Saturday, December 28, 2024

முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் ஜாதகம்

🍁 முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 🍁 #hazan 

சில தினம் முன்பு தவறிய இந்திய முன்னாள் பிரதமர் ஜாதகம். 


⚡️தனுசு லக்னம். கடக ராசி. லக்னாதிபதி குரு பாக்கிய ஸ்தானமான ஒன்பதில் சிம்மத்தில் இருக்க , ஒன்பதாம் அதிபதியான சூரியன் பத்தில் உச்ச புதனின் இணைவில் தர்ம கர்மாதிபதி யோகத்தில் உள்ளார்.

⚡️புதன் பத்தில் சூரியனோடு இணைந்து உச்சமாகி பங்கபட்ட பத்ர யோகமும் புதாதித்ய யோகமும் #padmahazan தர்மகர்மாதிபதி யோகமும் கொடுத்து பொருளாதார உயர் படிப்பு அரசியல் உயர் பதவி இறுதியாக இந்திய பிரதமர் என்கிற உயர் பொறுப்பில் அமர வைத்தது. 

⚡️லக்ன பூர்வ புண்ணிய அதிபதி செவ்வாய் எட்டில் மறைந்து நீசமும் பெற்று ஆட்சி பெற்ற சந்திரன் இணைவில் நீசபங்க ராஜயோகமும் கூடவே சுக்ரன் இணைவில் விபரீதராஜயோகத்தை பெறுகிறார். #padmahazan இவருக்கு கிடைத்த பிரதமர் பதவி சோனியா காந்தி செல்ல வேண்டிய பதவி , சில காரணங்களால்  இவருக்கு கிடைத்தது. 

⚡️நீசமான ஐந்தாம் அதிபதி செவ்வாய் மீது 2மிட சனி பார்வை இவர் மீதான தனிபட்ட விமர்சனத்திற்கு காரணம். பேச்சு சார்ந்த , அதிகாரம் சார்ந்தவற்றில் தனிபட்ட ஆளுமை அதிகார செயல்பாடுகளை காட்ட முடியாத நிலை ஜாதகரை வைத்தது. 

⚡️ ராகு தசாவில் ராகுவிற்கு 6 8 உள்ள புத்திகள் அனைத்திலும் பிரதமராக 10 வருடம் இருந்தவர். செவ்வாய் புத்தி மட்டும் கட்சி தோல்வி தழுவி பதவியை விட வைத்தது. அதற்கு பிறகான குரு தசா முன்னாள் பிரதமர் என்கிற அந்தஸ்தோடு 92 வயது வரை கொண்டு சென்றது.

#padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...