1 மற்றும் 7 ல் ராகு கேது,
2 மற்றும் 8 ல் ராகு கேது இருப்பவர்களுக்கு
அதே போல 1 ல் 7ல் ராகு கேது, 2 ல் 8ல் ராகு கேது இருப்பவர்களை சேர்த்து திருமணம் பண்ணி வைக்கலாம் என்பதை ஒரு சக ஜோதிட நண்பரிடம் முன்னால் பேசும் போது கேட்டேன்,
2018 வருடம் இருக்கும்,
அப்போது இந்த அளவிற்கு ஜோதிடம் கூட எனக்கு அப்போது தெரியாது.
அவருக்கு எனது ஜோதிட ஆர்வத்தையும் அப்போதைய ஜோதிட அறிவையும் நன்கு தெரிந்தவர்,
" சொல்கிறேன் தெளிவா கேட்டுக்கோ " என்று சொன்னார்.
" 1 7 ல் சர்பம் , 2 8 ல் சர்பம் இருப்பது குடும்ப வாழ்வில் குழப்பத்தை , கணவன் மனைவி இடையே நிம்மதி இழப்பு , அன்னோன்ய குறைபாடு , எதிர்பார்ப்பு ஏற்ப திருப்தியோ அதிருப்தியோ அடிக்கடி வரும்,
இருவருக்குமான பண புழக்கம் பேச்சால் பிரச்சனை மாதிரியான பாதிப்பை தரும்,
இதில் 1 7 2 8 ல் ராகு கேது இல்லாத ஒருவரிடம் இவர்களை சேர்த்து வைத்தால்,
நல்ல ஜாதகம் இருக்கும் அவருக்கு இந்த ராகு கேது இருக்கும் நபரால் தனிபட்ட அவரது வாழ்க்கை பாதிக்கும், நல்ல ஜாதகத்தை கொண்ட அவங்க ஏன் இவங்களோட போராடனும்,
அதான் 1 7 2 8 ராகு கேது உள்ளவர்களை இருவரையும் சேர்த்து வைத்தால், இவங்க குள்ளேயே அந்த சர்ப பாதிப்பு இருக்கும்.
1 7 2 8 ல் ராகு கேது இல்லாத நபர் எதற்கு இதில் மாட்டி கொண்டு விழி பிதுங்கனும்..?
அதோடு அந்த செவ்வாய் உண்டாகும் தோசமும் மேலே சொன்ன மாதிரிதான் " என்று சொன்னார்.
என் கருத்து ~
" 1 7 2 8 ல் ராகு கேது இருந்தால் குரு பார்வை அல்லது வீடு கொடுத்த கிரகம் வலுவாக இருந்தால் பாதிப்பு குறைவு தான். "
No comments:
Post a Comment