கூட்டு பலன்தான் ஒருவருக்கு அரசு பணி அரச பதவி பெற கூடிய சூழல்.  சூரியனை மட்டுமே அதற்கு காரணம் என்பது சரியாக வராது. 

⚡️சூரியன் ஆட்சி உச்சம் பெறும் ஆவணி மாதம் மற்றும் சித்திரை மாதம் பிறக்கும் அனைவரும் அரசு பணி அல்லது அரச பதவியை பெறுபவராக இருப்பார்களா என்றால் ,  அந்த மாதத்தில் பிறந்த அனைவருக்குமே  அப்படி இருக்காது .

⚡️சூரியன் உச்சமாகி , தனியாரில் வேலை பார்த்து கொண்டு  அல்லது வேலையே கிடைக்காமல் சொந்தமாக சிறு தொழில் செய்யும் ஜாதகங்களை பார்த்து உள்ளேன். #padmahazan ( சிறு தொழில் செய்ய காரணமும் சூரியன் தான் அதை  பதிவின் இறுதியில் சொல்கிறேன் ) 

⚡️ சூரியன் ஆட்சி உச்சம் பெறுகிறது என்றால் சூரியனின் சிம்ம வீட்டு ஆதிபத்தியம் வலுப்பெறும் என்று அர்த்தம். 

⚡️சூரியன் எத்தகைய பலத்தோடு இருந்தாலும், லக்னத்திற்கு 1 2 5 4 7 9 11 10 ல் இருந்தாலோ , 3 6 8 12 மறைந்தாலும் சூரியன் மீது குரு பார்வை , சுக்ர இணைவு, அல்லது #padmahazan  சந்திர ராசிக்கு கேந்திரம் என்கிற 4 7 10 சூரியன் இருந்தாலும் சூரிய தசா புத்தி காலத்தில் அரச ஆதரவு உண்டாகும். 

⚡️சூரியன் பலம் குறைந்து பின் வேறு வழிகளில் பலம் பெற்றால் , ராகு கேது கிரகணம் போன்ற நிலையில் அவயோக தசா நடந்தால் நேரடியான அரச பணி இல்லாமல் ஒப்பந்த ஊழியர் , மாநகராட்சி கான்ட்ரக்டர் , சுகாதார துறை , அல்லது 5 வருடம் பதவி இருக்கும் ஊராட்சி நகராட்சி பதவியை தரும். 

⚡️அதிகாரம் இல்லாத பணியை , லக்னம் லக்னாபதிபதி ஓரளவு பலம் பெற்று , பத்தாம் பாவகம் வலு இழந்த நிலையில் ஆறாம் பாவகம் & சூரியன் அரச வேலையாளாக ஜாதகரை மாற்றுவார். #padmahazan பொது பணித்துறை , தபால்துறை , மின்சார வாரியம் , ரயில்வே , பேருந்து நடத்துனர் , ஓட்டுநர் , வங்கி பணியாளர் , அரசு மருத்துவர் அல்லது நர்ஸ் , அரசு பள்ளி ஆசிரியர் மாதிரியான அதிகாரம் இல்லாத வேலையில் மாத சம்பளத்தில் சூரியன் உட்கார வைப்பார். 

⚡️அதிகாரம் கொண்ட உயர் நிலை பதவி அமர்வதற்கு , மேனேஜர் , ஊராட்சி மன்ற தலைவர் , மேயர் , தலைமை ஆசிரியர் போன்ற பதவி அடைவதற்கு பத்தாம் பாவகம் வலுபெற்று லக்னமும் லக்னாதிபதி மற்றும் சிம்மம் நன்றாக பலம் பெற்று யோக தசாக்கள் நடைமுறை இருக்க வேண்டும். 

⚡️தர்மகர்மாதிபதி யோகம் அரசு பணி ,  அரச பதவி பெறுவதற்கு மிக முக்கியமான ஒன்று.  பௌர்ணமி யோகம் , பஞ்ச மகா புருஷ யோகத்தில் உள்ள சச யோகம் ருசக யோகம் ஹம்ச யோகம் #padmahazan மாளவியா யோகம் பத்ர யோகம் போன்றவை அந்த அந்த  கிரகத்தின் துறையில் அரசு பணிக்கு அரச பதவிக்கு கொண்டு செல்லும். இந்த யோகத்தின் தசா நடைமுறை வரும் போது அங்கே நற்பலன் உண்டாகும். 

⚡️அரசு பணியாளர் , அரச உயர் பதவி அடைவதற்கு லக்னம் லக்னாதிபதி பூர்வ புண்ணிய பாவகம் பாக்கியாதிபதி நிலை #padmahazan , 6 10 பாவக அதிபதிகள் நிலை , ஜாதகத்தில் வர உள்ள அடுத்தடுத்த தசா பொறுத்துதான் பலன் இருக்கும். 

⚡️சூரியன் உச்சமாகியும் , அங்கே லக்னாதிபதி பலம் இழந்து சிம்மத்தில் பாவிகள் இருந்து , அவயோக தசா நடந்தால் , அரச ஆதரவு  கிடைக்காது. பத்தாம் பாவகத்தின் குறைவான வலு ஏற்ப ஜாதகர் சுயமாக சிறு தொழில் செய்து கொண்டு கஷ்டமான சூழலுக்கு மத்தியில் வாழதான் வைக்கும்  ஆனாலும் சூரியன் உச்சம் பெறுவதால் சுயமாக ஒன்றை செய்து கொண்டு இருப்பார். 
#padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...