எட்டாம் பாவகம் சார்ந்த நல்லதோ கெட்டதோ காலன் நம்மிடம் அந்த ஜாதகத்தை பலன் சொல்ல அனுப்பி விடுவார்.
நமக்கும் அவருக்கும் அப்படி ஓர் புரிதல்.
பங்கு சந்தை பணம் இழப்பதற்கான நிலை எட்டாம் பாவகம் பாவ கிரக பாதிப்பில் இருப்பது.
எட்டாம் வீட்டை சனி பார்த்தாலோ சனி இருந்தாலோ, அந்த சனி பங்கு வர்த்தக சார்ந்த விரையம் இழப்பை நஷ்டத்தை தரும்.
கூடுதலாக அந்த சனிக்கு சூரிய செவ்வாய் தொடர்பை பெற்றால் உக்கிர தண்டவம் ஆடி அனைத்தும் இழக்க வைப்பார்.
கூடுதலாக எட்டில் உள்ள சனிக்கு குரு பார்வை இணைவு இருந்தால் மட்டுமே அந்த சனி உங்களை ஓரளவுக்காவது விட்டு வைப்பார், உங்கள் பணத்தை திருப்பி தருவார்.
கீழே காட்டப்பட்டுள்ள ஜாதகம்.
சிம்ம லக்னம்.
லக்னாதிபதியான சூரிய எட்டில் மறைந்து சனி செவ்வாய் மற்றும் நீச புதனோடு இணைகிறார்.
லக்னாதிபதியான சூரிய எட்டில் பாவிகளால் பாதித்து உள்ளார்.
ஜாதகரே தன் சொந்த முயற்சியில் கஷ்டத்தை தேடி செல்லும் நிலைதான் இது.
சிம்ம லக்ன தனம் மற்றும் லாப ஸ்தான அதிபதியான புதன் நீசமாவது நல்ல நிலை அல்ல...
எட்டில் மறைந்த நீசன் புதன் மறைமுக வருமானம் தனலாப ஆசை கொடுத்து பணத்தை எட்டாம் வீட்டின் இழக்க செய்வார்.
உச்ச சுக்ரன் அல்லது வீடு கொடுத்த குரு உச்சம் அல்லது ஆட்சி பெற்றால் மட்டுமே அந்த புதன் பணத்தை கொட்டுவார். இல்லை என்றால் பேராசை காட்டி தலையில் நன்றாக கொட்டுவார்.
#padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment