நமக்கு எதிரே வரும் நபரை " யார்..? " என்று முதலில் தலையை பார்க்கிறோம் ,
அந்த நபரை
" ஓ... நமது நண்பர்தான் "
" நமது உறவினர்தான் "
" நமது எதிரிதான் "
ஓர் நபரை அடையாளம் காணுவதற்கு எப்படி தலை என்கிற முதன்மை நிலை உள்ளது.
அதே போல ஓர் ஜாதகத்தில் ஒருவர் யார்..? என்பதை சுட்டிகாட்டுவதுதான் லக்னம். மற்றும் லக்னாதிபதி நிலை.
லக்னமே ஒருவரது குணம் செயல்பாடு அந்தஸ்து பெருந்தன்மை கௌரவம் அல்லது அடிமைநிலை நயவஞ்சகர் பொறாமை குணம் கொண்ட உதவும் தன்மை அற்றவர் என்கிற யார் என்கிற தன்மை கொடுக்கிறது.
ஓர் ஜாதகத்தில் எத்தனை எத்தனை பெரும் யோகங்கள் இருப்பினும் அதை எத்தகைய வழியில் ஜாதகர் அடைவார்..? நேர்மைவாதியா..? நேர்மையற்றவரா..? யோகங்களை அனுபவிக்க தேவையான முயற்சி மற்றும் ஆளுமை பெற்றவரா..? என்பதை லக்ன பாவகமும் லக்னாதிபதியுமே சுட்டி காட்டுவார்கள்.
ஒருவர் எதற்கு எடுத்தாலும் கோவமும் ஆத்திரமும் அடைகிறார், மற்றொருவர் எது நடந்தாலும் தலையே போனாலும் , அதாவது தலைக்கு மேலே காரியம் கை மீறி போனாலும் பொறுமை அமைதி காக்கிறார் இதற்கான வித்தியாச வேறுபாட்டை தருவது லக்னமும் லக்னாதிபதி அந்த கிரகம் இருக்கும் நிலைதான். #padmahazan
லக்னாதிபதி குரு சுக்ரன் வளர்பிறை சந்திரன் மற்றும் புதன் ஆக வரும் போது லக்னத்தில் ஆட்சி பெறுவது உயர்தர அந்தஸ்து கொண்ட நல்ல வாழ்வில் ஜாதகர் இருப்பார்.
யாரையும் சார்ந்து முடிவு எடுக்காமல் தன்னிச்சையாக செயல்படும் நிலையில் ஜாதகரை லக்னமும் லக்னாதிபதியும் அங்கே இயக்கி கொண்டு இருக்கும்.
லக்னத்தில் ராகு கேது சனி இருக்க பிறந்தவர்கள் பிறரை சார்ந்து இருப்பது அல்லது தெளிவில்லாத வாழ்வில் அடுத்த கட்டம் எப்படி போவது என்கிற தடுமாற்றமாக வாழ்வை கழித்து கொண்டு இருப்பார்கள். Padmahazan இது போன்ற நிலைகளில் நிச்சயமாக லக்னாதிபதி நட்பு உச்ச வீடுகளில் நன்றாக இருப்பது மிக முக்கியம். அப்போது ஏதோ திருப்பு முனையாக அந்த லக்னாதிபதி தசா புத்தி காலத்தில் நன்மையான நல்ல நிலைக்கு வாழ்க்கை திரும்பும்.
லக்னத்தில் சனி இருப்பது கூட அந்த சனி 5 9 உடைய பூர்வ புண்ணிய அதிர்ஷ்ட ஸ்தான அதிபதி ஆக லக்னத்தில் இருந்தால் ஏதோ ஓர் சந்தர்ப்ப சூழலில் முன்னேற்றம் அடைந்துவிடுவார். ஆனால் கடின உழைப்பு கொண்ட முன்னேற்றம் ஆக அமைந்துவிடும்.
ஓருவரது லக்னத்தை 5 9 ஆதிபத்தியம் பெற்ற குருவோ சுக்ரனோ புதனோ வளர்பிறை சந்திரனோ பார்க்கும் போது அங்கே ஜாதகர் போதுமான அந்தஸ்து கொண்ட வெளியே சொல்லி கொள்ளும் வாழ்க்கை முறையில் இருப்பார்.
தசா புத்தி ஏற்ற இறக்க நல்ல கெட்ட பலன்களை ஜாதகர் சமாளிக்கும் வல்லமை மாற்றம் லக்னம் லக்னாதிபதி பூர்வ புண்ணிய பாக்கிய அதிபதிகளால் கொடுக்கபடும்.
( அடுத்தடுத்த பதிவுகளில் லக்ன பாவக பலனை தொடர்ந்து பதிவிடுகிறேன் )
#Padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment