🍁 குருவின் பலம் மற்றும் நீச பலவீனம் 🍁 #hazan
குரு பகவானிற்கு மட்டுமே இருக்கும் சிறப்புகள் பல... அதில் ஒன்றை பற்றி இந்த பதிவில் காண்போம்.
குரு பகவான் 12 ராசி மண்டலத்தில் மேஷம் முதல் மீனம் எந்த ராசியிலும் மிகவும் வலு இழந்த முழுமையான " zero " என்ற
நிலையிலான வலுவைஇழக்க மாட்டார் அடையமாட்டார். ராகுவோடு 5 டிகிரிகுள் இணையும் போது மட்டுமே மொத்தமாக குரு வலு இழந்து செயல்பட முடியாமல் தவிப்பார்
அதாவது கடக ராசியில் உச்சமும், தனுசில் மூலதிரிகோணமும், மீனத்தில் ஆட்சி வலுவும், மேஷம் விருச்சிகம் சிம்ம
ராசிகளில் நட்பு வலுவும், ரிஷபம் துலாம் கும்ப ராசிகளில் சம வலுவும், மிதுன கன்னி ராசிகளில் பகை வலுவும்
பெற்று மகர ராசியில் நீசபலத்தை அடைவார்.
கிரகங்கள் நீச்சமாகும் பாகைகளில் ஒரு ராசியில் குறைந்தபட்ச பாகைகளை கொண்டவர் குரு பகவான் மட்டுமே.
குரு பகவான் மகரத்தில் நீசமாகி வலுவை இழந்தாலும், மகரத்தில் முதல் 5 டிகிரி வரை பரம நீசத்தை
பெற்றாலும், " எனக்கு நீசம் எல்லாம் ஒரு விஷயமே இல்லை " என்பது மாதிரியாக... மகர ராசியில் முதல் உத்தராடம் 2ம் பாதத்தில் நீசவர்கோத்தமம் ஆகி நீசத்தில் வலுபெறும் நிலையை குரு பெற்று விடுவார்.
மகரத்தில் உத்திராடம் 2ம் பாதத்தில் நீசமானாலும் நவாம்சத்தில் மகரத்தில் வர்கோத்தம வலுவில் இழந்த வலுவை
மீண்டும் பெறுவார். நீசவர்கோத்தமம் என்பது மறைமுகமான நட்பு வலுவிற்கு ஈடாகும். #padmahazan
மீதமுள்ள 3.30 டிகிரி முதல் 5 டிகிரி வரை மட்டுமே முழுமையாக நீசமாகி 5 டிகிரியை கடந்த பிறகு நீசத்தில் இருந்து
படிபடியாக அவரது வலுவை பெற்று கும்பத்தில் சம வலுவை பெறுவார். அதே சமயம் 3.30 to 5 டிகிரியை அடையும்
போது சனியோடு பரிவர்த்தனை அல்லது வளர்பிறை சந்திரன் பார்வை அல்லது கேந்திரத்தில் இருப்பது அல்லது உச்ச
செவ் சேர்க்கை பெற நீசபங்கராஜயோகத்தை பெற்று விடுவார் நம் குரு பகவான்.
குரு நீசமானாலும் தனித்து லக்ன கேந்திர கோணமாக நீசமாவது மோசமான அமைப்பு இல்லை. நீச குருவிற்கு சனி பார்வை இணைவு ராகு இணைவு இல்லாமல் இருப்பதே நல்லது.
நீச குருவை வீடு கொடுத்த சனி தன் 3 பார்வையாக பார்ப்பது கூட நீசபங்கம் பெற்றாலும் பொருளாதார பின்னடைவு அல்லது புத்திர தடை அல்லது கௌரவ பாதிப்பு போன்ற பின்னடைவை சிறிது காலம் அனுபவித்துதான் ஆக வேண்டி உள்ளது.
நீச வீட்டில் இருந்தாலும் 1 5 9ல் இருக்கலாம். 6 8ல் மறைவில் இருக்கவே கூடாது.
அடுத்த பதிவில் வேறொரு சிறப்பை காண்போம்.
#padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment