🍁 சனி தரும் காலம் கடந்த தொழில் முன்னேற்றம் 🍁 #hazan
🪐 10 பாவகம் , 10 அதிபதியோடு சனி தொடர்பு கொள்ளும் போது நீங்கள் செய்கின்ற தொழிலில் முதலில் நீங்கள் எதிர்பார்க்கும் பெரிய வளர்ச்சி லாபம் வருமானம் சனி தராது.
🪐 சனி அனுபவத்தை தரும் கிரகம். தொழில் நிலைகளோடு தொடர்பு கொண்ட சனி முதலில் தொழில் வழியாக அனுபவங்களை முதலில் பெறுவீர்கள். பக்குவபட்ட தொழில் சார்ந்த நுணுக்கங்களை பெற வைப்பார்.
🪐 தொழில் ஆரம்பிப்பதில் தடை உண்டாகும் அல்லது தொழிலில் வருமானம் மந்தமாக கிடைக்கும் , அடுத்தடுத்த அனுபவங்களை தொழிலில் நீங்கள் பெற பெற சனி யோக பலனை தர தயாராகுவார்.
🪐 சனி கிரகம் உடனடியாக எந்த பலனையும் வாரி வழங்கமாட்டார் , கொஞ்சம் கொஞ்சமாக தொழில் ஏற்றம் உண்டாக்குவார் padmahazan. சனி தசா வந்தால் சொல்லவே வேண்டாம். கால தாமத தொழில் ஏற்றம் தரும் ஆனால் நிலையான வருமானத்தை குறிப்பிட்ட காலம் பின் ஏற்படுத்தி கொடுப்பார் சனி.
💮 பத்தில் சனி நின்று பத்தாம் அதிபதி தசா வந்தாலும் ,
💮 பத்தில் நின்ற சனி தசா வந்தாலும் ,
💮 பத்தாம் வீட்டை சனி பார்த்தாலும்,
🪐 தொழிலில் பொறுமை மிக அவசியம் , உடனடியாக காரியம் நடந்து கைக்கு பணம் வரும் என்கிற எண்ணம் தவிர்க்கனும். #padmahazan
🪐 நிறைய அனுபவமும் உடல் உழைப்பையும் சனி தருவார் அல்லது அலைச்சல் உண்டாகும். அல்லது நின்று கொண்டே இருக்கும் சூழலை ஏற்படுத்துவார்.
💮 10 பாவகத்தில் சனி இருப்பது,
💮 10 பாவக அதிபதி சனி இணைவது , பார்ப்பது
💮 10 பாவகத்தை சனி பார்க்க இந்த பதிவு பொருந்தும்.
🪐 சனி ஒருவருக்கு தொழில் முன்னோற்றம் தந்தால் அது நிலையான முன்னேற்றம் தரும் , அந்த முன்னேற்றம் தாமதமாக உண்டாகும். ஆனால் அதே தொழிலை மகனோ பேரனோ செய்யும் அளவிற்கு நிலையாக ஏற்படுத்தி கொடுத்துவிடும். அதுதான் சனி. அப்படிதான் உங்களை போட்டு வாட்டி பின் கை கொடுக்கும்.
#padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment