பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த குழந்தை ஏதோ உடல்நல பாதிப்பு காரணமாக பெற்றோர்கள் இழப்பது என்பது மிக கொடுமையான மன வேதனையை தகப்பனை விட தாயாருக்கு கொடுக்கும்.
கீழே கொடுக்கபட்டுள்ளது பெண்ணின் ஜாதகம்.
பெற்ற குழந்தையால் மூன்று மாதத்தில் புத்திர சோகத்தை கொடுத்த கிரக நிலை...
புத்திர காரகன் குரு நீசம்.
புத்திர ஸ்தான அதிபதி கேதுவோடு இணைவு.
ஆண் வாரிசை குறிக்கும் புத்திர 8காரகன் நீசமாவது என்பது ஆண் வாரிசு சார்ந்த வலு ஜாதகமாக இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஐந்தாம் அதிபதி சனி கேதுவோடு இணைவது என்பது, ஏழாமிட மாரக கேதுவின் மாரக கர்மத்தோடு சனி இணைகிறார் என்பதால்,
கேது புத்திர காரகன் குருவின் வீட்டில் , புத்திர ஸ்தான அதிபதியான சனி இணைவு என்பது குழந்தை சார்ந்த கர்மத்தை வைத்து உள்ளார் என்பதை உணர்த்துகிறது.
சம்மந்தப்பட்ட நிகழ்வில் இவருக்கு குரு தசாவில் சனி புத்தி...
புத்திர ஸ்தானமும் மாரக ஸ்தானமும் பரிவர்த்தனை பெற்று, இங்கே குரு நீசமும் சனி கேது இணைவும் புத்திர சோகமும் கொடுத்து உள்ளது.
இதே கிரக அமைப்பில் பிறந்த அனைவருக்கும் புத்திர சோகத்தை தருமா..? என்றால்
இல்லை
குரு தசாவில் சனி புத்தி வந்ததாலே இந்த பலன்...
வேறு தசா நடந்தாலோ , அல்லது கணவருக்கு புத்திர பாக்கியம் சிறப்பாக நடந்தாலோ பாதிப்பை தராது.
சம்மந்தப்பட்ட இவரது வாழ்க்கை துணைக்கு இதே போலான வேறு கிரக பாதிப்பில் புத்திர ஸ்தானம் அமைந்து இருந்தது. அவருக்கும் பாதிக்கபட்ட புத்திர ஸ்தான அதிபதி சம்மந்தப்பட்ட தசா புத்தி ஒருங்கே அமைந்ததால் பாதிப்பு தந்து உள்ளது.
கன்னி லக்னத்தில் பிறந்த இவருக்கு இந்த பலனை தந்த இந்த கிரக அமைப்பு ,
ஒரு வேளை சிம்ம லக்னத்தில் பிறந்து இருந்தால் தந்தையை பாதித்து இருக்கும், பின்னர் அவரும் நன்றாக வந்து இருப்பார்.
துலா லக்னத்தில் பிறந்து இருந்தால் குழந்தைக்கு உடல் பாதிப்போடு சிறு உடல்நல பிரச்சனை கொடுத்து தாய் தந்தையோடு சேர்த்து இருக்கும். மற்றும் இந்த ஜாதகி தாயாரை உடல் நலம் பாதித்து பின் நன்றாக வந்து இருப்பார்.
எல்லாம் ஓகேங்க... கன்னி லக்னமாக வந்ததால் இந்த மாரகத்தை குழந்தைக்கு தந்தாரா..? என்றால்
ஆமாம்.
கன்னி லக்னத்திற்கு குரு மாரகாதிபதி பாதகாதிபதி,
துலாத்திற்கோ சிம்மத்திற்கோ அத்தகைய கொடிய கெடுபலனை குரு தரமாட்டார்.
சரிங்க அந்த பரிவர்த்தனை தான் மறைமுக ஆட்சி வலுவை சனிக்கும் குருவிற்கும் தருகிறதே..? அப்ப ஐந்தாம் அதிபதி ஐந்தில் ஆட்சி பெற்று குழந்தையை காப்பாற்றி இருக்கனுமே.., என்று நீங்கள் நினைக்கலாம்.
இங்க பிரச்சனையே அதான்...
இந்த மாரகாதிபதியான குரு ஐந்தாம் இடத்தோடு நீச பரிவர்த்தனையாக வந்ததுதான் பிரச்சனையே. இவ்வளவு பாதிப்பிற்கும் அந்த பரிவர்த்தனையே காரணம்.
வெறும் நீசம் மட்டுமே குரு பெற்றாலோ , அல்லது சனி கேதுவோடு இணைந்தாலோ பாதிப்பு கிடையாது, இரண்டும் நடந்து பரிவர்த்தனையாக உள்ள நிலையில்
தசா புத்தி அதற்கு ஏற்ப குரு தசா சனி புத்தி வந்ததும் பிரச்சனை.
நீச பரிவர்த்தனை என்பதே விபரீதமான பரிவர்த்தனையாகதான் செயல்படும்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால், சம்மந்தப்பட்ட பெற்றவர்கள் குழந்தை ஜாதகத்தை கொடுத்து உங்கள் கணிப்பை சொல்லுங்க என்று கேட்ட நிலையில், நிகழ்வு நடப்பதற்கு முன்,
நடக்க போவது அவரவர் விதிபடி, நம் கை மீறி நடக்க போவதை கணிக்க முடிந்த என்னால் ,
" குழந்தையை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் " என்றுதான் சொல்ல முடிந்தது.
ஜோதிடத்தில் இது போன்ற இக்கட்டான சூழலில் என் தூக்கத்தை இழந்து மன வேதனையை கொடுத்த சில ஜாதக கிரக அமைப்பும் உண்டு .
முதல் குழந்தை ஐந்தில் நீசமான மாரகாதிபதி நின்று, பரிவர்த்தனையாக கெடுபலனை தந்து போனதால், சனி புத்தி பரிவர்த்தனையாக ஐந்தில் புத்தி நடத்துவதால்,
புத்தி முடியும் நாளிற்குள் மற்றொரு பெண் குழந்தையை கொடுத்தே சனி செல்வார்.
இதுவே நீச பரிவர்த்தனை பலன்.
பரிவர்த்தனை என்பது மேலோட்டமாக ஆட்சிக்கு நிகரான வலுவை அந்த கிரகம் பெறுகிறது என்று சொல்லபட்டாலும் அந்த பரிவர்த்தனை எத்தகைய பலனை செய்ய போகிறது என்பதை கணிப்பதில் கூடுதல் கவனமாக இருப்பது மிக அவசியம்.
ஆட்சிக்கு நிகரான சுப பலனா..? கெடுபலனா...? என்பதை தீர்க்கமாக எடுப்பது ரொம்ப முக்கியம்.
PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851
No comments:
Post a Comment