🍁 லக்ன பாவகம் _ பகுதி 2 🍁 #hazan
சென்ற லக்ன பாவக பதிவின் தொடர்ச்சி...
லக்னத்தில் நின்ற கிரகமும் , லக்னாதிபதி நின்ற பாவகம் சார்ந்த செயல்பாடுகள் உங்களிடம் அதிகபடியாக வெளிபடும் அது சார்ந்த எண்ணமும் குறிக்கோளும் உங்களிடம் அதிகபடியாகவே வெளிபடும்.
உதாரணமாக துலா லக்னம் ஓர் இயல்பாவகவே வியாபார எண்ணம் கொண்ட தராசு லக்னம். துலா லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு சுக்ரன் லக்னாதிபதி ஆக பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்தில் இருக்கும் போது , ஜாதகர் தொழில் செய்ய விரும்புவார், நல்ல நாணயமான வியாபாரத்தை நடத்தி அதில் நல்ல நிலைக்கு வரும் எண்ணமே ஜாதகரிடம் மேலோங்கி இருக்கும் , அன்றாடம் தொழில் சார்ந்த வருமானம் லாபம் எதை எங்கே வாங்கலாம்..? எவ்வளவு விலைக்கு விற்கலாம்..? எவ்வளவு லாபம் வரும்..? என்கிற வியாபாரியாக தொழில் அதிபதியாக மாற்ற கூடிய தன்மை பத்தாம் வீட்டில் உள்ள சுக்ரன் துலா லக்னத்திற்கு தரும். #padmahazan
கூடுதலாக இங்கே பத்தாம் அதிபதியான சந்திரன் வளர்பிறை நிலையில் லக்னத்தில் இருக்க , லக்ன மற்றும் ராசி இரண்டு நிலையிலும் ஜாதகருக்கு துலாம் என்கிற தராசு குணம் மேலோங்கி சுக்ரனும் சந்திரனும் பரிவர்த்தனையாக இருக்கும். 1 மற்றும் 10 அதிபதிகளது பரிவர்த்தனை துலா லக்னத்திற்கு பெரிய தொழில் வருமான நிலைக்கு ஜாதகரை இழுத்து செல்லும்.
கூடுதலாக வியாபார கிரகம் புதனும் , லாபாதிபதியான சூரியன் 9 10 11 இடங்களில் நின்றால் கூடுதல் யோகத்தை ஏற்படுத்தி தரும். ஜாதகரது வாழ்வு பெரும் பகுதி வணிகம் வியாபாரம் தொழில் நிலைகளில் ஜாதகர் வாழ்வை செலவழிப்பார் padmahazan , யோக தசாக்களில் பணத்தை லாபமாக அள்ளுவார். அதுவும் நாணயமான வியாபாரமாக இருக்கும்.
ஓர் ஜாதகத்தில் லக்னத்தில் எந்த கிரகம் உள்ளது..? லக்னாதிபதி எங்கே உள்ளார்..? என்பதை பொறுத்து ஜாதகரது வாழ்க்கை எதை நோக்கிய பயணமாக இருக்கும் என்பதற்கு அவர்களது ஜாதகத்தில் உள்ள சந்திரன் செயல்பாடும் அதற்கு ஏற்ப ஈடு கொடுத்து ஜாதகரை தயார்படுத்தும் விதமாக அமைவதும் மிக முக்கியம். #padmahazan
அதே துலா லக்னத்திற்கு லக்னாதிபதியான சுக்ரன் நான்கில் சுக ஸ்தானத்தில் இருக்கும் போது , ஜாதகர் ஆடம்பர சொகுசு வாழ்வை விரும்புபவராகவும் , உடல் உழைப்பை விரும்பாத , தொழில் செய்தாலும் ஓர் மேனேஜர் அல்லது கணக்காளர் அல்லது உதவியாளர் வைத்து வேலை வாங்குவார். இவர்கள் பெரிய உடல் உழைப்பு அல்லது மெனக்கெடல் அலைச்சலை விரும்பமாட்டார்கள், பத்தாம் அதிபதி சந்திரனும் 3 12 இடங்களில் மறையும் போது
ஏசி காரில் போகனும் , ஏசி ரூமில் தூங்க வேண்டும் புது புது ஊர்களை சுற்றி பார்க்க வேண்டும் என்கிற சுக விருப்பியாக மாற்றும் 4 இட லக்னாதிபதியான சுக்ரன். சில நிலைகளில் ஏழாம் அதிபதி செவ்வாய் நிலை ஏற்ப பெண்கள் மீதான ஆசையில் பெண்களோடு பொழுதை கழிப்பவராகவும் மாற்றிவிடும்.
துலா லக்னத்திற்கு 10 உள்ள சுக்ரன் தொழில் வருமானம் நோக்கி பயணிக்க வைக்கும் சுக்ரன், 4 வீட்டில் உள்ள போது ஆடம்பர சொகுசு சுக விரும்பி ஆக மாற்றிவிடும்.
ஒவ்வொரு ஜாதகத்திலும் இது போன்ற கிரக நிலைகளில் ஏற்ட ஜாதகரை லக்னாதிபதி மற்றும் லக்னத்தில் உள்ள கிரகமும் ஜாதகரை ஒவ்வொரு விதமான வாழ்வில் பயணிக்க வைக்கும்.
#padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment