🍁 கையில் பணம் சேராதா , சேர்க்க முடியாத கிரக நிலைகள் 🍁 #hazan
இன்றைய கால கட்டத்தில் வாழ்க்கையில் பணம் பெரும் பங்கு வகிக்கிறது.
சிலருக்கு கையில் பணம் நன்றாக புழங்கும் போது பலருக்கு பணம் சேர்க்க அல்லது கைக்கு வரவே போராட்டமான சூழலில் உள்ளது.
கையில் பணம் சேராதா , சேர்க்க முடியாத கிரக நிலைகள் :
1). லக்னம் லக்னாதிபதி சனி செவ்வாய் ராகுவால் பாதிக்கும் போதும், லக்னாதிபதி பகை நீசம் ராகு கேதுவுடன் இணைந்து கிரகன தோஷம் பெறும் போது லக்னம் லக்னாதிபதி பாதித்து ,
ஜாதகர் தன் தேவைக்காக பிறரை சார்ந்து வாழ வேண்டி இருக்கும். அல்லது இக்கட்டான சூழலில் போராட்ட வாழ்வில் பண பொருளாதார நிலையில் தினகூலி அல்லது குறைந்தபட்ச மாத வருமானத்தில் வைத்து இருக்கும்.
இது போன்ற அமைப்புகளில் வரும் பணம் சிறியதோ பெரியதோ குடும்பத்தில் உள்ள நம்பிக்கை உரிய நபரிடம் கொடுத்து வைப்பது பணத்திற்கு நல்லது. #padmahazan
2). தன ஸ்தான அதிபதி இரண்டாம் அதிபதி கிரகம் 6 8 12 மறையும் போது நிச்சயமாக கையில் பணம் தங்காது. பணத்தோடு வாழ தூர தேசம் அல்லது வெளியூரில் வாழும் போது தன சேர்க்கை தரும்.
சொந்த ஊரில் இருந்து சம்பாதித்து வரும் பணம் கடன் மருத்துவ செலவு அல்லது ஏதோ ஓர் விரையம் வட்டி கட்டுவது , லோன் , வம்பு வழக்கு மாதிரியான நிலைகளில் பணம் சேராமல் பணம் செலவாகும்.
3). 2ல் சனி ஆட்சி உச்சம் பெறுவது
2ல் செவ்வாய் ஆட்சி உச்சம் பெறுவது
2ல் தேய்பிறை பாவியான சந்திர ஆட்சி பெறுவது ,
சனி செவ்வாய் இணைந்து 2 இடமான தன பாவகத்தில் இருப்பது அல்லது தன பாவகத்தை சனி செவ்வாய் பார்ப்பது போன்ற நிலையில் ரொக்க பணம் சேர்க்க முடியாது.
அவரவர்கள் ஜாதகத்தில் வலுவாக உள்ள லக்ன யோகர் காரகத்துவ முதலீடாக மாற்றி கொள்ளலாம்.
உதாரணமாக 2ல் சனி உச்சமாகி தன பாவகம் கெட்டாலும் செவ்வாய் 4 7 10 3 11 இடங்களில் இருக்க ரொக்க பணத்தை இடமாக மாற்றி கொள்வது போன்ற நிலை பணத்தை தக்க வைக்க ஜாதகரால் முடியும்.
4). ராகுவோடு இணைந்த கிரக தசா பெரும்பாலும் ஏதோ ஓர் தடை அல்லது இடையூறு பயம் போன்ற காரணங்களால் ஒருவருக்கு பணம் சேர விடாமல் தடுக்கும். துர்க்கை வழிபாடு செய்வது பாதிப்பை குறைக்கும். #padmahazan
5). தன காரகன் குரு பலவீனம் அடையும் போது ஒருவரால் பணத்தை சேமிக்க இயலாது. பலவீனம் என்பது குரு ராகுவோடு கிரகண தோஷம் பெறுவது. சனி பார்வை இணைவில் குரு இருப்பது போன்ற நிலைகள்.
6). சனி வலுத்து குரு பலவீன ஜாதகங்களில் செய்யும் வேலை அல்லது தொழிலில் உழைப்பிற்கு ஏற்ற ஊதியமோ வருமானமோ வராது.
விவசாயம் அல்லது காய்கறி பழம் விளைவிக்கும் அடிதட்டு மக்கள் ஜாதகத்தில் இந்த கிரக நிலை பார்க்க முடியும். Padmahazan
7). குரு பலவீனமாகி, சுக்ரன் வலுபெற்றவர்கள் அதீத செலவாளி அதனால் உண்டாகும் கடன் நிலையை குறிக்கும்.
குடும்ப பராமரிப்பு குடும்ப செலவுகளுக்கு தேவையான பணத்தை தருவது சுக்ரன் அந்த சுக்ரன் ஆட்சி உச்ச நிலையில் இருக்க , சேமிப்பு முதலீடு குறிக்கும் குரு பலவீனமாகி கெட்டால் சுக்ரன் இஷ்டத்து செலவுகளை இழுத்து விட்டு ஓர் கட்டத்தில் ஜாதகரை குடும்பத்தை கடனில் இழுத்து விடவும் செய்யும். ஆறாம் பாவகம் வலு ஏற்ப கடன் வாங்கி ஏமாற்றுவார் அல்லது கடனால் திண்டாடுவார் ஜாதகர்.
8) குரு கேது கேளயோகம்
குரு ராகு சண்டாள யோகம் போன்றவை அந்த அந்த கேது மற்றும் ராகு தசாக்களில் தாராளமாக பணத்தை சேமிப்பை தருமே தவிர , ராகு கேது தசா போன பிறகு மீண்டும் பழைய பொருளாதார சிக்கலுக்குள் ஜாதகரை கொண்டு வரும். இதற்கு 2 9 10 11 பாவகம் வலு இந்த பாதிப்பை குறைக்கும்
குரு ராகு கேது இணையும் போது குரு 15 டிகிரி மேலே விலகி இருப்பது நல்லது. அதோடு குரு நட்பு ஆட்சி உச்ச ராசிகளில் இருப்பது சிறப்பு. பெருமளவு பொருளாதார பண பாதிப்பை குரு தரமாட்டார். #padmahazan
மேலே சொன்ன விதிகளையும் தாண்டி நிறைய உப விதிகளும் விதி விலக்குகளும் உள்ளன.
ஒரு சிலருக்கு அப்போதைய தசா அல்லது ஓர் குறிப்பிட்ட புத்தி காலத்தில் மட்டும் பண பிரச்சனை பொருளாதார பாதிப்பை அடைவார்கள் , ஒரு சிலர் பிறந்தது முதலே போதுமான பண புழக்கம் இன்றி பாதிக்கபட்டு இருப்பார்கள்.
இதற்கான காரணம் 2 5 8 11 மற்றும் 6 9 10 பாவக பாவகாதிபதி நிலைகளும் அடங்கும்.
மிக முக்கியமாக லக்னம் லக்னாதிபதி சனியால் பாதிக்கும் போது வாழ்வில் ஏற்றமும் இறக்கும் மாறி மாறி வரும்.
லக்னமும் லக்னாதிபதியும் நன்றாக வலுத்து சுப கிரக இணைவில் உள்ள போது பொருளாதார ரீதியிலான நிலையான வருமானம் தசா ஏற்ப நிச்சயமாக ஏற்படுத்தி கொள்வார்கள். நடக்கும் தசா சாதகமாக அமைவதும் இங்கே மிக முக்கியம்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment