ஜோதிடத்தில் நோய் , உடல் பலவீன நிலை குறிப்பவர் சனி. நோய் காரகன் சனி.
திடமான உடலும் நேர்கொண்ட பார்வையில் நடப்பதை சூரியன் குறித்தால் அதன் நேர் எதிர் தன்மையான உடல்பலவீனமான கூனி நடப்பது அல்லது மெல்ல மந்தமாக நடப்பதை குறிப்பவர் சனி.
ஜோதிடத்தில் காரக கிரகங்களை ஒட்டியே ஆதிபத்திய பாவகம் இயங்கும்.
ஜாதகத்தில் நோயை தரும் 6 8 பாவகங்களில் கிரகங்கள் நின்றால் மட்டும் அவருக்கு நோய் வந்து விடாது , அந்த ஜாதகத்தில் நோய் காரகன் சனி வலு என்ன..? எந்த எந்த கிரகங்களை பார்த்து உள்ளது..? , எந்த கிரகங்கள் இணைவில் உள்ளது..? என்பதை கணக்கில் கொண்டு 6 8 பாவக தசா புத்தி பலனில் இந்த நோய்கள் வெளிபடும்.
உதாரணமாக ஆறில் கிரகங்கள் இல்லாத போதும் ,
சூரியனை அல்லது சந்திரனை சனி பார்த்தால் நிச்சயமாக அந்த ஜாதகருக்கு கண் நோய் வரும் , பார்வை குறைந்து கண்ணாடி போடும் சூழல் வரும். கண் அறுவை சிகிச்சை தரும். கலையிழந்த முகத்தை தரும். இருதய தண்டுவட அல்லது மூளை சார்ந்த பாதிப்பை தரும். #padmahazan
2 12 பாவகத்தை சனி பார்த்தாலும் நிச்சயமாக வலது இடது கண் ஒன்றில் பார்வை குறையும்.
செவ்வாயை சனி பார்த்தால், பல் சார்ந்த பிரச்சனை , உடல் வலு இழந்த மெலிதான உடல் அல்லது நீண்ட காலம் உழைக்க முடியாத உடலை தரும்.
சுக்ரனை சனி பார்த்தால், காமம் சார்ந்த குறை அல்லது அதில் செயல் திறன் மீது சந்தேகம் வரும் , கண் பாதிப்பு சிறுநீரக விந்தக சுக்கில கருப்பை பாதிப்பு ஹார்மோன் பாதிப்பு குழந்தை பெற கால தாமத பாதிப்பை தரும்.
குருவை சனி பார்த்தால் செரிமான உறுப்பு பாதிப்பு , கொழுப்பு சார்ந்த உடல் பாதிப்பு , இருதய கொழும்பு பாதிப்பை தரும்.
சனி எந்த பாவகத்தில் இருந்து எந்த கிரகத்தை பார்த்தாலும் இது பொருந்தும். அது சார்ந்த பாதிப்பை சனி பெற்ற ஸ்தான பலத்தின் வலு ஏற்ப ஜாதகருக்கு 6 8 சம்மந்தப்பட்ட தசா காலம் அல்லது பாதித்த கிரக தசா புத்தி காலத்தில் பாதிப்பை ஜாதகர் அனுப்பவிப்பார்.
6 8 கிரகங்கள் இல்லாமல் ஒருவர் உடல் நலம் பாதித்து உள்ளது என்றால் சூரிய சந்திர செவ்வாய் மற்றும் லக்னாதிபதியை சனி தன் 3 7 10 பார்வையாக பாதித்து உள்ளார் என்று அர்த்தம்.
#padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment