Saturday, September 23, 2023

மகர லக்னம் _ 12 பாவகங்களில் சுக்ரன் தரும் பலன்கள்

🍁 மகர லக்னம் _ 12 பாவகங்களில் சுக்ரன் தரும் பலன்கள் 🍁 #hazan 

மகர லக்னத்திற்கு சுக்ரன் பூர்வ புண்ணிய அதிர்ஷ்ட புத்திர ஐந்தாம் பாவகம் மற்றும் தொழில் வருமானம் பதவி தரும் பத்தாம் பாவக அதிபதி. 

மகர லக்னத்திற்கு முழுமையாக யோகத்தை தரும் ஓர் கிரகம் என்றால் அது சுக்ரன் மட்டுமே. வெறெந்த கிரகமும் அவ்வளவு பெரிய சுப ஆதிபத்திய யோக பலனை இந்த லக்னத்திற்கு தராது. 

மகர லக்னத்திற்கு ஓர் கேந்திரம் மற்றும் ஓர் திரிகோண ராசிக்கு அதிபதியாகும் சுக்ரன் ராஜயோகாதிபதி. 

லக்னாதிபதியான சனி , 2 வீட்டிற்கு அதிபதியாகி மாரகாதிபதி ஆவதால் சில இடங்களில் லக்னாதிபதியே சில பாதிப்பை ஜாதகரது வயதிற்கு  ஏற்ப ஏற்படுத்திவிடுவார். வேலியே பயிரை மேய்ந்ததை போல சனி வயதிற்கு ஏற்ப ஜாதக தசா வலு ஏற்ப இதை செய்வார். #padmahazan 

மகர லக்னத்திற்கு 9 அதிபதியான பாக்கியாதிபதி புதனே மறுபக்கம் கடன் நோய் எதிரி தரும் ஆறாம் அதிபதி ஆகிவிடுவார். 

மகர லக்னத்திற்கு குரு லக்னாதிபதிக்கு சம கிரகம் ஆவதால் 3 பாவகத்தோடு தொடர்பு கொண்ட குரு நற்பலனை தருவார். மாறாக 12  பாவகமான விரைய நிலையில் தொடர்பு கொள்ள நஷ்டம் இழப்பு வெளிநாட்டு வாழ்வை ஏற்படுத்தி விடுவார். 

மகர லக்னத்திற்கு லக்னாதிபதி சனிக்கு பகை கிரகங்களான சூரிய சந்திர செவ்வாய் இயல்பாகவே சிறப்பு யோக பலனை தரமாட்டார்கள். ஆதிபத்திய அசுபர் ஆக வருவார்கள்.

ஒரே முழு ராஜ யோக கிரகம் ஆக சுக்ரன் மட்டுமே செயல்படுவார். 

மகர லக்னகாரர்களுக்கு சுக்ரன் மட்டும் நன்றாக ஸ்தான பலத்தோடு லக்ன கேந்திர கோணத்தில் இருப்பது மிக பெரிய சுப பலனை தன் தசா புத்தி காலத்தில் கொடுப்பார். 

லக்னத்தில் சுக்ரன் என்பது ஆடம்பர சொகுசு வாழ்வை ஏற்படுத்தி கொடுத்து மேம்பட்ட வாழ்வில் நன்றாக இருக்க வைத்துவிடுவார். தனி சுக்ரனாக லக்னத்தில் இருப்பது நல்ல பொருளாதார மேன்மை சுக்ரன் தொழில் வழியாக தரும். #padmahazan 

2ம் இடமான கும்ப தன பாவக சுக்ரன் நீடித்த நிலையான சேமிப்பு பணம் கலகலப்பான பேச்சு குடும்ப வாழ்வில் நிம்மதி போன்ற யோக பலனை தருவார். சனி செவ்வாய் ராகு கேது இணைவு பார்வை இருக்க கூடாது. பலன் மாறும். 

3ல் மீனத்தில் உச்சமாகும் சுக்ரன் அதீத இசை பிரியர் அல்லது இசை நாடக ஆர்வம் முயற்சிகள் பல செய்து பெரும் தொழில் மேன்மை பெறுவார். மூன்றில் மறைவது திருமணம் தாமதபடும். 

4 ல்  மேஷ சுக்ரன் இருப்பது மிக யோகமான அமைப்பு. 10 ல் ஆட்சி பெறுவதை விட 4 வீட்டில் இருந்து 10 வீட்டை பார்வை செய்வது மிக மேன்மையான தொழில் முன்னேற்றம் டிராவல்ஸ் வாகன யோகம் போன்ற ஆடம்பர சொகுசு நிலையை ஏற்படுத்தி தருவார். Padmahazan செவ்வாயோடு சுக்ரன் 5 மற்றும் 10 பாவகத்தோடு பரிவர்த்தனையாக இருப்பது மிக சிறப்பான அமைப்பு. 

5ல் ரிஷப சுக்ரன் இளம் வயதில் திருமணம் குழந்தை பாக்கியம் போன்ற யோக பலனை தசா புத்தி காலத்தில் தருவார். பெண்களால் முன்னேற்றம் பெண்களின் நம்பிக்கை உரிய நபராக ஜாதகர் இருப்பார். பண புழக்கம் நன்றாக இருக்கும். #padmahazan

6ல் மிதுன சுக்ரன் நல்ல வேலை தரும் துணிக்கடை நகைகடை பேன்ஷி ஸ்டோர் பேக்கரி பெண் சார்ந்த வியாபார நிலைகளில் வேலை தரும். இருப்பினும் வாழ்வில் மனைவிக்காக கடன் வாங்குவது அல்லது பெண்களால் கடன் சிக்கி கொள்ள கூடும். 

தொழில் தொடங்க கடன் வாங்குவது மாதிரியான நல் பலனை கெடுபலனை கலந்து தரும். இங்கே சுக்ரன் சனி செவ்வாய் ராகு சூரியன் இணைவு இல்லாமல் இருப்பது நல்லது. 

7ல் கடக சுக்ரன் தனித்து லக்னத்தை பார்ப்பது யோகம் கூட்டு தொழில் மனைவி உதவியோடு தொழில் அல்லது திருமண ஏற்பாட்டாளர் மேட்ரிமோணி பேக்கரி தொழில் உயர்தர உணவகம் மாதிரியான தொழிலை தரும். சில ஜாதகங்களில் மணவாழ்வில் சிக்கலை தருகிறது. 

8ல் சிம்ம சுக்ரன் தாமத புத்திர திருமண பாக்கியம் தரும் , சிலருக்கு வெளிநாடு வெளிமாநில வருமானம் அமைந்துவிடும். மனைவி பிரிந்து வாழ்வது அல்லது கருத்து வேறுபாடு அல்லது ஒற்றுமை குறைவான கணவன் மனைவி தரும். ஏழாம் பாவகம் பாவகாதிபதி சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் மணவாழ்க்கை கொஞ்சம் நிம்மதியாக அமையும். எட்டில் மறையும் சுக்ரனுக்கு சனி ராகு இணைவு நிச்சயமாக இருக்கவே கூடாது இருந்தால் தசா யோக பலனை செய்யாது. 

9ல் கன்னி சுக்ரன் நீச நிலையில் இருந்தாலும் உச்ச புதன் இணைவு அல்லது பரிவர்த்தனையாக புதனோடு இருப்பது நன்மை தரும். தந்தை வழி பாதிப்பு அல்லது ஆதரவு குறைந்து தொழிலில் முதலில் நஷ்டம் வருமான பாதிப்பை சந்தித்து நீசபங்க பலனாக நல்ல பொருளாதார ஆடம்பர சொகுசு நிலையை நீசபங்க சுக்ரன் தருவார். உச்ச புதன் இணைவில் இருப்பது சுக்ர தசா நினைச்சு பார்க்க முடியாத மேம்பட்ட வாழ்வை லக்னாதிபதியான சனி வலு ஏற்ப தரும். #padmahazan 

10ல் துலா சுக்ரன் , தனித்து பாவ கிரக தொடர்பு இல்லாத சுக்ரன் தொழில் நிலை தராது. கேந்திராதிபத்திய தோஷமாக தொழில் தடை தரும். சுக்ரனோடு இங்கே புதன் குரு செவ்வாய் அல்லது உச்ச லக்னாதிபதி சனி இணைவது நீடித்த தன யோகத்தை தொழிலில் தரும். 

4 11 உடைய செவ்வாய் இணைவில் பரிவர்த்தனையாக உள்ள சுக்ரன் பத்தாம் இடத்தோடு தொடர்பு போலீஸ் ரியல் எஸ்டேட் போன்ற துறையில் தனலாபத்தை பிருகு மங்கள யோகமாக தரும். 

11ல் விருச்சிக சுக்ரன் , லாப ஸ்தானத்தில் இருக்கும் சுக்ரன் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தை தொடர்பு கொண்டு புத்திர பாக்கியம் தன லாபம் தொழில் மேன்மை போன்ற யோக பலனை தருவார். #padmahazan 

12 ல் தனுசு சுக்ரன் இருப்பது ஆடம்பர சுப செலவுகளை தருவார் , கணக்கு அடங்காத செலவுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் விரையம் இருக்கும் வேலை செல்லும் சூழலை ஏற்படுத்தும். தாமத புத்திர பாக்கியம் அல்லது பிள்ளைகளால் விரையம் செலவு கூடுதலாக ஏற்படும்.

மகர லக்ன ராஜயோகாதிபதி சுக்ரன் லக்னம் 1 , தன குடும்பம் 2 , சுக ஸ்தானம் 4 , புத்திர ஸ்தானம் 5 , தொழில் ஸ்தானம் 10 , லாப ஸ்தானம் 11 ஆகிய இடங்களில் தனித்து அல்லது புதன் குரு சுபர் இணைவில் இருப்பது நற்பலனை தரும்

ராகு கேது சூரிய இணைவு அல்லது சனி பார்வை பெற்று இருப்பது சிறப்பு தராது சில பல சிக்கலான வாழ்வை ஏற்படுத்தி தரும் 

#padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...