இன்றைய கால கட்டத்தில் படித்த பலர் இரண்டு மூன்று டிகிரிகளை பெற்றும் போதுமான வேலை அல்லது சம்பளம் இல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது.
ஓர் டிகிரி அல்லது PUC முடித்தால் அரசு பணி என்கிற 1960 1970 களில் இருந்த நிலை , தற்போது தலைகீழாக மாறி விட்டது.
இன்னும் சிலர் ஒரே படிப்பை ஏதோ முடித்தாலும் நல்ல வேலையோ அல்லது தொழிலோ அமைத்து கொண்டு நன்றாக பொருளாதார நிலையை அமைந்து விடுவார்கள்.
அதிகபடியான டிகிரிகளை பட்டம் முடிக்க என்ன கிரக நிலை தேவை..? #padmahazan
நான்காம் பாவகம் கல்வி ஸ்தானம் , ஒருவரது கல்வி நிலையை குறிக்கும். இந்த நான்காம் பாவகமும் பாவகாதிபதி வலுத்து இருக்கும் பட்சத்தில் கல்வி நிலை நன்றாக இருக்கும். இதற்கு இணையாக புதன் வலுபெற படிக்கும் ஆர்வமும் கல்வி கற்கும் திறனும் நன்றாக அமைந்துவிடும்.
இவை நன்றாக இருக்கும் பட்சத்தில் அடுத்த அமைப்பாக ,
ஒன்பதாம் பாவகம் என்கிற பாக்கிய ஸ்தானம் மேலே மேலே படித்து டிகிரி பல வாங்குவதை காட்டும்.
ஒன்பதாம் வீட்டை குரு பார்த்தாலும் குரு நின்றாலும், ஒன்பதாம் பாவகத்தில் புதன் நின்றாலும் நல்ல முறையில் பல டிகிரிகளை முடிப்பார்கள்.
4 9 பாவகம் மற்றும் புதன் கல்வி நிலையையும் டிகிரி பல பெறுவதை குறிக்கும்.
வேலை மற்றும் தொழிலுக்கான அமைப்பாக ,
வேலை செல்லும் பாவகமான ஆறாம் பாவகமும் , தொழில் ஸ்தானமான பத்தாம் பாவகம் மற்றும் இந்த பாவக அதிபதிகள் வருமான பொருளாதார நிலைக்கு அடிப்படையாக தேவை. #padmahazan
6 10 11 பாவகமும் குரு மற்றும் சூரிய சனி ஒருவரது வேலை அல்லது தொழில் வழியாக வரும் சம்பள வருமான பொருளாதார வளர்ச்சியை காட்டும்.
4 9 புதன் நன்றாக இருந்தால் நிறைய படித்து இருப்பார். 6 10 குரு சூரிய சனி கெட்டு இருந்தால் இவர்கள் பல டிகிரி முடித்தாலும் ஓர் நிலையான வேலை தொழில் அமைய தடுமாற்றமாக இருக்கும். கல்வி படிப்பு ஆர்வமாக இருப்பார்கள்.
4 9 புதன் கெட்டு இருந்து , 6 10 குரு சூரிய சனி நன்றாக இருந்தால் ஏதோ ஓர் டிகிரி அல்லது தொழிலை கற்று வருமானத்தை பெருக்கி கொள்வார்கள். படிப்பிற்கு முக்கியத்துவம் தராமல் பணம் மட்டுமே முக்கியமாக இவர்களுக்கு தெரியும்.
4 9 புதன் கல்வி நிலை மற்றும் 6 10 குரு சூரிய சனி நிலல இரண்டு அமைப்பும் நன்றாக இருப்பவர்களே... பல டிகிரி முடித்து அதற்கு ஏற்ற நிறுவனத்திலோ அல்லது அரசிலோ அல்லது தொழில் முனைவோராகவோ மாறி இருப்பார்கள்.
இதற்கு சாதகமான தசா வருவதும் மிக முக்கியம்.
கல்விக்கு ஹயக்ரீவர் மற்றும் சரஸ்வதி தேவி மற்றும் தொழிலுக்கு மஹாலெக்ஷ்மி வழிபாடு செய்வது நல்லது.
#padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment