Sunday, December 18, 2022

ரயில்வே பணியாளர் ஜாதகம்

🍁 ரயில்வே பணியாளர் ஜாதகம் 🍁 #hazan 

கடந்த மாதத்தில் ரயில்வே கடைநிலை பணியாளருக்கான ஜாதகம் மற்றும் அலுவலக பணியாளர், உயர் அதிகாரி ஜாதகங்களை பதிவிட்டு விளக்கமாக சில பதிவுகளை எழுதி இருந்தேன். 

இன்று ரயில்வே பணியாளர் station master ஆக பணியாற்றும் ஜாதகத்தை பார்க்கலாம். 

கீழே கொடுக்கபட்டுள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள். 

துலா லக்னம் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம். #padmahazan 


லக்னாதிபதி சுக்ரன் சுக ஸ்தானமான நான்கில் பாக்கியாதிபதி புதனோடும் சூரியனோடும் இணைந்து உள்ளார். 

இவர்களுக்கு வீடு கொடுத்த சனி மற்றொரு ராசியில் மூலத்திரிகோண வலுவோடு உள்ளார். 

சூரியன் சுக்ரன் மற்றும் புதனை அஸ்தங்க படுத்தி தான் அதிகபடியாக வலுவோடு பத்தாம் வீட்டை பார்க்கிறார். 

லக்னத்திற்கு பத்தாம் வீட்டை சூரியன் பார்த்து அரசு சார்ந்த வேலையாக இருப்பதை தருகிறார். 

லக்னத்தில் ஆறாம் அதிபதி குரு எந்த வித பாவ கிரக தொடர்பும் இன்றி லக்னத்தில் இருப்பதும், 

ராசிக்கு ஆறாம் அதிபதி சந்திரன் ராசியில் இருப்பதும், 

ராசிக்கு பத்தில் ராகு இருக்க அந்த ராகுவை சனியும் பார்க்கிறார்.

லக்ன ராசிக்கு பத்தாம் இடத்தோடு சூரியனும் சனியும் தொடர்பு கொண்ட ஜாதகம். 

பலருக்கு தோன்றலாம்..? 

சிம்மத்தை சனி பார்த்தால் அரசு வேலை அமையாதே..? இங்கே சிம்மத்தை சனி பார்க்கிறாரே..? என்றால், 

அரசு அதிகார பதவியான பலருக்கு அதிகாரம் செய்யும் பதவிக்கு தான் சிம்மத்தை சனி பார்க்க கூடாது. 

இவரது பணி, 

ரயில் வரும் போது கொடி காட்டி, சிக்னல் தருவதே, கொடி காட்டி சிக்னல் தருவதற்கு இந்த சூரியன் வலுவே போதுமானது. 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...