பதில் :
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
ஏன் நடக்காது..? அதெல்லாம் நடக்க வேண்டும் என்று இருந்தால் நிச்சயமாக நடக்கும்.
சிலருக்கு பலன் சொல்லும் போது சொல்லி இருப்பேன்,
" பெண்ணிற்கு நடக்கும் அஷ்டம சனியிலேயே திருமணம் ஆகிவிடும் தள்ளி போட முடியாது " என்று சொல்லி இருப்பேன்.
காரணம் அங்கே ஏழாம் அதிபதி சுக்ரனோடு இணைந்து பாக்கிய வீட்டில் நன்றாக அமைந்து யோக தசாவில் அந்த ஏழாம் அதிபதி புத்தி நாதராக வந்து விடுவார்.
காரணம் கோட்சார ஏழரை அஷ்டம சனி தரும் கெடுபலனை விட கூடுதலாக அவர்களது ஜாதகத்தில் லக்னம் லக்னாதிபதி தசா புத்தி வலுவாக கொடுக்க வேண்டியதை அனுபவிக்கும் நிலையில் அமைந்து இருக்கும்.
ஏழரை சனியில் கொடுமையான ஜென்ம சனியின் காலத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நன்றாக நடந்து முடிந்தவர்களும் உண்டு,
அஷ்டம சனியில் தொழில் தொடங்கி நஷ்டமின்றி தொழிலை நடத்துபவர்களும் உண்டு.
சிறு சிறு தடங்கள் நினைத்தபடி அப்படியே நடக்காமல் கிடைத்த பின் உண்டாகும் சந்தோசம் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம் இத்தகைய நிலையில்,
ஏழரை அஷ்டம சனி காலத்தில் ஜாதகம் நன்றாக இருந்து , தசா புத்தி யோகமாக அமைந்துவிட்டால் , அங்கே நடக்க வேண்டிய சுப பலன் பிரச்சனைகளுக்கு இடையே நடந்தே தீரும்.
கிடைக்க வேண்டியது கிடைத்து விடும்.
பத்மஹாசன் சொல்லிடார் என்று ஏழரை அஷ்டம சனி நடக்கும் அனைவரும் "எனக்கு நல்லதே நடக்கும் " அப்படினு அதிகபடியான தன்னம்பிக்கையில் அவயோக தசா புத்தியில் மனப்பால் குடிச்சிட்டு காரியத்தில் கோட்டை விட வேண்டாம்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment