Friday, August 4, 2023

பெண் குழந்தைகளால் உண்டாகும் தொழில் வருமான யோகம்

🍁 பெண் குழந்தைகளால் உண்டாகும் தொழில் வருமான யோகம் 🍁 #hazan 

இன்றைய கால கட்டத்தில் பெண் குழந்தைகளை வளர்த்து , திருமணம் வரை கொண்டு செல்வது பெற்றவர்களுக்கு பெரிய காரியமாகவே உள்ளது. பலர் பெண் குழந்தை பிறப்பதை ஏதோ கஷ்டகாலமாக பார்க்கிறார்கள். 

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் , பெண் கிரகங்களான சுக்ரனும் சந்திரனும் ஒருவருக்கு வலுப்பெற்ற நிலையில் , திருமணத்திற்கு பிறகு சுக்ர தசாவோ சந்திரன் தசாவோ நடந்தால், பெண் குழந்தையை கொடுத்து பெண் குழந்தை பிறகான தந்தை அல்லது தாய்க்கு யோகத்தை தரும். 

பெண் குழந்தை பெற்ற பிறகு ஜவுளி தொழில் , பட்டு தொழில் , டிராவல்ஸ் , டைலரிங் , பேன்ஸி ஸ்டோர் , சினிமா தியேட்டர், போட்டோகிராபி மற்றும் பெண்கள் பயன்படுத்தும் பொருட்களை உற்பத்தி மற்றும் தொழில் நடத்தும் ஆண்களுக்கு தொழில் முன்னேற்றம் தரும். #padmahazan 

உணவு, சாப்பாடு , தின்பண்டம், ஸ்நாக்ஸ் , ஸ்வீட் கடை , பேக்கரி , காய்கறி தொழில் , பழகடை , அரசி வியாபாரம் ஹோட்டல் பயணம் சார்ந்த  தொழில்  நடந்துபவர்களுக்கும் பெண் கிரகமான சந்திரன் தொழில் ஏற்றத்தை தர போகிறது என்றால் அந்த ஜாதகருக்கு திருமணமான நிலையில் பெண் குழந்தை கொடுத்து தொழிலில் சிறப்படைய வைக்கும்.

மூன்று பெண் குழந்தைகளை பெற்று அந்த குழந்தைகள் வளர வளர தன் தொழிலும் மேலும் மேலும் வளர்ந்து பல கிளைகளை கொண்ட துணி வியாபாரி , ஸ்வீட் கடை முதலாளி ஜாதகங்களில் சுக்ரன் அல்லது சந்திரன் பெண் கிரகம் தொழில் வருமான பாவகமான 2 10 5 11 இடங்களோடு தொடர்பு கொண்டு இருக்கும்.

அதே போல , அந்த பெண் குழந்தை ஜாதகத்தில் பிறந்த கால கட்டத்தில் தந்தையை குறிக்கும் பாக்கிய ஸ்தானத்தில் 9 பாவகத்தில் லக்ன சுபரோ அல்லது இயற்கை சுப கிரகமோ சுப யோக நட்சத்திர  சாரத்தில் நின்று தசா நடத்தும். #padmahazan 

ஒரு பெண்குழந்தை ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானத்திலோ , சுக ஸ்தானத்திலோ , அதாவது 9 4 பாவகங்களில் குரு சுக்ரன் வளர்பிறை சந்திரன் புதன் லக்ன சுபர்களாகி இணையும் போது , இவர்களது தசா காலம் தாய் அல்லது தந்தை நல்ல நிலைக்கு கொண்டு வரும். 

" உங்க வீட்டோட மஹா லக்ஷ்மியே நீங்கள் பெற்ற அந்த பெண் குழந்தைதான் "  

அப்படினு சொல்ற அளவுக்கு தனமும் பொருளும் வருமானமும் ஆடம்பர சுப வாழ்வை ஒரு பெண் குழந்தை மேலே சொன்ன கிரக அமைப்புகள் நன்றாக அமைந்து தசா நடக்கும் நிலையில் இதை அனுபவத்தில் பார்க்க முடியும். 

பெண் கிரகங்களான சுக்ரனும் சந்திரனும் சுப கிரக தன்மை இழக்காமல் லக்ன கேந்திர கோணத்தில் தொழில் நிலை வருமான பாவகத்தில் இருக்கும் போது பெண் குழந்தை பிறந்து பின் யோகத்தை பெற்றவர்களாக அந்த ஜாதகரோ ஜாதகியோ இருப்பார்கள்.

ஐந்தாம் அதிபதி சுக்ரனோ சந்திரனோ ஆட்சி உச்சம் பெற்றாலும் லக்ன கேந்திர கோணத்தில் நட்பு வீட்டில் இருந்தாலோ அது பெண குழந்தை பிறந்து பின் யோகத்தை அந்த சுக்ரன் அல்லது சந்திரன் தசாவில் கொடுக்கும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
WHAT'S APP 8300 620 851

மேலும் பல ஜோதிட பதிவுகள் வீடியோ காண என் Jyeshta Padma Hazan   ஐடியில் follow பண்ணுங்க. 

#padmahazan

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...