⚡️லக்னத்திற்கு 12 பாவகம் , அயன சயன போகம் நஷ்டம் விரையம் இழப்பு சிறைபடுதல் மருத்துவமனை சிகிச்சை குறிக்கும் ஸ்தானம்.
⚡️இந்த 12 வீட்டில் சனி நின்றால் பலன் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்...
⚡️சனி மட்டும் தனித்து வேறெந்த கிரக பார்வை கூட இல்லாமல் 12 வீட்டில் இருப்பது நன்மை . ஜாதகர் செலவுகளை குறைத்து கொள்வார் , தேவையற்ற செலவுகளை செய்ய தயங்குவார்கள், குறைவாக தூங்கி அதிகபடியாக உழைக்கும் சம்பாதிக்கும் குணத்தை ஜாதகர் பெறுவார் , #padmahazan தூர தேச வாழ்வை விரும்பாமல் சொந்த ஊரில் அலைந்து திரிந்து தொழில் செய்ய ஆசைபடுவார்கள். வேலை செல்லும் நிலையில் வேலையில் நிம்மதியோ அங்கீகாரமோ கிடைக்காது. இவர்கள் வேலை ஆட்களை வைத்து சிறிய அளவிலான தொழில்களை செய்ய விரும்புபவர்கள், பத்தாம் அதிபதி வலுத்தால் கூடுதலாக தொழில் மேன்மை தரும்.
⚡️ 12 மிட சனி மீது குரு சுக்ர பௌர்ணமி சந் பார்வை குரு சுக்ர பௌர்ணமி சந் இணைவு ஏற்படும் போது நற்பலன்கள் மேலோங்கி தூர தேச வாழ்வை விரும்பி , வளைகுடா நாடுகள் கத்தார் அரேபியா ஏமன் ஈரான் மாதிரியான அரபு நாடுகளுக்கும் நைஜீரியா கானா உகாண்டா மாதிரியான ஆப்பிரிக்க நாடுகளுக்கு சனி கொண்டு செல்வார். சிலரை வெளி மாநிலம் நகர்த்துவார்.
⚡️தூர தேசத்தில் சொந்த தொழில் செய்வது , வேலையாட்களை வெளி நாடுகளுக்கு கொண்டு சென்று விடும் ஏஜென்ஷி , hiring department, தன் பொருட்களை குறிப்பாக மெஷினரி , #padmahazan இயந்திரம், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்வது , கனரக லாரி , மண் அள்ளும் இயந்திரம் போன்ற வாகனங்களில் இரவு பகல் பார்க்காமல் பணம் சம்பாதிக்கும் பலனை சனி தருவார்.
⚡️சனிக்கு சூரியன் செவ்வாய் பார்வை இணைவும் ராகு இணைவும் வர கூடாது. பலன் எல்லாம் ஜாதகரை போட்டு வாட்டும் , கணவன் மனைவி இடையே பரஸ்பர நல்ல உறவை பாதிப்பார் , தேவையற்ற செலவுகளால் பணத்தை இழப்பார் ஜாதகர் , மருத்துவ செலவு அல்லது வழக்குகளால் பண இழப்பை ஏற்படுத்துவார் சனி. மிக கடுமையான நோய் பாதிப்பால் தூக்கமும் பாதிக்கும். ( வயதிற்கு ஏற்ப பாதிப்பை தசா நடத்தும் சனி தருவார் ) வழக்கில் தோற்று சிறை செல்வதை குறிப்பார்.
⚡️ தொழில் நஷ்டம் அல்லது முன்னேற்றம் இல்லாத சிக்கலில் போய் மாட்டி கொள்வார்கள். தொழில் வருமானம் சார்ந்த சவால்களை சனி ஏற்படுத்துவார். ( சனி தசாவில் இவை நடைபெறும் )
⚡️12 ல் மறையும் சனி நட்பு ஆட்சி உச்சமாக இருப்பது நல்லது, பகை நீசம் மறைவது நல்லது கிடையாது.
⚡️6 அதிபதியாகி சிம்ம மற்றும் கன்னி லக்னத்திற்கு 12ல் சனி இருப்பது தசாவில் முதல் 10 வருடம் நன்மை தராது. #padmahazan
⚡️ மேலே சொன்ன எல்லா நிலைகளிலும் லக்னாதிபதி வலு மற்றும் 5 9 திரிகோண வலு ஏற்ப ஒருவருக்கு பலன் நடக்கும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment