நீச கிரகங்கள் பரிவர்த்தனை என்பது ஒரு
கிரகம் நீசமாக இருந்தாலும் பரிவர்த்தனையாக இருப்பது.
நீச பரிவர்த்தனை என்பது இதுவரை நான் பார்த்த ஜாதகத்தில் சிறப்பான நிலையை தரவில்லை.சுபமான அமைப்பாக இருந்தது இல்லை. சுப பலனை தந்தாலும் அதில் ஒரு அசுப கெடுபலன் அல்லது குறையை வைத்தே நீச பரிவர்த்தனையான கிரகம் தரும்.
உதாரணமாக மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதி செவ் கடகத்திலும் நாலாமதிபதி சந்திரன் தேய்பிறை லக்னத்தில் பரிவர்த்தனை பெற்று இருக்கும் நிலையில் ஜாதகர் பிறக்கும் போதே தாயாரை இழந்தவராக இருப்பார்.
லக்னாதிபதியான செவ்வாய் நான்காம் பாவகத்தில் தாயார் ஸ்தானத்தில் நீசமாவதால் தாயார் சார்ந்த பாதிப்பை ஜாதகர் அனுபவிக்க உள்ளார் என்று அர்த்தம்.
இருப்பினும் பரிவர்த்தனை அமைப்பை பெற்று இருப்பதால் வளர்ப்பு தாயால்
வளர்க்கபட்டு வருவாங்க. #padmahazan
அதே போல கடக லக்னத்திற்கு ஏழில் குரு நீசமாகி ஒன்பதில் சனி கேது சேர்க்கை பெற்று இருக்கும் நிலையில் தந்தை ஆதரவு ஏதும் இல்லாமல் வாழ்க்கை துணை வழியிலும் ஆதரவு இல்லாமல் இருக்க வைக்கும். பரிவர்த்தனை பெறுவதால் இரு உறவுகளும் இருக்கும் ஆனால் ஆதரவு முழுமையாக இருக்காது. மாறாக பொருள் பணம் என்கிற உயிர் இல்லாத ஜட காரகத்துவ மேன்மை பலன் தரும்.
மேலே சொன்னவை அனைவருக்கும் ஒரே மாதிரியான பலனை தராது சம்மந்தப்பட்ட நீச கிரக தசாவில் நடைமுறையில் பலன் இருக்கும். தசா வராத வரை பாதிப்பு இருக்காது.
நீச பரிவர்த்தனை பெரும்பாலும் தாய் தந்தை சகோதரம் மனைவி குழந்தை மாதிரியான உயிர் சார்ந்த பாதிப்பை வெளிப்படையாக தந்து விடும்.
நீசபரிவர்த்தனை என்பது நான் பார்த்த ஜாதகம் வரை கொஞ்சம் பிரச்சனைக்கு உரிய விஷயமே.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment