திருமண பொருத்தம் அல்லது ஓர் ஜாதகத்தின் மணவாழ்வில் அந்தஸ்தை சிறப்பாக சொல்வதற்கு சுத்த ஜாதகம் என்று சொல்வார்கள்.
திருமண வாழ்விற்கு முக்கியமான பாவகங்கள் 2 மிடம் குடும்ப ஸ்தானம், 7 மிடம் களத்திர ஸ்தானம் , 8 மிடம் மாங்கல்ய ஸ்தானம்.
குறிப்பாக 7 8 பாவகங்களில் கிரகம் இல்லாத ஜாதகங்களை சுத்த ஜாதகம் என்பார்கள். இப்படிப்பட்ட சுத்தஜாதகம் பெற்றவர்களுக்கு திருமண பொருத்தம் பார்க்கும் போது இதற்கு மட்டும் அதிகபடியாக வரவேற்பை கொடுத்து பொருத்தம் பார்த்து " ஆஹா இது சுத்த ஜாதகம் நல்லா இருக்கும் வாழ்க்கை " சேர்த்து வைப்பார்கள்.
இது மாதிரியான சுத்த ஜாதகமும் கூட மணவாழ்வில் பிரிவை சந்தித்தது உண்டு. #padmahazan
சுத்த ஜாதகமே என்றாலும் அங்கே மணவாழ்க்கை பாதிப்பை தரும் பிற கிரக தொடர்புகள்
1). 7 8 பாவகம் சுத்தமாக கிரகங்கள் இல்லாமல் இருந்தாலும், அந்த பாவக அதிபதி 6 12 மறைவது அல்லது நீசம் பகை போன்ற வலு இழந்து ராகு கேது இணைவில் இருப்பது சனி பார்வை இருந்து அந்த ஏழாம் அதிபதி தசா புத்தி போன்றவை சுத்த ஜாதகமாகவே இருந்தாலும் மணவாழ்வை பிரிக்க பார்க்கும்.
2). சுத்த ஜாதக இருந்தாலும் , 12 பாவகமான போக ஸ்தானத்தில் சனியோ செவ்வாயோ இருந்தால், சனி மூன்றாம் பார்வை 2 மிடம் குடும்ப பாவகத்தில், செவ்வாயின் 8 பார்வை 7 பாவகமான களத்திர ஸ்தானத்தில் இருக்கும் போது குடும்ப வாழ்வில் சிக்கலை உண்டாகும்.padmahazan
3). 7 8 பாவகங்களில் கிரகம் இல்லை என்றாலும் புத்திர காரகன் குரு , காம காரகன் சுக்ரன் மீது நட்பு ஆட்சி உச்ச பெற்ற சனி பார்வை இருந்தாலும் காரகர்கள் குரு சுக்ரன் கெடுவது மணவாழ்வில் பாதிப்பை தரும்.
4). குரு + கேது , குரு + ராகு , சுக்ரன் +கேது , சுக்ரன் + ராகு , செவ்வாய் + ராகு இணைவுகள் மணவாழ்வில் சிக்கலை தரும். பொருளாதார பாதிப்பு கருத்து வேறுபாடு வீண் விவாத சண்டை பாதிப்பை தரும். #padmahazan
5). 7 8 பாவகம் மற்றும் பாவக அதிபதி உடனான சனி மற்றும் செவ்வாய் பார்வை இணைவு சுத்த ஜாதகமாக இருந்தாலும் இந்த சனி செவ்வாய் தசா புத்தி மணவாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும்.
7 8 பாவக அதிபதி நட்பு வீடுகளில் வலுவாக அமைந்து , பகை நீசம் கிரகணம் அஸ்தங்க தோஷம் பெறாமல் , ஏழாம் பாவகம் குரு பார்வை தனித்த சுக்ரன் அல்லது புதன் அல்லது வளர்பிறை சந்திர பார்வை பெற்று இருக்கும் நிலையே சுத்த ஜாதகம்.
7 மற்றும் 8 வது கட்டம் காலியாக இருந்தால் மட்டும் அது சுத்த ஜாதகம் ஆகிவிடாது.
7 மற்றும் 8 வது பாவக அதிபதிகளும் நன்றாக இருப்பது அவசியம்.
#padmahazan
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
No comments:
Post a Comment