லக்னத்திற்கு 9 மற்றும் 10 அதிபதிகளால் உண்டாவதே தர்மகர்மாதிபதி யோகம்.
அரசு பணியாளர்களது ஜாதகத்தில், அதிகார பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகளது ஜாதகத்தில் , கோவில் நிர்வாகம் அல்லது தொண்டு நிறுவனம் நடத்தும் நபர்களது ஜாதகத்தில் இந்த தர்மகர்மாதிபதி யோகத்தை காணலாம்.
9 10 அதிபதிகள் இணைந்து , 2 3 4 7 9 10 11 பாவகங்களில் இருப்பது,
9 10 அதிபதிகள் பரிவர்த்தனையாக இருப்பது,
9 அதிபதி , 10 அதிபதி தன் வீட்டை தானே பார்ப்பது,
10 அதிபதி 9 பாவகத்தை பார்ப்பது,
9 அதிபதி 10 பாவகத்தை பார்ப்பது,
9 மற்றும் 10 அதிபதிகள் தங்களுக்குள் நட்சத்திர பரிவர்த்தனையாக ஆக இருப்பது போன்றவை தர்மகர்ம பலனை தரும் நிலைகளாகும் #padmahazan
🟢 உதாரணம் 🟢
1). தனுசு லக்னத்திற்கு 10 இடத்தில் , உச்ச புதனும் சூரியனும் இணைவது தர்மகர்மாதிபதி யோகமாகும் , இந்த யோகம் அரசு பணி அதிகார பொறுப்பில் உள்ள நபர்களது ஜாதகத்தில் காணலாம். ( இதே அமைப்பு புதாத்திய யோகமாகவும் அமையும் )
2). மீன லக்னத்திற்கு ஏழாம் இடமான கன்னியில் குருவும் செவ்வாயும் இணைவது தர்மகர்மாதிபதி யோகம். மீன லக்ன 9 10 அதிபதிகளாக வரும் இவர்கள் ஜாதகரை நிலம் சார்ந்த அரசு பணியாளராக வைத்து உள்ளது. #padmahazan
3). துலாம் லக்னத்திற்கு புதனும் சந்திரனும் இணைவது தர்மகர்மாதிபதி யோகமாகும் , இந்த இணைவு பாக்கிய ஸ்தானத்தில் உண்டாகும் போது ஜாதகர் கோவில் பணி , சிற்பகலை மாதிரியான செயல்களில் இருப்பார். கூடுதலாக இங்கே குரு தொடர்பு அறநிலையதுறை பணியாளர் ஆகவும் ஆக்கும்.
✨️ அரசு பதவி , பணிக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளும் நபர்கள் , அவயோக தசா & லக்ன பாவி நடக்கும் நிலையில் , இந்த தர்ம கர்மாதிபதி யோகம் இருக்கும் பட்சத்தில், அந்த அவயோக & லக்ன பாவி தசா கூட இந்த தர்மகர்மாதிபதி யோகத்தில் அரசு அதிகாரி தர்ம காரிய பொறுப்பு எளிதாக ஒருவரை பெற வைக்கும்.
✨️ அரசு பணிக்கான விதிகளான , லக்னம் லக்னாதிபதி 6 10 அதிபதிகள் வலுபெற்று , சூரியன் லக்னம் ராசிக்கு 2 10 இடங்களை தொடர்பு கொண்டு லக்ன யோக தசா அடுத்தடுத்த 40 ஆண்டுகாலம் service இருக்கும் வகையில் நல்ல காலமாக அமைந்தால் அரசின் கீழ் பணியாற்றும் நிலையை தரும். கூடுதலாக இந்த தர்மகர்மாதிபதி யோகமும் அமைந்தால் ,
✨️ NCC certificate & national level sports certificate இருந்தால் uniform service bonus points கிடைப்பதை போல தர்மகர்மாதிபதி யோகம் ஜாதகத்தில் எளிதாக வாய்ப்பை கைக்கு கொண்டு வரும். #padmahazan
🟢 மிக முக்கியமான கவனிக்க வேண்டியது 🟢
📢 சம்மந்தப்பட்ட 9 10 அதிபதியான தர்ம கர்ம அதிபதிகளது தசா இளம் வயதில் நடைமுறையில் இருப்பது அவசியம் , அப்போதுதான் அது நற்பலனை தரும்.
📢 அதே போல தர்மகர்மாதிபதி யோகத்தை சனி பார்க்க கூடாது , ராகு கேது இணைவை பெற கூடாது , தர்ம கர்ம அதிபதிள் நீசம் பகை அஸ்தங்க தோசம் பெற கூடாது.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY
WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment