Monday, August 14, 2023

4ல் கேது பல கிரக இணைவு மகன் பிரிவு

🍁 கேது _ 4ல் பல கிரக இணைவு _ மகன் பிரிவு 🍁  #hazan 

ஜோதிடத்தில் நான்காம் பாவகமாக சுக ஸ்தானத்தை சொல்வார்கள். ஓட்டு மொத்த வீடு வாகனம் ஆடம்பர சொகுசு வாழ்வை சுக ஸ்தானம் குறிக்கும்.

கேது ஓர் உணர்பு பூர்வமாக ஜாதகரை பாதிக்கும் அல்லது தாக்கத்தை மனதில் ஏற்படுத்தும் நிழல். 

கேதுவோடு இணையும் கிரகம் உணர்வு ரீதியாக ஜாதகரை ரொம்ப பாதிக்கும். இணையும் கிரக ரீதியிலான வகைகளில் பணம் பொருள் ஆதாயம் தரும். இணைந்த கிரகம் பெற்ற உயிர் காரகம் ஜாதகரை கைவிட்டு போகும் அல்லது தொடர்பை துண்டிக்கும் அல்லது ஓர் விதமான முழு ஒற்றுமை இல்லாத வாழ்வை வாழ வைக்கும். 

பலன் சொல்லும் போது ஜாதகர் சொன்னது , 

" பையனுக்காக வீடு கட்டினேன் சொத்து சேர்த்தேன், அவனுக்கு lift பிடிக்கும் லிப்ட் வைச்சி வீடு கட்டினேன் , லட்ச லட்சமா பணத்தை போட்டு படிக்க வச்சேன், படிச்சிட்டு இப்ப கனடா வேலை போய்ட்டு  சொந்த ஊருக்கு என்னை பார்க்க கூட வரமாட்றான் , இவருக்காக கட்டிய வீடு தனியா நானும் மனைவியும் தான் இருக்கோம் , அவ்வளவு பெரிய வீட்டுல அவன் இல்ல அப்படிங்கிற பெரிய கவலையா இருக்கு " அப்படினு ஒருவர் வேதனை பட்டார். #padmahazan 

இவர் ஜாதகத்தில் லக்ன யோகர்களான புத்திர ஸ்தான அதிபதி 5 அதிபதி பாக்கிய ஸ்தான 9 அதிபதி என 3 கிரகங்கள் சுக ஸ்தானமான 4 வீட்டில் உள்ளது. கூடவே கேதுவும் உள்ளார். 

கேதுவோடு இணைந்த மூன்று கிரகங்கள் 4ம் பாவகத்தில் உள்ளது. 

5 வீட்டிற்கு அதிபதி 5 ற்கு 12ல் மறைந்து 4ல் கேதுவோடு , பையன் பரதேச வாழ்வை விரும்பி வெளிநாடு போய் விட்டார். 

ஜாதகருக்கு 5 9 உடைய யோகாதிபதிகள் நல்ல வீட்டை சொகுசு நிலையை ஜாதகருக்கு கொடுக்க பார்த்தாலும், கேது நாலில் நின்று மொத்தமாக காரியத்தை கெடுத்து விட்டார்.

வீடு ஆடம்பரம் வருமானம் போன்ற பொருள் இடம் பணம் ஆதாயத்தை கொடுத்த கேது ஐந்தாம் அதிபதி 4ல் கேதுவோடு இணைவதால் பெற்ற மகனை பிரித்து ஜாதகர் வாட வைத்து விட்டார். 

வீட்டிற்குள் lift வைத்து வீடு கட்டும் அளவில் செல்வந்தராக இருந்தாலும், 4ல் கேது என்பது அவரை நிம்மதியாக சுக வாழ்வை பெற வழிவகை தடையாக உள்ளது.

4ல் கேது என்பது வீடு கொடுத்த கிரக வலு மற்றும் சுக்ரன் செவ்வாய் போன்ற காரக கிரக வலிமை ஏற்ப வீடு நிலம் வாகனம் போன்ற கொடுக்கும். ஆனால் அதில் தாமரை மேலே தண்ணீர் போல ஒட்டுதல் இன்றி அனுபவிக்க வைக்கும். 

கேதுவோடு கிரகங்கள் இணைவதை கர்ம ரீதியாக பார்த்தால் அது முழுமையாக நிறைவான நல்பலனை தராது. கேது நின்ற இடம் என்றைக்குமே நிறைவான பலனை அனுபவிக்க விடாது. 

விநாயகர் வழிபாடு பாதிப்பை குறைக்கும் மனதை தேற்றி கொள்ள வழிதரும். 

#padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
 WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...