Tuesday, October 3, 2023

ராசி பலன் பெயர்ச்சி பலன்கள் அனைவருக்கும் ஒரே அளவில் முன்னேற்றம் தருமா...? உண்மை நிலை என்ன..?

🍁 ராசி பலன் பெயர்ச்சி பலன்கள் அனைவருக்கும் ஒரே அளவில் முன்னேற்றம் தருமா...? உண்மை நிலை என்ன..? 🍁 #hazan 

ஜோதிடத்தில் ராசியை மையமாக வைத்து சொல்ல கூடிய அன்றைய கோட்சார தினசரி பலன்கள், வார பலன்கள், மாத பலன்கள், வருட பலன்கள், பிற குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி இவை அனைத்துமே ஒருவருக்கு ஏற்றத்தை தருமா என்றால்.... 

அதுகேள்வி குறியே...? அது ஒரே மாதிரியான ஏற்றத்தை அனைவருக்குமே தராது. 

ஓர் ராசிக்கு வரும் சந்திராஷ்டம பலனே ஓருவருக்கு கடுமையான மன அழுத்தமும் மற்றவருக்கு " இன்னைக்கி சந்திராஷ்டமா..? " என்கிற எந்த வித பாதிப்பும் இல்லாத தன்மை தருகிறது. காரணம் இருவருக்குமான அவர்களது ஜாதக சந்திர வலு மற்றும் நடப்பில் உள்ள தசா அதை வேறுபடுத்தி காட்டுகிறது. 

உதாரணமாக வாழ்நாள் முழுவதையும் கடவுளுக்கு அர்பணித்து ஏதும் வேண்டாம் என்று முற்றும் துறப்பவர்களுக்கும், ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் நடைபோன பாதையில் கடவுளின் மேல் பாரத்தை போட்டு நடப்பவருக்கும், யாசகம் கேட்டு அன்றாட வாழ்வை கடப்பவருக்கும், நான் வாழ்வை நிர்ணயிக்க முடியாமல் பிறரை ஏதோ ஒர் காரணமாக சார்ந்து வாழ்பவருக்கும் இந்த பெயர்ச்சிகள் பலனை தருமா... நிச்சயமாக அவர்களுக்கு பலன் தராது. #padmahazan 

இவர்களுக்கு கோட்சாரத்தில் லாபத்தில் பல கிரகங்கள் கூடினாலும் லாபம் இருக்காது, திருமண பந்தம் குழந்தை பாக்கிய தடை உள்ளவர்களுக்கு எத்தனை குரு பலம் வந்தாலும் திருமண குழத்தை பிறப்பு பலன் இருக்காது. 

கோட்சாரத்தில் ஒருவர் சுபயோகமான கொட்டோ கொட்டுனு தன பண சேர்க்கை சகல ஐஸ்வர்ய சேர்க்கை பெற வேண்டும் என்ற கோட்சார நிலையில் கிரகங்கள் நன்றாக இருந்தாலும் அவரவர்கள் ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கும் வலுவிலேயே அவற்றை பெற முடியும். 

அம்பானியும்... ஆறுமுகமும்... 

ஓர் குரு பெயர்ச்சி அம்பானிக்கு பல நூறு கோடி பணத்தை கொடுத்தால் , டீக்கடை நடத்தும் நம்ம ஆறுமுகத்துக்கு சில ஆயிரம் தரும், காரணம் அம்பானிக்கு ஜாதகம் வேறு ஆறுமுகத்துக்கு ஜாதகம் வேறு. ஒரே ராசியில் பிறந்தாலும் அம்பானி நிலை வேறு ஆறுமுகம் நிலை வேறு. இந்த வித்தியாசத்தை தருவது இருவரது ஜாதக வலுதான். 

அந்த யோகம் எல்லாம் யாருக்கு அமையும் என்றால் அன்றைய சிறப்பான கோட்சாரத்தில் சரியான லக்னம் தசா புத்தி ஏற்ப அன்றைக்கு பிறக்கும் குழந்தைக்கு அமையும். Padmahazan மற்றபடி ஜாதக கிரக வலு, தசா புத்தி என்பதே பேஸ்மெண்ட்.
அது எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ அந்த அளவிற்கு மேலே நிற்கும் அமைப்புகள், பெயர்ச்சிகள், கோட்சாரம் பலன் தரும். 

ஜாதக அமைப்பு தசா புத்தி கெட்டு வலுஇழந்த பேஸ்மெண்ட் ஆக இருக்கும் போது மேலே நிற்கும் பெயர்ச்சி கோட்சாரம் வலுதாங்க முடியாமல் மொத்தமாக பேஸ்மெண்ட் கீழே உட்கார்த்துவிடும். 

எல்லோருக்கும் எல்லாம் தர கிரகங்கள் எப்போதும் தயாராகவே உள்ளன. ஆனால் நாம் பெற்று வந்த ஜாதகங்கள் வலுவாக இருந்து கிரகங்கள் தரும் அவற்றை பெற்று வாழும் அமைப்பில் இருப்பது அவசியம்.

அடுத்த பெயர்ச்சி மட்டுமே வரட்டும் நான் தொழில் பண்றேன், லாபத்தை பார்க்கிறேனு சொல்றவங்க அன்றாட பொதுபலனை பார்த்து கஷ்டங்களை அனுபவிக்க போகிறவர்களே. 

ஜாதகமே முதன்மை. ஜாதகத்தில் லக்னம் லக்னாதிபதி நடப்பு தசா புத்தி முதன்மை இதெல்லாம் பிறகே கோட்சார ராசி பலன் பெயன்ச்சி பலன்.#padmahazan

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY 
WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...