பொதுவாக ஒவ்வொரு ஊரிலும் அவரவர்கள் வட்டார வழக்கில் சர்ப்ப தோசம், நாக தோசம், கிரகண தோசம் அப்படினு ஒவ்வொரு பெயரில் இந்த ராகு கேதுவினால் உண்டாகும் தோஷத்தை சொல்வார்கள்.
தோஷம் என்றால் குறை அல்லது பாதிப்பு என்று எடுத்து கொள்ளலாம்.
ராகு கேது தோசத்தில் மிக முக்கியமான இரண்டு நிலைகள்.
🟢 லக்னம் 🟢
1).லக்னத்தில் ராகு ஏழில் கேது,
2).லக்னத்தில் கேது ஏழில் ராகு,
3).லக்ன 2மிடமான குடும்ப ஸ்தானத்தில் ராகு எட்டில் கேது,
4). லக்ன 2ல் கேது எட்டில் ராகு,
சுருக்கமாக 1 2 7 8 இடங்களில் ராகு கேது இருப்பதை குடும்ப களத்திர பாதிப்பாக எடுக்கலாம்.
🟢 ராசி 🟢 #padmahazan
இதே அமைப்பு ராசிக்கும் சந்திரனோடு ராகு கேது , சந்திரனுக்கு 2ல் ராகு கேது இருப்பதையும் ராகு கேது பாதிப்பாக எடுக்க வேண்டும்.
🟢 சுக்ரன் 🟢
இறுதியாக சுக்ரனோடு ராகு அல்லது கேது இணைவதும் சுக்ரனின் இல்லற வாழ்வை குறை தரும்.
இது போன்ற நிலைகளில் ராகு கேது ஒரு ஜாதகத்தில் தொடர்பு கொள்ளும் போது அங்கே திருமணம், களத்திர சேர்க்கை, குடும்ப வாழ்க்கை சம்பந்தப்பட்ட தோசமாக இந்த ராகுவும் கேதுவும் இருப்பார்கள்.
🟢 பலன்கள் 🟢
1). சொந்தத்தில் வரன் அமையாது சொந்தத்தில் தான் வேண்டும் என்றால் வயது கடந்து கொண்டே போகும் , அல்லது அமைந்தாலும் ஒற்றுமை குறைவுபடும்.
2). திடீர் பாசம் அல்லது திடீர் வெறுப்பு காரணமாக குடும்ப வாழ்வில் நிம்மதி குறைவுபடும்.
3). போதுமான குடும்ப வாழ்வில் அனுசரித்து போகும் குணம் இங்கே ராகு கேதுவால் பாதிப்பை உண்டாகும்.
4). பொருளாதார ரீதியாக பண பொருள் பிரச்சனை எளிதாக குடும்ப அமைப்பில் பாதிப்பை தரும்.
குறிப்பாக இந்த ராகு கேதுக்களோடு
✨️சனி இணைவு பார்வை,
✨️செவ் இணைவு பார்வை,
✨️வீடு கொடுத்த கிரகம் நீசமாவது
போன்ற நிலையை பெற்றால் தாமத திருமணம் அல்லது திருமணம் நடந்தாலும் குடும்ப பிரச்சனை போன்ற நிலையை தரும்.
இந்த அமைப்பை குரு பார்த்தாலோ இணைந்தாலோ பாதிப்பு இன்றி ஜாதகர் சிறு சிறு பிரச்சனைகளோடு வாழ்வை திருமணம் குடும்ப அமைப்பில் நகர்த்திவிடுவார். #padmahazan
ராகு கேதுவிற்கு வீடு கொடுத்த கிரகம் நட்பு அல்லது லக்ன கேந்திர கோணத்தில் பகை நீசம் இல்லாமல் நின்றாலோ பாதிப்பு இருக்காது.
சர்ப்ப தோசம், நாக தோசம் என்று பல ஊர்களில் பல விதங்களில் எப்படி சொன்னாலும் அதற்கான பலன் ஒன்றுதான்...
🟢 வழிபாடு 🟢
ராகு கேது வழிபாட்டு ஸ்தலங்களான காளஹஸ்தி திருநாகேஷ்வரம் , துர்க்கை அம்மன் வழிபாடு சிவ ஆலய வழிபாடு பாதிப்பை குறைக்கும்.
மேலே சொன்ன மூன்று நிலைகளில் ராகு கேது ஒருவருக்கு லக்னத்திலும் ராசியிலும் சுக்ரனோடும் இணைந்து இருக்கும் பட்சத்தில் பாதிப்பு கூடுதலாக அமைந்துவிடும்.
உதாரணமாக,
லக்னத்தில் சுக்ரன் ராகு இருக்க , ஏழில் சந்திரனோடு கேது இணைய , லக்னம் ராசி சுக்ரன் அனைத்து அமைப்பும் ராகு கேது பிடியில் இல்லற வாழ்வை பாதிக்கவே செய்வார்கள்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment