Saturday, June 3, 2023

சூரியன் குரு தொடர்பு _ தந்தை செல்வாக்கு மற்றும் அதிகார பொறுப்பு

🍁 சூரியன் குரு தொடர்பு _ தந்தை செல்வாக்கு மற்றும் அதிகார பொறுப்பு 🍁 #hazan 

🟢 தந்தை செல்வாக்கு 🟢

சூரியனுக்கு குரு 1 5 9 7 இடங்களில் இருக்கும் போது அதாவது குருவோடு இணைந்த சூரியன் , குரு பார்த்த சூரியன் ஜாதகரது தந்தை செல்வாக்கு மிக்கவராக இருப்பார்.

ஜாதகரது தந்தை போதுமான பண புழக்கம் கொண்டவர் , தனமும் பொருளும் சேர்க்கும் எண்ணம் கொண்ட தந்தை.

சமூதாய அந்தஸ்து கொண்ட தந்தை , கிராய பஞ்சாயத்து தலைவர் , மன்ற தலைவர் , கவுன்சிலர் போன்ற அதிகார பொறுப்புகளை வகிப்பார்கள். ( அல்லது )

பணி சார்ந்த இடங்களில் உயர் பொறுப்பு , managing director, manager, சங்க தலைவர் , போன்ற தனக்கென தனி வேலையாட்கள் அல்லது கூட்டத்தை கொண்ட நபராக இருப்பார். தந்தை தனித்து செயல்படும் குணம் பெற்று இருப்பார். 

இவை சூரியன் குரு தொடர்பினால் உண்டாகும் பலன். இதை தந்தை ஸ்தானமான 9 இடத்தோடு தொடர்புபடுத்தி , தந்தை நிலையை அறிந்து கொள்ளலாம். 

ஒன்பதாம் பாவகம் அதிகபடியாக சுப கிரகங்களால் வலுபெற்ற நிலையில் , தந்தை மாநில கட்சி பணியிலோ , வங்கி துறை மேலாளராகவோ இருப்பார். #padmahazan

ஒன்பதாம் பாவகம் பாவ கிரகங்களால் பாதித்து வலு இழந்த நிலையில் , தந்தை சொந்த தொழிலில் வேலையாட்களை வைத்து விவசாயமோ சுய தொழிலோ செய்வார்.

🟢 ஜாதகரது அதிகார பொறுப்பு 🟢

தந்தை குணநலன் அந்த ஜாதகருக்கும் கடத்தபடும் , தந்தை போன்ற நிர்வாக அதிகார பதவியை அடைய வேண்டும் என்கிற உந்துதலை குரு பார்த்த இணைந்த சூரியனும் ஜாதகருக்கு தருவார்.

தந்தை போல நாமும் ஒரு நிலையான பெயர் புகழை பெற வேண்டும் என்கிற எண்ணம் இவர்களுக்கு இயல்பாகவே அமைந்துவிடும்.  

உதாரணமாக...

IAS பணியாளர் தேர்வில் தற்போதைய பணியில் உள்ள IAS அதிகாரிகளது மகனோ மகளோ தந்தை போலவே IAS IPS தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேரும் நிலைக்கு இது போன்ற கிரக நிலையே காரணம். 

ஜாதகரது தந்தை செல்வாக்கை குறிப்பவர் சூரியன் , அதே சூரியனே ஜாதகரது அதிகார பதவி புகழை குறிப்பவர். 

ஒரு அரசு அதிகாரி மகன் மீண்டும் அரசு அதிகாரியாக வருவது , ஒரு நிறுவன தலைவரது மகன் தந்தை மறைவிற்கு பிறகு அதே நிறுவனத்தின் பொறுப்பை நிர்வகிப்பது , அனைத்துமே இதில் அடங்கிவிடும். 

அதே போல 10 ல் சூரியன் அமைய பெற்றவர்களும் தந்தையின் தொழில் பதவி விரும்பி அதை தனக்கும் அமைத்து கொள்வார்கள்.padmahazan 

பின்குறிப்பு : 

மேலே சொன்ன பலன்கள் நன்றாக அமைய ஜாதகரது லக்னாதிபதி வலுபெற்று , லக்னமும் கெடாமல் , யோக தசா அல்லது யோக நட்சத்திர சாரம் பெற்ற தசா நடைபெற வேண்டும். இதில் ஒன்று குறைந்தாலும் பலன் மாறுபடும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY 
WHATS APP 8300 620 851

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...