⚡️லக்னாதிபதி எந்த பாவகத்தில் உள்ளாரோ அந்த பாவக பலனில்தான் ஜாதகர் பெரிய ஈடுபாட்டை காட்டுவார். அடுத்து லக்னாதிபதி காரகத்துவம் மீது அதீத ஆசை பற்று கொள்வார். அந்த பாவக ரீதியிலான மேன்மை / சிக்கலை ஏற்படுத்தி கொள்வார்.
⚡️லக்னாதிபதி நின்ற பாவகம் ஜாதகரை அவரை பற்றிய தகவலை கொடுத்து " அவர் யார்..? எப்படிபட்ட நபர்.? " என்று குறிப்பிட்டு காட்டிவிடும்.
⚡️உதாரணமாக ஒருவருக்கு சிம்ம லக்னம் ஒன்பதில் சூரியன் உச்சம் பெற்றால் ஜாதகர் தந்தை மீது மரியாதை கொண்டவர் தந்தை சொத்து மீது பற்று கொண்டவர் , தான் ஓர் தலைவனாக செயல்பட கூடிய திறனை மரியாதை வளர்த்து கொண்டவர் , #padmahazan அரசாங்கம் அரசியல் மாதிரியான அதிகாரத்தை தேடி செல்பவர் என்று அர்த்தம். தந்தையை பாதிக்கும்.
⚡️ கன்னி லக்னம் 12ல் புதன் என்றால் ஜாதகர் தூர தேச வாழ்வை விரும்பி செல்பவர் சொந்த மண்ணை விட்டு தூர இடம் சென்று அல்லது சொந்த ஊரில் ஏற்றுமதி வருமானம் ஈட்டும் ஆர்வம் கொண்டவர் அந்நிய இடத்தில் தன் கௌரவம் அந்தஸ்தை ஏற்படுத்தி கொள்பவர் நீண்ட நேர ஓய்வை விரும்புபவர் புத்தகம் படிப்பு நண்பர்களு மாமன் சார்ந்த செலவு செய்பவர். சில நிலையில் நஷ்டமும் அமைந்துவிடும்.
⚡️ விருச்சிக லக்னத்திற்கு 10ல் செவ்வாய் என்றால் ஜாதகர் தொழில் செய்பவர் , அதிகார பதவியை அல்லது அரச பதவி தேடி கொள்பவர் , தான் செய்ய வேண்டிய செயல்களை சரியாக செய்யும் கடமை உணர்வை கொண்டவர். #padmahazan நில சேர்க்கை உடல் ஆரோக்கியம் மீது ஆர்வம் கொண்டவர்.
( இவை அனைத்தும் தனித்த நிலையில் உள்ள பலன்கள்தான் , பிற கிரக இணைவு பார்வை இதன் பலன் இன்னும் சிறப்பாக மாறும் அல்லது முழுமையாக பலம் இழந்து பலன் இல்லாமல் போகும் )
⚡️12 லக்னத்திற்கும் லக்னாதிபதி லக்னத்தில் இருப்பது வலுவான அமைப்பு. தன் வாழ்க்கை தானே பார்த்து கொள்ளும் குணம் சுபாவம் கொண்டவராக இருப்பார்கள்.
#padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment