Sunday, December 18, 2022

சொந்த தொழில் செய்வதற்கான கிரக அமைப்பு

🍁 சொந்த தொழில் செய்வதற்கான கிரக அமைப்பு 🍁 #hazan

சில மாதங்களுக்கு முன்பாக வந்த ஜாதகங்கள் , கிட்டத்தட்ட இதே மாதிரியான முன் பின் ஆக பிறந்த நான்கு ஐந்து ஜாதகங்களை பார்த்து பலன் சொல்லி இருக்கேன்.

அனைவருமே சொந்த தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

ஆயிரமோ..? ஐநூறோ..? லட்சமோ..? எவ்வளவு லாபமாக வந்தாலும் தொழிலை மட்டுமே செய்யும் ஜாதகம் இவை. வேலைக்கான அமைப்புகளே கடுமையான பாதிக்கபட்டு இருக்கும்.

அதில் ஒரு ஜாதகத்தை கீழே பதிவிட்டு உள்ளேன். 


கன்னி லக்னம் , மீன ராசி. உத்திரட்டாதி. 

ஜாதகரது லக்னாதிபதி புதன் லாப ஸ்தானத்தில் இருப்பதும், 

அதே புதன் தொழிலை தரும் பத்தாம் அதிபதியாகி லாப ஸ்தானத்தில் இருப்பதும்,

பத்தாம் இடத்தில் சூரியன் திக் பலத்தோடு இருப்பதும்,

( சூரியனுக்கு பத்தாம் கேந்திரம் நீடித்த வருமானத்தை அனுபவிக்க வைக்கும் ஏற்ற இடமாகும்)

லாப ஸ்தான அதிபதி சந்திரன் வாடிக்கையாளரை குறிக்கும் ஏழில் நின்று அதே ஏழாம் அதிபதி பார்வை பெறுவதும், #padmahazan 

ராசிக்கு பத்தாம் அதிபதி குரு ராசிக்கு ஏழில் இருந்து ராசியை பார்த்து, 

ராசிநாதன் குரு ராசிக்கு ஏழாம் இடமான வாடிக்கையாளரை குறிக்கும் ஏழில் நின்று, 

ராசிக்கு பத்தாம் இடத்தை சூரியனும் பார்வை செய்கின்றனர். 

ராசிக்கு லாப வீட்டை புதனும் பார்வை செய்கிறார். 

லக்னமும் ராசியும் 7 10 11 இட தொடர்போடு உள்ளது.

இவர் பிறந்தது, சனி தசாவில் 16 வயது வரை சனி தசா முடிந்து, 

தற்போது லாபத்தில் இருக்கும் புதன் தசா நடக்கிறது, 

அதனை அடுத்ததாக பாக்கியாதிபதி சுக்ரனோடு இணைந்து குரு பார்த்த கேது தசா, 

அதற்கு அடுத்ததாக தன பாக்கியாதிபதி யான யோகாதிபதி சுக்ரனின் தசா, 

அதனை அடுத்த பத்தாமிட சூரிய தசா, 

அதனை அடுத்ததாக லாபாதிபதி சந்திர தசா, என வருவதும், #padmahazan 

சுக்ர கேது தசாக்கள் லாபாதிபதி சந்திரன் சாரம் பெறுவது தொழில் ரீதியாக நன்மை.

இது போன்று பத்தாம் இடம் வலுபெற்று எந்தவித சனி செவ் தொடர்பு இன்றி அடுத்தடுத்த யோக தசாக்கள் வரும் போது ஒருவர் சொந்த தொழில் செய்யும் நிலையை தரும்.

இவருக்கு வேலைக்கு போகும் எண்ணமே சுத்தமாக கிடையாது. காரணம், 

லக்ன ராசிக்கு ஆறில் சனி ஆட்சி பெற்றும் செவ்வாய் நட்பு வலுவோடு நேருக்கு நேராக பார்த்து கடன் நோய் எதிரி சாய்ந்த ஆறாம் இடத்தை பலவீனபடுத்துகின்றனர். 

சரிங்க, இதே கிரக நிலையில் இந்த சனி தசா , செவ்வாய் தசா, ராகு தசா வந்தால் என்ன பலன் என்று கேட்டால், 

தொழில் செய்வார் அது நிறைவான லாபத்தையோ நிம்மதியோ தராது. 

தொழிலை கவனிக்க முடியாதபடி வேறு தொந்தரவுகளை ஜாதகருக்கு தரும். 

இளம் வயதில் சனி தசா முடிந்தது கூட ஒருவகையில் நன்மையே. 

பின்குறிப்பு: 

ஒரு சில நாட்களில் அனைத்து கிரகமுமம் ஏதோ ஒரு விதமான தொழிலோ வேலையோ மண வாழ்க்கை சார்ந்த நன்மை தீமையோ அதிகபடியாக தரும், 

அந்த நாளில் பிறந்த வெவ்வேறு லக்ன ஜாதகம் கூட நம்மிடம் பலன் கேட்க வரும்,

அப்போது ஜோதிடம் எவ்வளவு நுட்பமானது என்பதை உணர முடியும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...