⚡️சூரியன் முழு ஒளி கிரகம் , எப்போதும் மங்காத வெளிச்சம். சனி முழு இருள் கிரகம், தன்னகென ஓர் ஒளி இல்லாத அடர் நீலம் கலந்த கருப்பு இருள் கிரகம். இருவரும் எதிரெதிர் காரகத்துவ குணம் கொண்ட கிரகங்கள்.
⚡️சூரியன் சனி இணைவது , சூரியன் சனி நேருக்கு நேராக ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வது என்பது இருவரையும் கடுமையான பாதிக்கும். அந்த ஜாதகர் வாழ்க்கையும் பாதிக்கும்.
⚡️இளம் வயதில் வரும் சூரிய / சனி தசா புத்தி ~ ஜாதகருக்கு தந்தை உடனான கருத்து வேறுபாட்டை உண்டாக்கும் #padmahazan , அல்லது தந்தையை இளம் வயதில் பிரிந்து வாழ வைக்கும். தந்தை பேச்சை அலட்சியபடுத்துவதாக தந்தை குறை சொல்வார். தந்தை வழி சொந்தம் மற்றும் சொத்து கிடைப்பதில் சிக்கல் வரும்.
⚡️மத்திம வயதில் வரும் சூரிய / சனி தசா புத்தி ~ தொழில் வருமானம் உத்தியோகம் ஆகிய மூன்றிலும் அவமானத்தை தரும், மூத்த அதிகாரிகளால் மன கஷ்டத்தை உண்டாக்கும் ; தொழிலில் தனக்கு கீழே வேலை பார்க்கும் வேலையாட்களின் செயல்பாடுகள் ஜாதகரை எரிச்சலூட்டும். #padmahazan பொறுப்புகள் அல்லது அதிகாரம் மேலே உயர உயர ஜாதகர் நிம்மதி இழப்பார். பொறுமை சோதிக்கும். அரசு அரசியல் உயர் பதவி ஏமாற்றம் விரோதம் ஏற்படும்.
⚡️வயதான காலத்தில் வரும் சூரிய / சனி தசா புத்தி ~ ஆரோக்கிய குறைபாட்டை காட்டும். இதயம் மூளை தண்டுவடம் மூட்டு எலும்பு வலது கண் சார்ந்த வயோதிக பாதிப்பில் வலி வேதனை ஏற்படுத்தும். மருத்துவ செலவு படுக்கையில் ஓய்வு எடுப்பது மாதிரியான சூழலுக்கு வைத்து இருக்கும். தன் மகன் தனக்கு கட்டுபடாத வகையில் வளர்க்கும் சூழலுக்கு பின்னாளில் ஜாதகர் இருப்பார்.
⚡️சூரியன் சனி இணைவில் சுக்ரன் புதன் குரு இணைவது , #padmahazan அல்லது குரு சந்திரன் போன்ற சுப கிரகத்தின் பார்வை தொடர்பில் சனி மற்றும் சூரியன் சனி இருக்கும் போது இவை பலன் மாறுபடும் அல்லது குறைவாக வெளிபடும்.
⚡️ஏதாவது ஓர் சுப கிரகம் சூரியனையும் சனியையும் கெடுபலனை தராதபடி இணைந்து பார்த்து பாதிப்பை குறைக்க வேண்டும்.
⚡️ மேலே சொன்ன எல்லா பலனும் ஒருவருக்கு நடக்காது , வயதிற்கு ஏற்ப சனி சூரிய தசா வரும் நிலை ஏற்ப இதில் பாதிப்பை காட்டும். கூடுதலாக ஆதிபத்திய கிரகத்தின் வலுவை கணக்கில் கொள்ள வேண்டும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment