⚡️வேலை , தொழில் , பூர்வீக சொத்துகள் வழியாக கிடைக்கும் பணம் எவ்வளவு வந்தாலும் கையில் தங்காமல் போகும் கிரக நிலைகள் பார்க்கலாம்
⚡️பாக்கிய ஸ்தானம் ஒன்பதாம் வீட்டில் சனி செவ்வாய் ராகு கேது இருப்பது. பாக்கியம் (9) மற்றும் லாப (11) ஸ்தான அதிபதி பலம் இழந்து இருப்பது.
⚡️தன ஸ்தானம் 2 வீட்டில் சனி செவ்வாய் ராகு கேது இருப்பது. தன ஸ்தான இரண்டாம் அதிபதி 6 8 12 நிற்பது அல்லது பகை நீசம் மாதிரியான பலம் இழந்து நிற்பது. குரு 6 12ல் பகை நீசம் கிரகணத்தில் பலம் இழப்பது.
⚡️விரையாதிபதி 12 வீட்டு அதிபதி வலுவான ஆட்சி உச்சம் பெற்று பலம் பெறுவது அல்லது 12 ல் #padmahazan அதிகபடியான கிரகங்கள் மறைவது இவை அனைத்தும் பணம் சேமிக்க தடையாக இருக்கும் கிரக நிலைகள்.
⚡️ 6 8 பாவகம் அதிகபடியான வலுவில் தசா நடத்தினால் நிச்சயமாக கடனை ஏற்படுத்தும் / அல்லது மருத்துவ செலவு தரும் அதற்கு இணையாக மறுபக்கம் தொழில் வருமானம் குறையும் தொழில் போட்டிகள் கூடும்.
⚡️கோடி கணக்கில் பணம் சம்பாதித்தாலும் இது போன்ற கிரக நிலைகள் ஜாதகரை நிலையான செல்வ சேர்க்கை தராது. ஏதோ ஓர் வழியில் பணத்தை இழப்பார்கள். #padmahazan
⚡️ லக்னாதிபதி பலம் இழந்தாலும் வலு குறைந்து காணப்பட்டாலும் ஜாதகர் பண புழக்கத்தில் சொதப்பலான முடிவுகளை எடுப்பார்.
⚡️ வேலைக்கு செல்ல வேண்டிய ஜாதகத்தை வைத்து கொண்டு தொழில்தான் செய்வேன் பிடிவாதமாக இறங்கி பெரிய பண பிரச்சனை கடன் பிரச்சனை சிக்கி கொள்வார்கள்.
⚡️ தெரிந்தவர்களுக்கு பணத்தை கொடுத்து ஏமாறுவார்கள் அல்லது கடனாக மற்றவர்களுக்கு கொடுத்து திரும்ப பெற முடியாதபடி இருப்பார்கள். #padmahazan போதை அடிமை அல்லது பெண் ஆசை பணத்தை இழப்பார்கள்.
⚡️இது போன்ற கிரக நிலை கொண்டவர்கள் நிலையான சேமிப்பாக பணத்தை வைக்க முடியாது.
⚡️ஓரளவு பணம் சேர்ந்த உடன் நிரந்தரமான சேமிப்பு ( Fixed Deposit ) , வெள்ளி தங்க நகை , வண்டி வாகனம் #padmahazan , வீட்டில் உள்ள பர்னீச்சர் போன்ற பொருட்களாக சொத்துகளாக மாற்றி கொள்வது நல்லது.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment