✨️ ஒரே ராசியில் பிறந்த ஆணும் பெண்ணும் திருமண வாழ்வில் சேர்ந்து வாழும் நிலையை ஏக ராசி என்று சொல்வார்கள்.
✨️ ஏக ராசி என்பது கணவர் மேஷ ராசி என்றால் மனைவியும் மேஷ ராசியாக இருப்பார், கணவன் மனைவி இருவரும் ஒரே ராசியில் பிறந்துள்ளதால் இவர்களது மனம் ஒரே மாதிரியான குணத்தை கொண்டு இருக்கும்.
✨️ ஏக ராசியாக மேஷ ஆண் பெண் திருமணம் செய்யும் போது கணவன் மனைவி இருவருமே முன்கோபம் , தைரியமான முடிவை உடனடியாக எடுப்பது , சுற்றத்தார் உறவினர் சொந்த பந்த கூட்டத்தை விரும்புவது போன்ற இருவரும் ஒரே மாதிரியான குணம் பொதுவாக அமைந்துவிடும்.
✨️ ஒரே குணமும் பண்பும் வெளிபடும் போது கணவர் எடுக்கும் முடிவிற்கு மனைவியும் மனைவி எடுக்கும் முடிவிற்கு கணவரும் அனுசரித்து போக கூடிய குணத்தை கொடுத்துவிடும். #padmahazan
🟢 இதில் உள்ள பாதகம் என்ன..? 🟢
🎯 இருவரும் ஒரே ராசியாக அமைந்துவிட்டால் , கோட்சாரத்தில் உண்டாக கூடிய சுப பலன் அதிகபடியாக அந்த குடும்பத்தில் கிடைக்கும் , அதே போல கெடுபலனும் கூடுதலாக கிடைக்கும்.
🎯 உதாரணமாக கணவன் மனைவி இருவரும் ஒரே ராசியாகி , 11 ல் சனி போகும் கால கட்டம் கணவன் தொழில் லாபம் , அதிகபடியான பணபுழக்கம் , கொடுத்த பணம் கூட மீண்டும் கைக்கு வரும் , மனைவிக்கு வேலை முன்னேற்றம் , தந்தை வழி சொத்து சேர்க்கை அல்லது சகோதரர் வழியான பணம் ஆதரவு என ஏதாவது ஒரு வகையில் கணவன் மனைவி இருவருமே நன்றாக இருப்பார்கள்.
🎯 அதே போல ராசிக்கு ஒன்பதில் இருவருக்கும் ஒரே ஆண்டுகாலத்தில் வரும் போது வீட்டில் சுபகாரியம் , தெய்வ வழிபாடு , போன்ற சுப நிகழ்வுகளை நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
🎯 கெடுபலனாக , ஒரே ராசியை கொண்ட கணவன் மனைவிக்கு ஏழரை சனி கூடுதலாக குடும்பம் தனம் வருமானம் உடல் ஆரோக்கிய குறைபாடு என்ற ஏதோ ஓர் பாதிப்பை வலுவாக தரும் குறிப்பாக ஜென்ம சனி கால கட்டமான அந்த இரண்டரை வருடமும் கஷ்டகாலமாக இருவருக்குமே இருக்கும். அவர்களது ஜாதக தசா நன்றாக அமைந்தால் மட்டுமே ஒருவர் ஓரளவு சமாளித்து வருவார். #padmahazan
🎯 ராகு கேது பெயர்ச்சி பாதிப்பு , ஏழரை அஷ்டம கண்டக சனி பாதிப்பு கூடுதலாக மணவாழ்வில் கணவன் மனைவி பாதிப்பை ஒரே நேரத்தில் கொடுக்கும்.
🎯 கணவனும் மனைவியும் நட்பு ராசிகளாக அமையும் போத போதும் ஓரளவு பொருத்தமான நல்ல ராசி குணம் தரும். அவை
💐 மேஷம் ராசி _ சிம்மம் , தனுசு ராசி கொண்ட வாழ்க்கை துணை
💐 ரிஷபம் ராசி - கன்னி கும்பம் ராசி கொண்ட வாழ்க்கை துணை
💐 மிதுனம் ராசி _ துலாம் கும்பம் கன்னி ராசி கொண்ட வாழ்க்கை துணை
💐 கடகம் ராசி _ விருச்சிகம் மீனம் ராசி கொண்ட வாழ்க்கை துணை
💐 சிம்மம் ராசி _ தனுசு மேஷம் ராசி கொண்ட வாழ்க்கை துணை
💐 கன்னி ராசி _ மகரம் ரிஷபம் மிதுனம் ராசி கொண்ட வாழ்க்கை துணை
💐 துலாம் ராசி _ மகரம் கும்பம் மிதுனம் ராசி கொண்ட வாழ்க்கை துணை
💐 விருச்சிகம் ராசி _ தனுசு மீனம் சிம்மம் கடகம் ராசி கொண்ட வாழ்க்கை துணை
💐 தனுசு ராசி _ மீனம் மேஷம் சிம்மம் ராசி கொண்ட வாழ்க்கை துணை
💐 மகரம் ராசி _ ரிஷபம் கன்னி துலாம் ராசி கொண்ட வாழ்க்கை துணை
💐 கும்ப ராசி _ ரிஷபம் மிதுனம் துலாம் ராசி கொண்ட வாழ்க்கை துணை
💐 மீனம் ராசி _ தனுசு கடகம் விருச்சிக ராசி கொண்ட வாழ்க்கை துணை
அமையும் போது குணம் நட்பு ராசிகளாக அமைவதால் பெரிய கருத்து மோதலோ அல்லது கோட்சார கிரக அதிக படியான கெடுபலனோ ஒரே நேரத்தில் கணவன் மனைவி இருவருக்கும் வராது.
🎯 ஏக ராசி என்னும் ஒரே ராசி கொண்ட ஆண் பெண்களை பொருந்தம் பார்த்து வீட்டில் பார்க்கும் திருமணமாக இருக்கும் பட்சத்தில் சேர்க்க வேண்டாம். தவிர்க்கலாம். #padmahazan
🎯 ஏக ராசியை கொண்டவ ஆண் பெண்ணிற்கு இளம் வயதில் ஒருவர் ஒருவர் எண்ணம் ஒரே மாதிரியாக அமைவதால் எளிதாக காதல் வரும் , வேற்றுமை கடந்த ஈர்ப்பை கொடுக்கும். அப்படிப்பட்ட காதல் திருமணம் ஆக இருக்கும் பட்சத்தில் இந்த ஏக ராசியை சேர்க்கலாம், அவர்களது விதிப்படி அப்படிதான் அமைய வேண்டும் என்று இருக்கும்.
📢📢📢 மேலே சொன்ன ஏக ராசி பற்றிய தகவல் குணமும் பண்பை மட்டுமே குறிக்கும் தவிர கணவன் மனைவி ஒட்டு மொத்த இல்லற வாழ்வின் இது மட்டுமே தீர்மாணிக்காது. கணவன் மனைவி ஜாதக குடும்ப ஸ்தானம் , புத்திர ஸ்தானம் , மாங்கல்ய ஸ்தானம், தொழில் ஸ்தானம் ,குரு சுக்ரன் மற்றும் ஏழாம் அதிபதி பொறுத்துதான் ஒட்டு மொத்த வாழ்வும் அமையும்.📢📢📢