Tuesday, October 3, 2023

சிம்ம ராசி லக்னம்

🍁 சிம்ம ராசி & லக்னம் 🍁 #hazan 

இயல்பிலேயே சிம்ம லக்ன ராசிக்காரர்கள் தனது குடும்பம், மூதாதையர், பரம்பரை மீதான அதிகபடியான பற்று கொண்டு இருப்பார்கள், கௌரவமும் மரியாதையையும் அதிகபடியாக எதிர்பார்க்கும் ராசியாக இந்த சிம்ம ராசி இருக்கும். 

சிம்ம லக்ன ராசிக்காரர்கள் எப்போதும் அநாவசியமற்ற கோபத்தை வெளிகாட்ட மாட்டார்கள், தேவையான இடங்களில் மட்டுமே கோபத்தை வெளிபடுத்துவார்கள். சிம்ம ராசிக்காரர்கள் கோபத்தில் ஒரு நியாயம் இருக்கும். #padmahazan 

எதிலும் தன்னை முன்னிறுத்தி ஒரு செயலை அனைவரும் செய்ய வேண்டும் என்ற தலைமை குணமும், ஒரு கூட்டத்தை ஒருங்கிணைக்கும் திறனும் பெற்றவர்கள். 

சிம்மத்தில் பிறந்தவர்கள் தன்னை நம்பி வந்தவர்களை ஏமாற்றுவது அல்லது உதாசீனப்படுத்துவது போன்ற குணத்தை பெற்று இருக்க மாட்டார்கள். இவர் நம்மை நம்புகிறார் இவருக்கு நாம் உதவனும் அப்படிங்கிற தலைமை குணம் இவர்களை இயங்க வைக்கும். 

" அநியாயத்தை கண்டா பொங்கனும் " அப்படிங்கிற குணம் கொண்டவர்களும் இவர்கள் தான். ஸ்திர நெருப்பு
ராசியான சிம்மம் நின்று எரியும் நெருப்பை போல கோபத்தையும் வைராக்கியத்தையும் கொண்டவர்கள்.#padmahazan 

சிம்மத்தில் பிறந்த இவர்கள் தற்புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள், சுற்றி இருப்பவர்கள் இவர்களை புகழ்ந்து பேசியே காரியம் சாதித்து கொள்வார்கள். 

இவர்களுக்கு முதுகிற்கு பின் குறை கூறுபவர்களை பிடிக்காது, எதையும் நேருக்கு நேராக தைரியமாக அனுகுபவர்களை பிடித்தவர்களாக நட்பு பாராட்டுவார்கள். 

தனக்கு துரோகம் செய்தவர்களையும் பெரிதாக நட்பு பாராட்டமாட்டார்கள். 

இவை அனைத்தும் பொதுபலன்களே, அவரவர்கள் ஜாதகத்தில் சிம்ம லக்ன ராசியோடு தொடர்பு பெற்ற கிரக அவரவர்கள் ஜாதக பலனை பொறுத்து பலன் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். #padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY 
WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...