🪡வயதிற்கு ஏற்ற எந்த நிகழ்வும் சரியாக உங்களுக்கு நடக்காது. படிக்கும் வயதில் ஏதோ ஓர் படிப்பை கடமைக்கு படித்து அதில் புலமை பெற முடியாது.
🪡திருமணம் தள்ளி போகும் அல்லது நிலையான பொருளாதார பணபுழக்கம் பெற தொழில் வேலையில் போராட வேண்டி இருக்கும்.
🪡நினைத்த காரியத்தை அடைய பல தரப்பட்ட தடை தாமதம் தாண்டி முயற்சி பல செய்ய வேண்டி இருக்கும். #padmahazan
🪡கால தாமதமாக நினைத்த செயல் சுப காரியம் நடைபெறும்.
🪡கிடைத்த ஒன்றை நீங்கள் தக்க வைத்து கொள்ள கஷ்டங்களை பார்க்க வேண்டி இருக்கும்
🪡நீங்கள் மற்றவர்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டி இருக்கும் அல்லது மற்றவர்கள் உங்கள் மீது ஆதிக்கம் அதிகார ஆளுமை செலுத்துவார்கள்.
🪡உங்கள் ஜாதகத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் லக்னாதிபதி போலவே கெட்டு இருந்தால் முழுமையாக அடிமை போல மற்றவர்கள் சொல்வதை பின்பற்ற வேண்டிய சூழலுக்கு தள்ளபடுவீங்க.
🪡ஓர் செயலை முடிக்க வேண்டும் என்கிற நேரம் அல்லது நாள் குள் உங்களால் முடிக்க முடியாது அல்லது அதற்கு பல போராட்டமான சூழல் உங்களை சுற்றி நிலவும். கூடுதலாக சனி வலுத்தால் அல்லது சனி லக்ன ராசியில் இருந்தால் பல சந்தர்ப்பம் முன்னேற்ற தடை நீங்களே காரணமாக அமைந்துவிடுவீர்கள்
🪡குறிக்கோள் அல்லது காரியத்தை திறம்பட முடிக்க வேண்டிய திறனை நீங்கள் இழக்க வேண்டி இருக்கும். தேவையற்ற விஷயங்களில் கவனம் அல்லது பொழுது போக நேரத்தை வீணடித்து பின் புலம்பிய வாழ்வை ஏற்படுத்தி கொள்வீர்கள்
🪡வாழ்வில் பல வாய்ப்புகளை முன்னேற்ற வழிகளை ஏதோ ஓர் காரணம் சொல்லி தட்டி கழிக்கபீங்க , அல்லது வாய்ப்பை பயன்படுத்த போதுமான உதவிகள் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். #padmahazan
🪡தவறான முடிவுகளை எடுப்பது அல்லது முடிவுகளை எடுக்க தயங்குவது மாதிரியான தெளிவில்லாத நிலையில் ஜாதகரை வைத்துவிடும்
🪡போராட்டமான சூழலுக்கு மத்தியில் வாழும் சூழலை தரும்.
இங்கே லக்னம் லக்னாதிபதி வலுஇழப்பது என்பது ,
🪡லக்னாதிபதி சம பகை நீசம் பெற்று இருப்பது , அல்லது
🪡சனி செவ்வாய் இணைவில் பார்வையில் இருப்பது,
🪡ராகுவோடு 8 டிகிரிகுள் லக்னாதிபதி இருப்பது,
🪡லக்னாதிபதி 6 8 12 பாவகங்களில் அஸ்தங்க தோஷம் பெறுவது ,
🪡லக்னத்தில் ராகு இருப்பது சனி மற்றும் செவ்வாய் இருப்பது தேய்பிறை பாவியான சந்திர இருப்பது
🪡சுபர்களான குரு புதன் சுக்ரன் வளர்பிறை சந்திரன் தொடர்பு கொள்ளாத லக்னமும் லக்னாதிபதியும் வலு இழந்த நிலையில் மேலே சொன்ன பலன்களை தருவார்கள்.
பாதிப்பை தவிர்ப்பது எப்படி..?
லக்னாதிபதிக்கு உரிய அதிதேவதை , கடவுள் வழிபாடு , விருட்ச மரம் , நிறங்களை பயன்படுத்தும் போது மாற்றங்கள் காணலாம்
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment