⚡️லக்னத்திற்கு 6 8 12 அதிபதிகள் அதே மறைவு ஸ்தானங்களில் 6 8 12 வீடுகளில் இணைந்து இருப்பது பார்த்து கொள்வது பரிவர்த்தனையில் இருப்பது போன்றவை விபரீத ராஜயோகம்.
⚡️விபரீத ராஜயோகம் என்ன பலனை தரும்..?
⚡️ பலர் திறமையும் அனுபவமும் வைத்து கொண்டு வாய்ப்புக்கு தேடும் போது இந்த யோகம் குறுக்கு வழியில் வாய்ப்பை கொடுத்துவிடும்.
⚡️பங்குசந்தை , வெளிநாட்டு முதலீடு , தூர தேசத்தில் பெரிய ஆளாக இருப்பது , அரசியல் பி"னாமி இருப்பது , வெளியே தெரிய கூடாத தொழில் செய்வது , #padmahazan பணம் எங்கிருந்து வருகிறது என்று வெளிப்படையாக கூற முடியாத நிலையில் இருப்பது , பிறரை மி*ரட்டி பணம் கேட்பது , பிறர் வாய்ப்பை தனக்கு பயன்படுத்தி கொள்வது, பண மோ*சடி செய்வது மாதிரியான பலனை தந்து கொண்டு இருக்கும்.
⚡️குறுக்கு வழிகளில் பணம் சேர்க்க வைக்கும் , பிறரை நேரடியாக அல்லது மறைமுகமாக ஏமாற்றி ஜாதகரிடம் பணத்தை கொண்டு வரும் , நேரடியாக எந்த அங்கீகாரம் பெறாமல் பெயர் புகழ் கிடைக்காமல் மறைமுகமாக பணம் பெயர் புகழ் ஓர் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கிடைக்கும்.
⚡️ விபரீத ராஜயோகத்தில் சுபகிரகங்கள் சம்மந்தபட்டால் யோகம் பெரிய அளவிலான பணம் பொருள் மறைமுகமாக அரசியல் அதிகாரம் கொடுக்கும். #padmahazan திடீர் பெயர் புகழ் பிரபலமாக மாற்றி விடும். வாரிசு இல்லாத கேட்பார் அற்ற சொத்து பணம் உயில் இடம் கிடைக்கும்.
⚡️பாவ கிரகங்கள் உண்டாகும் விபரீத ராஜயோகம் தீராத நோய் , மருத்துவ அறுவை சிகிச்சை, மருந்து இல்லாத வியாதி, மரபணு கோளாறு குறைபாடு , auto immune disease , விபத்தில் உடல் உறுப்பை இழந்து ஊனம் ஆவது , சிறை தண்டனை , விபத்தில் படுத்த படுக்கையாக கிடப்பது மாதிரியான மோசமான சூழலுக்கு கொண்டு செல்லும்.
⚡️ திடீர் வாய்ப்பை ஏற்படுத்தி அதோடு ஓர் பெரிய சிக்கலை கூடவே வைத்து விடும்.
⚡️இதெல்லாம் அனுபவிக்க லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்றால் வாழ்க்கை அப்படிங்கிற கதை கந்தலாகி விடும். #padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment