Saturday, December 24, 2022

கணவன் மனைவி சுப பிரிவு

🍁 கணவர் மனைவி சுப பிரிவு 🍁 #hazan 

கணவர் மனைவி இடையே பிரிவு என்பதனை சுப பிரிவு அசுப பிரிவு என்று கூறலாம். 

சுப பிரிவு என்பது தொழில் அல்லது வேலை காரணமாக கணவனோ மனைவியோ தூர தேசங்களில் வெளிநாடுகளில் வாழ்வதை குறிக்கும். 

கீழே கொடுக்கபட்டுள்ள உதாரண ஜாதகங்கள் முதல் ஜாதகம் பெண் ஜாதகம் , இரண்டாவது ஜாதகம் ஆண் ஜாதகம். 

சில காரணங்களுக்காக ராசியும் தசா விபரமும் இல்லாமல் பதிவிட்டு உள்ளேன். #padmahazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 


பெண் ஜாதகத்தில் கணவரை பிரிந்து இருப்பதற்கான காரணன் என்ன..? 

தனுசு லக்னம். 

1). ஏழாம் அதிபதியான புதன் நீச சூரியனோடும் ராகுவோடும் இணைந்து கடுமையான பாவத்துவ நிலையில் உள்ளார். ராகுவோடு 8 டிகிரிக்குள் இணைவு. ஏழாம் அதிபதி வலுஇழக்கிறார். 

2). களத்திர காரகன் சுக்ரன் 12 ல் சனி பார்வை மற்றும் செவ்வாய் இணைவில் உள்ளார். இரு பாவர்களோடு தொடர்பில் சம வீட்டில் உள்ளார். 

3). சுக்ரன் குரு இணைவு. 

4). ராசிக்கும் ஏழாம் அதிபதி எட்டில் மறைவு.  

5). துலாமும் நீச சூரியன் ராகு இவர்களோடு இணைந்த புதனோடு துலாமும் பாவகம் பாதிக்கிறது. 

5). தனுசு லக்னத்திற்கு வர கூடாத சுக்ர தசா சனி செவ்வாய் குரு தொடர்பில் நடந்து கொண்டு உள்ளது. 

குடும்ப ஸ்தானமான மகரத்தை வேறேந்த சுப கிரகமும் பார்க்கவில்லை, ஏழாம் வீட்டை சுப கிரகங்கள் பார்க்க வில்லை, 

இதெல்லாம் கணவரை பிரிந்து இருப்பதன் காரணமாக உள்ளது. 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

இரண்டாவதாக இருப்பது கணவரின் ஜாதகம்... #padmahazan 

1). மனைவியை குறிக்கும் ஏழாம் அதிபதியான புதன் எட்டில் மறைகிறார். அவருக்கு சனியின் பத்தாம் பார்வை. 

2). ஏழாம் வீட்டில் அரை பாவரான சூரியனும் முக்கால் பாவரான செவ்வாய் இணைந்து சுப தொடர்பு இன்றி ஏழாம் வீட்டை பாதிக்கிறது. 

ஏழாம் அதிபதி மறைந்து பாதிக்கிறார் , ஏழாம் இடமும் பாதிக்கிறது. 

3). குடும்ப ஸ்தான அதிபதி சனி கேதுவோடு இணைவு. குடும்ப தோசம். 

4). துலாத்தில் சனி கேது இணைவு. 

இவ்வளவு அமைப்பும் கெட்டும் கணவனும் மனைவியும் வெவ்வேறு நாட்டில் மன ஒற்றுமையோடு வாழ காரணம் என்ன..? 

1). லக்னம் இருவருக்கும். தனுசு. லக்னம் ஒத்த குணம் கொண்ட பொருத்தம் அமைகிறது. 

2). ராசிக்கூட இருவருக்கும் நட்பு ராசிகளாகி 5 9 ஆக அமைந்துவிட்டது. ( பதிவிட வில்லை). 

3). சுக்ரனுக்கு 6 12 மறைவில்லை என்பது இங்கே மிகப்பொருத்தமாக உதாரண காட்ட முடியும். இதே சுக்ரன் இருவருக்கும் 3 8 ஆக அமைந்து இருந்தால் வெளிநாட்டு வேலையை காரணம் காட்டியே வாழ்வை பிரித்து தனி தனியாக போக வைத்து இருக்கும். 

ஆண் ஜாதகத்தில் ஆறில் இருக்கும் சுக்ரனுக்கு எந்த பாவ கிரக தொடர்பும் இன்றி ஆட்சியாக உள்ளார். 

கணவனும் மனைவியும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழும் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி லக்ன கேந்திர கோணமாக அமைந்து சுப பார்வை இருந்து அல்லது சுப ராசிகளில் அமைந்து, 

சுக்ரன் பாவத்துவமின்றி அமைந்து இருக்கும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...