Thursday, December 26, 2024

கர்ம திரிகோணம் ~ தனம் பணம் வருமானம் வேலை ஜீவனம்

🍁 கர்ம திரிகோணம் 🍁 #hazan 

( தனம் பணம் வருமானம் வேலை ஜீவனம் )

⚡️2 6 10 பாவகங்கள் கர்ம திரிகோணம் அல்லது பொருள் திரிகோணம். 

⚡️2 வீடு தனம் பணம் கையில் இருக்கும் சேமிப்பு வரவு செலவு ரொட்டேஷன் 

⚡️6 வேலை சர்வீஸ் சேவை செய்ய அற்பணிப்பு  அடிமை பணி கடன் படுதல் 

⚡️10 தொழில் பதவி ஜீவனம் வருமானம் முதலாளி பெரும் பொருள் சேர்ப்பது. 

⚡️2 6 10 என்றாலே பணத்தின் பின்னால் ஓடுவதுதான் பணத்தை பொருளாக மாற்றுவது... இதில் எந்த ஒன்று வலுவாக உள்ளது என்பதை பொறுத்து ஒருவரின் பணம் பொருள் நிலையை கணக்கிடலாம். 

⚡️மாதம் இவ்வளவு வருமானம் வரனும் , மாதம் மாதம் இவ்வளவு சம்பளம் வாங்கனும் , #padmahazan மாதம் மாதம் இவ்வளவு பணத்தை சேமிக்கனும் , வரவு செலவில் வைக்கனும் அப்படிங்கிற எண்ணத்தை தருவது 2 6 10 பொருள் திரிகோணம். 

⚡️மனிதனை வேலையிலோ தொழிலிலோ முழுமையாக ஈடுபடவைப்பது 2 6 10 தான். 

⚡️சிலர் காலை 7 மணிக்கு கடை திறந்து , இரவு 11 மணி வரை கடையில் இருப்பாங்க முதலாளியாக லட்சத்தில் பணத்தை போட்டு எடுப்பார்கள் தொழில் விட்டு மனசு போகாது. #padmahazan சிலர் அரசாங்க நிறுவனத்தில் 40k சம்பளத்தை  Over Time பார்த்து கொண்டே 70k வாங்குவார்கள். நிரந்தரமாக ஓர் நல்ல வருமானம் அமைந்து வேலை  அல்லது தொழில் விட்டு மனசு வேறு எங்கும் மாறாது. சிலர் பதவி பொறுப்பு இல்லாமல் தூங்க மாட்டார்கள். அலுவலக பொறுப்பான பதவி , கட்சி பதவி , அதிகார பதவி விரும்புவார்கள். இதை பண்ண வைப்பது 2 6 10 கர்ம  திரிகோணம்தான். 

⚡️2 6 10 ல் அதிகபடியான கிரகங்கள் இருப்பது , 2 6 10 அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனையாக இருப்பது #padmahazan , 2 6 10 ல் குரு இருப்பது அல்லது இயற்கை சுபர்கள் இருப்பது போன்றவை தொழில் வேலை வருமானம் வலுபடுத்தி தரும்...

⚡️இதில் நின்ற கிரக தசாவோ அதிபதிகள் தசாவோ ஜாதகனை பொருள் பணம் சம்பாதிக்க தூண்டி விடும். 

⚡️இந்த பொருள் திரிகோணம் ஒருவரை பொருள் பணம் வருமானம் சேர்க்கதான் உதவுமே தவிர பெரும் பணக்காரர் கோடீஸ்வரர் ஆக மாற்றாது. அந்த நிலை எட்ட 2 5 8 9 10 11 அதிபதிகள் வலுவாக வேண்டும். #padmahazan

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...