Saturday, December 24, 2022

குழந்தைகளின் வாழ்வில் கர்மா

🍁 குழந்தைகளின் வாழ்வில் கர்மா 🍁 #hazan 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

ஜோதிட ரீதியாகவும் கர்மா ரீதியாகவும் பல பதிவுகளை உங்களுக்கு கொடுத்த எனக்கு , அந்த வரிசையில் குழந்தைகள் வாழ்வில் கர்மா எப்படி செயல்படுகிறது என்று சொல்கிறேன். 

ஏற்கெனவே சில பதிவுகளில் மேலோட்டமாகவும் , தனிபட்ட முறையில் பலன் கேட்டவர்களுக்கு இதை பற்றியும் சொல்லி இருப்பேன். இங்கே அனைவருக்கும்...

கர்மா என்பதனை தனிபட்ட ஒரு ஆன்மா சேர்ந்த நல்ல கெட்ட வினை பயனை கொண்டு பிறப்பெடுத்த பின்பு அனுபவிக்க போக இருக்கும் நிலையை குறிக்கலாம். 

அதே போன்று அந்த ஒரு ஆன்மா சேர்ந்த கர்மாவை போலவே பரம்பரையில் மூதாதையர் செய்த கர்மாவையும் அந்த ஆன்மா சேர்த்து வைத்து இருக்கும்.

கடந்த சில பதிவுகளில் எழுதி இருந்தேன், ஐந்தில் சூரியன் இருந்து அதை குரு பார்க்க பாட்டனை போல மகன் பிறப்பான் என்று, அது பாட்டனே மகனாக பிறப்பதையும் குறிக்கும். அந்த பாட்டனின் தொழிலும் அவரது வாழ்க்கை சூழலும் கொள்ளு பேரனிற்கு வருவதே கர்ம தொடர்பு.

இதை தர்க்கரீதியாக பார்த்தால் , புரிந்து கொள்ள இயலாது. தெரிந்து கொள்வோம் என்று முயற்சித்தால் அனுபவத்தில் சரியாக வரும்.

சரி நேராக விஷயத்திற்கு வருவோம்...

ஒரு ஆணோ பெண்ணோ ஒரு குழந்தையை வளர்க்கிறார்கள். அந்த குழந்தையை வளர்ந்த பிறகு, 

பெற்றவர்கள் சொல்லும் வழியில் வேலையோ தொழிலோ செல்ல வேண்டும் என்பது பெரும்பாலான பிள்ளையை பெற்ற பெற்றவர்களது எண்ணமாக இருக்கும்.

காரணம் இத்தனை வருடங்களாக பாத்து பாத்து வளர்த்த குழந்தை எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் ஆசை அனைவருக்கும் உண்டு.

ஆனால், 

பிள்ளைகளுக்கும் ஒரு கர்மா உண்டு என்பதை இவர்களது பாசமும் ஆசையும் கண்களை மறைத்துவிடுகிறது...

ஒரு தந்தை மகனை கலெக்டராக வர வேண்டும் என்று நினைப்பது , அவரது மகன் மீதான அக்கறை பாசத்தின் வெளிப்பாடு. 

ஆனால் மகனிற்கு சொந்தமாக தொழில் நடத்தி பெரிய அளவில் பொருளாதார ரீதியாக தன்னை நிலைபடுத்தி கொள்ள வேண்டும் என்று நினைப்பார். காரணம் இங்கே இவரது கர்மா தொழிலை நோக்கி நகர்த்தும்.

தற்கால உளவியலும் , சினிமாவும் இதை குழத்தைகளுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதை செய்யவிடுங்க என்று வேறு விதமான அனைவருக்கும் ஏற்று கொள்ளும் விதமாக சொல்லி விடுகிறது.

ஜோதிடத்தில் எங்கேயும் நான் எவருக்கும் " இதை பண்ணுங்க " என்று உறுதிபட சொல்ல மாட்டேன்.

ஒரு option ஆகவே சிலவற்றை சொல்வேன். Option ஆக பரிந்துரைப்பேன். விருப்பம் இருந்தால் தேர்ந்தெடுங்கள் என்பதை போல, 

பையனை என்ன படிக்க வைக்கலாம்..? என்ற கேள்விக்கு

பெரும்பாலான ஜாதகங்களுக்கு அவருக்கு பிடித்தமான படிப்பையோ தொழிலையோ சொல்லிவிடுவேன். 

சில இடங்களில் வர போகும் தசா ஏற்ப பையனின் எண்ணமும் ஆர்வமும் கிரகங்கள் மாற்றும், 

பொறுத்தமான ஒன்றை தேர்ந்தெடுத்து சொன்னாலும், அடுத்தடுத்த தசா கெடுபலனை தர வேண்டும் அல்லது முன்னேற்றம் இல்லாத வகையில் அமைய வேண்டும் என்று இருந்தால் அதற்கு ஏற்ப படிப்பும் தொழிலும் அமைத்து கொடுக்கும் வர போகும் அவயோக தசாக்கள் . 

" பாழாங்கிணற்றில் தான் குதிப்பேன், 

அதுவும் தலை கீழாகத்தான் குதிப்பேன் " 

என்பவர்களது விதியை தீர்மானிக்கும் கர்மாவை யாரால் மாற்ற முடியும்..? 

அதே போல குழந்தை எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்றால் பெற்றவர்கள் குழந்தை எதிர்காலத்தை கண்டுக்காமல் இருந்தால் கூட அந்த குழந்தையின் கர்மா நல்ல எண்ணத்தை தொழிலை வேலையை அந்த குழந்தைக்கு ஏற்படுத்தி கொடுக்கும். 

தாய் தந்தை ஆலோசனையோ வழிகாட்டலோ இல்லாமல் கூட கர்மா வழிவிடும். 

PADMAHAZAN SRI VISHNU ASTROLOGY WHATS APP 8300 620 851 

#padmahazan

No comments:

Post a Comment

நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..?

🍁 நீசபங்கமா..? நீசபங்க ராஜயோகமா..? 🍁 #hazan  ⚡️ஓர் கிரகம் நீச வீட்டில் ஓர் கிரகம் இருந்தாலே அது ஏதோ ஓர் வகை நீசபங்கம் பெற்று விட்டது முடிவ...