🍁 குரு சனி தொடர்பு 🍁 #hazan
குரு சனி இணைவு சமசப்தம பார்வைகளால் உண்டாகும் தொழில் நிலை அமைப்புகளை மேஷ லக்னத்திற்கு இந்த பதிவில் காண்போம்.
மேஷ லக்னத்திற்கு குரு பாக்கியாதிபதி மற்றும் விரையாதிபதி சனி லக்ன ஜீவனாதிபதி மற்றும் லாப பாதகாதிபதி ஆவார்.
குரு என்னும் பணமும் கௌரவமும் சனி என்னும் தொழில் வருமானமும் தொடர்பு கொள்ளும் போது செய்யும் தொழில் சார்ந்த மேன்மை தரும்.
அதாவது 9 10 11 12 ஆகிய இரு ஆதிபத்திய கிரகங்கள் குரு சனி
1990 முதல் 2003 வரை குரு சனி பார்வை இணைவு மூலம் உண்டாகும் இணைவுகள் இவை... #padmahazan
1). கடகத்தில் குரு உச்சமாகி மகரத்தில் சனி ஆட்சி பெற்று இருவரும் நேருக்கு நேராக பார்த்து கொள்ளும் கிரக நிலை.
இது மாதிரியான அமைப்புகளில் ஜாதகர் செய்யும் தொழிலில் அதீத உடல் உழைப்பை அல்லது தொழிலாளர்கள் உதவியாளர்கள் வைத்து வேலை வாங்கும் தொழில் செய்ய ஆசைபடுவார். தொழிலில் உண்டாகும் வருமானம் தனலாபம் சார்ந்த கெளரவம் அந்தஸ்தை விரும்புவார்.
பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி , எண்ணெய் பெட்ரோல் தொழில் , உயர் கனரக வாகனங்களான லாரி டிரக் மண் அள்ளும் JCB , மாதிரியான வாகனம் சார்ந்த இரும்பு பொருள் உற்பத்தி தொழில் விருப்பம் தரும்.
இன்னும் சிலர் பொற்கொல்லர் என்கிற தங்கத்தை உருக்கி ஆபரணம் செய்யும் தொழில் நடத்தி வருவார்கள். அரசியல் அல்லது சமுக ஆர்வலர் மாதிரியான நல உதவிகளை ஓர் பக்கம் செய்து வருவார்கள்.
உச்ச குரு பார்த்த ஜீவனாதிபதி சனி ஆட்சி பெறுவது சச யோகம். தொழில் சார்ந்த தன லாப யோகத்தை சனி குரு அமைப்பு ஏற்படுத்தி தரும்.
இந்த இணைவில் ராகு கேது தொடர்பு பெற பணம் மீதான ஈர்ப்பு குறைந்து தொழில் மீதும் அதன் வழியான கௌரவம் மீதும் தனி கவனத்தை செலுத்துவார்கள்.
2). மேஷ லக்னத்தில் சனி நீசமாகி குருவோடு இணைவது...
சனி நீசம் பெறுவது என்பது சனி வலு இழந்த நிலையை குறிக்கும் கூடுதலாக சனி நிஷ் பலம் என்கிற திசை பலத்தை இழப்பதும் மேலும் சனி வலுஇழக்க வைத்து விடும்.
இங்கே சனியோடு குரு இணைவதால் ஜாதகர் தொழிலில் கஷ்டபட வேண்டி இருக்காது. padmahazan மூன்றாம் அதிபதி புதன் வலுபெற்றால் ஏராளமான உதவியாளர்கள் அல்லது வேலையாட்கள் கொண்ட தொழிலில் இருப்பார்.
பத்தாம் அதிபதி நீசம் பெறுவதால் தொழில் வழியான ஓர் அந்தஸ்து கௌரவம் நற்பெயர் பெற ஆசை இருக்காது. குரு இணைவு உண்டாவதால் பணம் வந்தால் போதும் என்கிற மனபான்மை மேலோங்கும்.
சாராய தொழில் , ரசாயன வேதி பொருள் உற்பத்தி , எத்தனால் மெத்தனால் போன்ற வேதி பொருள் சார்ந்த திரவ உற்பத்தி மாதிரியான தொழிலில் ஈடுபட வைக்கும். அல்லது மக்கள் செல்வாக்கில் பணம் ஈட்டும் உழைப்பில்லாத நிலை தரும். #padmahazan
ஜாதகருக்கு உடல் உழைப்பு இங்கே சனி தராமல் தொழில் வழியாக வருமானம் அதிகபடியாக தரும். தர்ம காரியம் செய்ய போய் அதில் பேரும் புகழும் உண்டாகும்.
3). மேஷ லக்ன 2ல் குரு சனி இணைவு...
9 அதிபதி பாக்கியாதிபதி 10 11 உடைய ஜீவன லாபாதிபதி 2 வீடான தன பாவகத்தில் இருப்பது சீரான தொழில் வழியான தன சேர்க்கை தரும். தனயோகம்.
வாகனம் போன்ற ஆடம்பர சொகுசு கார் வேன் சார்ந்த தொழில் வியாபாரம் சர்வீஸ் சார்ந்த நிலையில் ஜாதகர் பணம் ஈட்ட ஆர்வம் கொள்வார்.
மெட்டல் சார்ந்த பாத்திரம் வீட்டு உபயோக பொருட்கள் சார்ந்த வியாபாரம் சிலருக்கு உண்டாகும்.
வக்கீல் தொழில் அல்லது கல்லூரி பேராசியர் போன்ற நிலையில் சிலரை வைத்து இருக்கும்.
பெரும் முதலீட்டில் தொழில் தொடங்கி சிறுக சிறுக போட்ட பணத்தை எடுக்கும் திறமை பெற்றவர்கள்.padmahazan
மேஷ லக்ன அதிபதி செவ்வாய் நின்ற பாவகம், தலைமை பொறுப்பு தரும் சூரியன் மற்றும் பத்தாம் பாவகத்தோடு தொடர்பு கொண்ட பிற கிரக நிலை நடப்பில் உள்ள பொறுத்து வேறு துறை அல்லது தொழில்கள் தரும்.
இது போன்ற நிலையில் சனி தசா வருவது தொழில் வருமான நிலைக்கு நல்லது
உழைப்பு தொழில் பெருமை என்பது நிச்சயமாக குரு சனி இணைவு இந்த அமைப்புகளில் ஏற்படுத்தி தரும்.
( இது தொழிலுக்கு வருமான நிலைக்கு மட்டுமே பொருந்தும். மற்ற குடும்ப வாழ்க்கை குழந்தை ஆதரவில் குரு சனி பலன் பற்றி பதிவு அல்ல )
#padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment