🍁 சுக்ரன் தரும் சுகவாழ்க்கை 🍁 #hazan
ஜோதிடத்தில் சுக்ரனை குருவிற்கு அடுத்த சுப கிரகமாக கூறபட்டு உள்ளது. முக்கால் சுபர் ஆகும் சுக்ரன் ஆடம்பரமான சொகுசை தரகூடியவர்.
" அட என்னப்பா எல்லோரும் இதையே சொல்றீங்க... ஆடம்பரம்
சொகுசு இப்படியே சொன்னா எப்படி விளக்கமா சொல்லுங்கள் " னு பலர் யோசிச்சி இருபீங்க. இதோ...
ஆடம்பரம் என்றாலே பளபளப்பான, அழகான, வசீகரிக்கும் தோற்றமுள்ள பொருட்கள், பிற பொருட்களை
புறகணிக்க தூண்டும் விதமாக தோன்ற வைக்கும் நிலையை தருபவர் சுக்ரன்.
விலை உயர்ந்த பைக் கார் , உயர்தர வால்வோ பஸ் , விமான கப்பல் பயணம் , போன்ற சொகுசு நிலையை குறிப்பார்.
ஒருவர் ஜாதகத்தில் சுக்ரன் வலுத்து இருந்தாலே அவர் ஆடம்பரத்தை அதிகமாக விரும்புபவராக இருப்பார்.
விலை உயர்ந்த பொருட்களை விரும்புவது, வரவிற்கும் மீறிய செலவுகளை செய்வது, எது பிறரை வசீகரிக்குமோ அதை
தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் எதையும் அனுகி பெறுவது மாதிரியான எண்ணங்களை தருவது
சுக்ரன்.padmahazan
வாடகை வீட்டில் இருந்தாலும் 10000 15000 ரூபாய் வாடகை தரும் வீட்டில்தான் இருப்பேன் சொகுசு வாழ்வை தேட வைப்பார். காரணம் அசௌகரியமான சூழலை சுக்ரன் விரும்பமாட்டார்.
பெட்ரோல் விலை 100 ரூபாய் விற்றாலும் லிட்டருக்கு 20 km மைலேஜ் தரும் பைக் மட்டுமே பயன்படுத்துவது என்கிற வாகன மோகத்தை சுக்ரன் தருவார்
மொபைல் போன் என்றால் iPhone, oneplus போன்றவற்றை பயன்படுத்துவது, விலை உயர்ந்த எலக்ட்ரிக்கல் பொருட்களை சேர்ப்பது,
மாத மாதம் shopping போகனும், தன்னை அழகுபடுத்தி கொள்ள தனி பெரும் பணத்தை செலவழிப்பது போன்ற
நிலையை தருவது, அதிக விலையிலான அல்லது அதிக எண்ணிக்கையிலான வாட்ச் , ஷீ , துணிகள் என பலவற்றை சேர்க்க வைப்பதும் சுக்ரன்தான்.
குறிப்பாக ஒருவரை பெண்கள் விரும்பும் வகையில் பெண்களுக்கு பொருட்களை வாங்கி தருவது, அளவு கடந்த பணத்தை
பெண்களுக்கு மற்றும் வாழ்க்கை துணைக்கு செலவளிக்க வைப்பதும், இதே சுக்ரனே.
கையில் பணம் இல்லை என்றாலும் கடன் வாங்கி ஆடம்பர செலவுகளை செய்வதும் பொருட்களை வாங்கி
கொள்வதும் இதே சுக்ரன் தரும் பலன்தான் .#padmahazan
போதுமான பண புழக்கத்தை தர இயலாத நிலையில் சுகரன் மட்டுமே வலுத்து இருக்கும் ஜாதகர் அளவுகடந்த
செலவில் கடனாளியாக மாற்றி பெரும் சிக்கலில் மாட்ட வைப்பார்.
மாதம் EMI மட்டுமே 30 ஆயிரம் , 40 ஆயிரம் கட்டும் பல IT ஊழியர்களுக்கு சுக்ரன் ஆறாம் அதிபதியாகி உச்சம் ஆகி நாலில் இருப்பார் , அல்லது ஆறில் சுக்ரனே நட்பு ஆட்சி ஆகி இருப்பார்.
சினிமா டிவி சீரியல் பிரபலங்கள் சுக்ரனின் ஆதிக்கத்தை அதிகமாக கொண்டவர்கள் இவர்களின் ஆடம்பர சொகுசு
வாழ்க்கை முறை வெளியில் இருந்து பார்த்தால் சிறப்பாக இருந்தாலும் அதிகபடியாக வலுத்த சுகரன் பெரும்பாலான
நிலைகளில் கடன் காரரங்களாகவும் பெரும் பணத்தை இவர்கள் தேவையற்ற வழியில் இழப்பதற்காகவும் இருக்கும்.
சில ஜாதகங்களில் சுக்ரன் உயிர் இல்லாத ஜட பொருட்கள் என்கிற வீடு வாகனம் சொகுசு பொருட்களை தரும் சுக்ரன் மறுபக்கம் வாழ்க்கை துணை, மனைவி, போன்ற உயிர் பொருளை பிரிக்கும் அல்லது இழக்கவும் செய்கிறது.
சில நிலைகளில் எவ்வளவு எவ்வளவு ஆடம்பரமான நிலைக்கு ஜாதகர் நகர்கிறாரோ , அவ்வளவு இல்லற வாழ்வில் கணவன் மனைவி கருத்து வேறுபாட்டை பிரிவையும் இதே சுக்ரன் தருவார்.
சுக்ரன் நட்பு சம வீடுகளில் லக்னத்திற்கு 1 2 4 5 9 10 11 இடங்களில் இருப்பது மிக சிறப்பு.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment