ஜோதிடத்தில் அதிகபடியான பார்வை வலு கொண்ட கிரகமாக இருப்பது குரு. மற்ற பிற கிரகங்களை விட வலுவான குரு பார்வை பார்க்கும் பாவகங்கள் கிரகங்களை வலுபெற வைக்கும். தோஷம் கொண்ட கிரக நிலை கூட குரு பார்வை பெற்றால் தோஷம் விலகி நற்பலனை தரும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த குரு பார்வை எப்போதும் ஒரே மாதிரியான வலுவில் இருக்குமா..? என்றால் நிச்சயமாக ஒரே மாதிரியாக இருக்காது.
குரு நின்ற ராசி , குரு இணைந்த கிரகம் , குரு பெறும் பாவ கிரக பார்வை பொறுத்து பார்வை அளவு மாறுபடும்.
வக்ரம் பெறாத உச்சம் , ஆட்சி, நட்பு வலுவோடு உள்ள பெற்ற குருவின் பார்வை மிக அதிகமாக பார்வை வலுவில் இருக்கும். #padmahazan
பகை நீசம் சம வீடுகளில் உள்ள வலு குறைந்த குரு பார்வை வலு குறைவாக இருக்கும் இத்தகைய குரு வக்ரம் பெறுவது பார்வை வலுவை ஓரளவு மாற்றி கொள்ளும்.
ராகுவோடு இணையும் குரு பார்வை வலுவை இழப்பார் , ராகுவோடு 3 டிகிரிகுள் இணைய குரு மொத்தமாக பார்வை இழந்து தன் செயல்பாடுகளை செய்ய தடுமாறுவார். இது ஓர் துரதிர்ஷ்ட சூழல். padmahazan குரு ராகு இணைவு 10 முதல் 22 டிகிரிகுள் அமைவது சண்டாள யோகம் ராகு தசாவில் தரும்.
சனி பார்த்த சனியோடு இணைந்த குரு பார்வை வலுவை சனியின் ஸ்தான பலம் மற்றும் குரு வலு ஏற்ப குரு பார்வை வலு இழப்பார். உச்ச சனி பார்த்த தனசு குரு பார்வை வலு குறையும்.
சூரியனுக்கு 2 12 ராசிகளில் இருக்கும் குருவிற்கு பார்வை வலு நன்றாக இருக்கும் கூடுதலாக அந்ந இடம் குருவிற்கு நட்பு ஆட்சி உச்ச வீடாக அமைவது பெரிய யோகத்தை குரு பார்த்த கிரகங்கள் தசா தரும்.
நீசனோடு இணைந்த குரு பார்வை வலு குறைவாக இருக்கும்.
குரு நண்பரான செவ்வாய் இணைவோ பார்வையோ குருவை எந்த நிலையிலும் பாதிக்காது. ஆனால் 6 8 ஆதிபத்திய பாவி ஆகும் செவ்வாய் பார்த்த குரு மிதுன கன்னி லக்னத்திற்கு ஆதிபத்திய கெடுதலை குரு தருவார்.
#padmahazan
தனித்து ஆட்சி உச்சம் நட்பு வீடுகளில் நின்ற குரு பார்வை 5 7 9 கிரகங்களை வலுபடுத்தும் கூடுதலாக அந்த பாவக பலன் நன்றாக அதே சமயம் குரு பார்த்த கிரக தசா நற்பலனை தரும்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment